விஜயின் தற்போதைய அரசியல் கூட்டணி,அதிமுக மற்றும் பிஜேபியின் கூட்டணியால், திமுக மற்றும் அதனுடைய கூட்டணி கட்சிகள் இப்போதே கதற தொடங்கிவிட்டது.

அந்த வகையில் திருமாவளவனின் கதறல் சத்தம் அதிகம் கேட்கிறது . அதாவது விஜய் பாஜகவை கொள்கை எதிரி என்றார். திமுகவை எதிரி என்றார். இப்போது பாஜகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டால், தமிழ்நாட்டில் மொத்த கதையும் முடிந்து விடும் போல இருக்கே என்று இப்போதே இந்த கதறல் சத்தம் கேட்ட தொடங்கிவிட்டது.

அது மட்டுமல்ல, விஜயை ஏன் கைது செய்யவில்லை? இப்படி கூட்டணி கட்சிகள் தான், திமுகவுக்காக பேசிக் கொண்டிருக்கிறது. திமுக தற்போது அதிகம் பேசவில்லை. காரணம் ஊழல் வழக்குகளில் சிக்கிக் கொண்டிருப்பதால், பாஜகவை அதிக விமர்சனம் செய்வதற்கு தயக்கத்திலே இருக்கிறது.

திமுகவின் ஆட்சியின் அதிருப்தியில் உள்ள மக்கள் ஒரு பக்கம், இன்னொரு பக்கம் இந்த கூட்டணி பலமாக அமைந்து விட்டால், நம்முடைய வெற்றி வாய்ப்பு நிச்சயம் கேள்விக்குறியாகும் என்பதில் திமுக அதை கணித்து விட்டது. இப்போது இந்த கூட்டணி அமைய விடக்கூடாது என்பதில் ஒரு பக்கம் காங்கிரஸின் ராகுலை வைத்து முயற்சி செய்து பார்க்கிறார்கள் .

அதற்கு என்னென்ன வழிகளில் இடம் கிடைக்கும் ?என்ற ஒரு கேள்வியை தான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இப்போது எதிர்க்கட்சிகள் உஷாராகி விட்டார்கள். ஒரு பக்கம் எடப்பாடி பழனிசாமி அதிமுக, பாமக, பிஜேபி, மற்றும் தமிழக வெற்றி கழகம், இதனுடைய ஒருங்கிணைப்பு வேலைகளை செய்ய ஆரம்பித்து விட்டார்.

இது திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு, தேர்தல் பயத்தையும் உருவாக்கி இருக்கிறது என்கிறார்கள் எதிர்கட்சியினர் . மேலும்,தற்போது விஜயை பற்றி தான் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கவலைப்படுகிறது. ஏனென்றால், அதிமுக, பிஜேபி ,பாமக, தமிழக வெற்றி கழகம், இந்தக் கூட்டணி பலமான கூட்டணி ஆக தமிழ்நாட்டில் மாறிவிடக்கூடாது. இதற்காகத்தான் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் என்னென்ன அவதூறுகள் பரப்ப முடியுமோ அத்தனையும் செய்வார்கள்.

அடாவடித்தனம், ரவுடி தனம், இது அத்தனையும் கைவந்த கலை திமுகவுக்கு !அதன் எதிரொலியாக தற்போது,விஜய்க்காக யாரெல்லாம் பேசுகிறார்களோ, யூடியூபில் அவர்களையெல்லாம், கைது செய்து வருகிறது .

மேலும்,யூ டியுபர்களில் கொஞ்சம் மனசாட்சி உள்ள நபராக நான் பார்த்தவரை பேசிக் கொண்டிருப்பார் நேதாஜி மக்கள் கட்சி நிறுவனர் மற்றும் முன்னாள் காவல்துறை அதிகாரி வரதராஜன் அவர்களை கைது செய்திருப்பது அரசியல் உள்நோக்கம் தான். அவர் உண்மையை வெளிப்படையாக பேசக் கூடியவர். இது பத்திரிக்கை துறைக்கு அச்சுறுத்தலாக தான் இருக்கிறது. இது தவிர,

புதிய தலைமுறை சேனல் முடக்கி இருக்கிறார்கள். இன்னும் சிலரை கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல். வரதராஜன் கைது நீதிபதியை விமர்சனம் செய்ததாக அவரை கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. நாட்டில் நீதிபதிகளை விமர்சனம் செய்யக் கூடாது என்று எந்த சட்டமும் இல்லை. இது அவர்களாக உருவாக்கிக் கொண்ட சட்டம்.

மேலும், அவர் நீதிபதியை விமர்சனம் செய்யவில்லை அவர் கொடுத்த தீர்ப்பை தான் விமர்சனம் செய்திருக்கிறார் இதை தான் அவர் பேசிய கருத்து. ஆனால் அவர் மீது போடப்பட்ட அந்த வழக்கு நிச்சயம் அது காவல்துறையில் அவர்கள் மீது கொண்டு வருவார் என்று நினைக்கிறேன். ஏனென்றால் நீதித்துறையில் ஒரு நீதிபதி கொடுக்கின்ற தீர்ப்பு விமர்சனத்திற்கு ஏன் வருகிறது இதை அடுத்து செய்தியில் கொண்டு வருகிறேன்?மேலும்,

அந்த வகையில் சமூக வலைத்தளத்தில் பத்திரிகையாளர்கள் என்று பேசி விடுகிறார்கள். ஆனால், சட்டம் அதற்கு அனுமதி இல்லை. சட்டம் அனுமதி இருக்கிற பத்திரிகைகளுக்கே, விளைவுகள் மோசமானதாக ஆட்சி ,அதிகாரம் கையில் இருக்கிறது என்று திமுக பத்திரிக்கை துறைக்கு எதிராக செயல்படுகிறது.
இதன் விளைவு மக்கள் மத்தியில் இன்னும் கெட்ட பெயரை ஏற்படுத்தும் என்பது அவர்களுக்கு புரியாமல் இருக்குமா?