நீதித்துறைக்குள் அரசியல் வருவது , அரசியல்வாதிகளால் நீதிபதிகள் நியமனங்கள் , ஆட்சியாளர்களின் நீதிபதிகள் நியமனங்கள்,நீதித்துறைக்கு அது ஒரு களங்கம் தான். நீதித்துறை வெளிப்படையாக இருக்க வேண்டும். அது மக்களுக்காக மட்டுமே நீதியாக இருக்க வேண்டும் என்ற ஒரே கருத்தில் அது செயல்பட வேண்டும்.

மேலும்,140 கோடி இந்திய மக்களின் நம்பிக்கைக்கு, இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு ,ஒரு சதவீதம் கூட பிசகாமல் செயல்பட வேண்டும். அப்படி இருந்தால்! நாட்டில் அரசியல் நேர்மையானதாக இருக்கும். ஊழல்வாதிகள் அரசியலுக்குள் இருக்க மாட்டார்கள். போலி அரசியல் நடத்த முடியாது. அரசியல் பொதுநலமாக இருக்கும்.

அதேபோல்தான் பத்திரிக்கை துறையிலும், ஊழல்வாதிகளுக்கு முட்டுக் கொடுக்கும் பத்திரிகைகளுக்கு நாட்டில், சலுகை விளம்பரங்கள் கொடுத்தால், அது ஊழலையும், ஊழல்வாதிகளையும் ஊக்கி வைககும் செயல்.

அரசியல் கட்சி பத்திரிகை, வியாபார பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகள் ,இதற்கெல்லாம் மக்களின் வரிப்பணத்தை கோடிக்கணக்கில் வீணடிப்பது நாட்டு மக்களை ஏமாற்றும் வேலை.

மத்திய ,மாநில அரசின் செய்தித் துறை சட்டங்கள் எந்த அளவிற்கு தவறான சட்டங்களாக இருக்கிறது.? அது மட்டுமல்ல, நேற்று தலைமைச் செயலகத்தில் செய்தித் துறையின் செயலாளர் ராஜா ராமனை சந்தித்து பத்திரிக்கை பற்றிய கேள்விகளை முன் வைத்த போது ,நீங்கள் விண்ணப்பமாக கொடுங்கள், என்றார் .
நாங்கள் பத்திரிக்கையில் செய்தியை பார்த்து விட்டு, போட்டு விடுவோம் என்கிறார். அதுவும் தமிழ்நாட்டின் ஒரு செய்தி துறை செயலாளர் ,பத்திரிக்கையில் செய்தி எதற்கு போடுகிறோம்? என்று கூட தெரியாமல், படித்துவிட்டு போட்டு விடுவோம் என்கிறார்.
இதுவரையில் எத்தனையோ விண்ணப்பங்கள் ,செய்தி துறைக்கு மக்கள் அதிகாரம் பத்திரிகையின் சார்பிலும், தமிழ்நாடு சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு சார்பிலும் கொடுக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல, வழக்கறிஞர் நோட்டீஸும் விடப்பட்டுள்ளது.

அதற்கெல்லாம் என்ன நடவடிக்கை எடுத்தார்கள்? இப்போது மட்டும் என்ன நடவடிக்கை எடுத்து விடப் போகிறார்கள் ?என்பதுதான் எங்களின் கேள்வி?
மேலும், அரசியலுக்குள் பத்திரிக்கை வந்துவிட்டது. அதனால் தான் கார்ப்பரேட் கம்பெனி பத்திரிக்கையில் வேலை செய்பவர்கள்,பத்திரிக்கை எது ?என்று தீர்மானிக்கக் கூடியவர்களாக இது சட்டமாக்கப்பட்டுள்ளதா?
பத்திரிக்கை என்றால் என்ன? என்று தெரியாதவனிடம், இதை எல்லாம் சொல்ல வேண்டும். சுயமாக ஒரு செய்தியை மக்களுக்கு சொல்ல கூடிய தகுதி இல்லாதவர்கள், முதலாளி எப்படி சொல்கிறாரோ அதன்படி வேலை செய்பவர்கள், இன்னொரு பத்திரிக்கைக்கு இவர்கள் பத்திரிகையின் தரம் ,தகுதி பற்றி நிர்ணயிக்கக்கூடிய தகுதி இருக்கிறதா? மேலும்,

அரசியல் கட்சிகளுக்காக பின்புலத்தில், பத்திரிக்கை நடத்தக்கூடிய, தொலைக்காட்சிகள் நடத்தக்கூடிய, அதில் பணிபுரியக்கூடியவர்கள், எப்படி பத்திரிகையாளர்கள் நல வாரியத்தில் முக்கிய பொறுப்புகளை கொடுத்துள்ளது சுயநலமா? பொது நலமா? மேலும், அவர்கள்,
தான் எந்தெந்த பத்திரிக்கைக்கு சலுகை ,விளம்பரங்கள் கொடுக்கலாம்? என்பது தீர்மானிக்கிறார்களா? அது அரசு அடையாள அட்டை முதல் பத்திரிக்கையாளர்கள் நலவாரிய உறுப்பினர்கள் வரை, இது எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?

உங்களுக்கு வேண்டியவர்கள், உங்களுக்கு வேண்டிய பத்திரிகைகள், இது எல்லாம் அரசியல் செய்வதற்கு, தேர்வு செய்வதற்கு ,பத்திரிகையாளர்கள் நல வாரியம் பயன்படுத்தப்படுகிறதா? இப்படி,எதுவுமே செய்தி துறையில் சரியாக, முறையாக, சட்டப்படியும், மனசாட்சி படியும், செயல்பாடுகள் இல்லை.
உங்கள் கட்சிக்கு விசுவாசமானவன், ஆட்சிக்கு விசுவாசம் ஆனவன், அவர்களுக்காக பத்திரிக்கை துறையின் செய்தித்துறை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதைதான் அரசியலுக்குள் பத்திரிக்கைத்துறை வந்து விட்டது. இதை சட்டத்தின் மூலம் மட்டுமே சரி செய்ய முடியும். நீதித்துறை மட்டுமே இதற்கு ஒரு சரியான தீர்வு ஏற்படுத்த முடியும்.

அதுவரையில் சமூக நலன் பத்திரிகைகளுக்கும், பத்திரிகையாளர்களுக்கும், நாட்டில் எந்த நன்மையும் ஏற்படாது. அரசியல் சுயநலமாக மாறிவிட்டதால், அங்கே எத்தனை விண்ணப்பங்கள் கொடுத்தாலும், புகார்கள் கொடுத்தாலும், செய்திகள் போட்டாலும், எந்த வேலையும் நடக்காது. உங்களுக்கும், உங்களைச் சார்ந்தவர்களுக்கும், அரசியல் என்றால் ,அப்படிப்பட்ட ஒரு சுயநல அரசியல் ,நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் தேவையற்றது.
ஒரு பத்திரிகையின் கோரிக்கைகளையே சரி செய்ய முடியாத ,திமுக அரசு !மக்களின் கோரிக்கைகளை எப்படி சரி செய்யும்? இதை மக்கள் தான் சிந்திக்க வேண்டும்.
மேலும் ,மக்களிடம் பல உண்மைகளை, சமூக நலன் பத்திரிகைகள் கொண்டு செல்ல முடியவில்லை. முடிந்த அளவு எங்களுடைய உழைப்பை மட்டுமே, மக்களுக்கு கொடுக்க முடிகிறது . அதனால், எங்களுடைய கோரிக்கை சட்டத்தின் மூலம் தீர்க்கப்பட வேண்டிய ஒன்று,

இதைவிட ஒரு முக்கிய விஷயம் என்னவென்றால் ,நாட்டில் 234 எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள் ,40 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள் ,மந்திரிகள் இருக்கிறார்கள் ,ஒருவர் கூட, இது பற்றி பேசவில்லை என்றால், எப்படிப்பட்ட சுயநல அரசியல்! நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது? என்பதற்கு இது ஒரு முக்கிய உதாரணம்.
மேலும், மக்களுக்காக நீதி என்று நீதித்துறை இருக்க வேண்டும். ஆட்சியாளர்களுக்காகவும், அரசியல் கட்சிகளுக்காகவும், நீதித்துறை ஒருகாலமும் இருக்கக் கூடாது. அவர்கள் பதவியில் இருப்பதை பார்த்து நீங்கள் மதிப்பீடு செய்யக்கூடாது. அவர்களை ஒரு சாமானிய மக்களாக தான் நீதி சொல்லும் போது பார்க்க வேண்டும். அப்படிப் பார்த்த ஒரு நீதிபதி கர்நாடக மாநிலத்தில் ஜெயலலிதாவுக்கு தீர்ப்பு சொன்ன மைக்கேல் குன்கா ,நீதித்துறை வரலாற்றில் இடம் பிடித்தவர்.

ஒரு முதலமைச்சராக பதவியில் இருந்த போது, அந்த பதவியை பார்த்து அவர் பயப்படாமல், நீதி வழங்கினார் .அதுதான் நீதி. இப்போது டாஸ்மார்க் ஊழல் வழக்கில் நீதி சொல்ல பயந்து கொண்டு, இரண்டு நீதிபதிகள் விலகி இருக்கிறார்கள். இது எல்லாம் நீதித்துறைக்கு அவமானம். நீதித்துறை இதை புரிந்து கொள்ள வேண்டும்.மேலும்,
அரசியல் கட்சிகளின் பரிந்துரை, ஆட்சியாளர்களின் பரிந்துரை, ஒரு காலத்திலும் நீதிபதியாக நியமனம் செய்யக்கூடாது. அவர்களுடைய தகுதியின் அடிப்படையில் தான் நீதிபதிகளின் தேர்வு இருக்க வேண்டும். இல்லையென்றால்!

நாட்டில் அரசியல் குழப்பங்களும், நேர்மையற்ற ஆட்சியும், ஊழலும், ஊழல்வாதிகளும், ஆட்சி செய்து கொண்டு தான் இருப்பார்கள். அவர்களுக்கு தண்டனை கொடுத்து, அரசியலில் இருந்து நீதித்துறை அவர்களை வெளியேற்றாது.
இதனால், நாட்டு மக்களின் வாழ்க்கை! ஒவ்வொரு நாளும் போராட்டமாகிறது ,என்பதை நீதித்துறை ஏன் புரிந்து கொள்ளவில்லை?
இன்று ஒரு சிறிய சர்வே நீதித்துறை எடுத்துக் கொள்ளட்டும். 1965 க்கு முன் மக்கள் தொகைக்கு ஏற்ப, நீதிமன்றங்களில் வழக்கு எவ்வளவு இருந்தது?
தற்போது மக்கள் தொகைக்கு ஏற்ப ,நீதிமன்றங்களில் வழக்கு எவ்வளவு இருக்கிறது? அதுவே ,இதற்கு ஒரு முக்கிய உதாரணம்.