நாட்டில் சனதானத்திற்கு எதிராக இருப்பவர்கள் அதற்கு ஆதரவாகவும் ,எதிர்ப்பவர்கள் அதற்கு பல்வேறு விமர்சனங்களையும், தெரிவித்து வருகின்றனர். சனதனத்திற்கு எதிரான அரசியல் கட்சிகளான காங்கிரஸ் மற்றும் திமுக உள்ளிட்ட எதிர் கட்சிகள் அதற்கு ஆதரவாக குரல் கொடுக்கின்றன. ஆனால், இந்துத்துவா அமைப்புகள் தலைமை நீதிபதி .பி. ஆர் . கவாய்க்கு எதிராக குரல் கொடுக்கின்றனர்.

மேலும்,நாட்டில் நீதிபதிகள் கருத்து சொல்வதை விட ,சட்டத்தை மதித்து, நீதியை சட்டப்படியும், மனசாட்சி படியும்,சொல்லும் வேலையை பார்த்தால், இந்த பிரச்சனை வராது.

தவிர ,இவர்கள் அரசியல் கட்சிகளின் பின்புலத்தில், ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களின் பின்புலத்தில் நின்று கொண்டு, நீதி சொல்லும் போது, தராசு தட்டு கீழே இறங்கிவிடும். மேலும்,

நீதித்துறை கடவுளின் நேரடி பார்வையில் இருப்பது ,அங்கே யாரு தவறு செய்தாலும் ,சட்டம் தண்டிக்கவில்லை என்றாலும், அதாவது, நீதி தேவதை ,கடவுளின் சட்டமாக அவர்களை தண்டித்து விடும். தவறு செய்கின்ற நீதிபதிகள் அந்த வினையை அவர்கள் அனுபவிக்க தான் செய்கிறார்கள். ஆனால், அது வெளியில் தெரியாது.

மேலும் ,கடவுள் இருக்கிறாரா ?இல்லையா? என்ற கருத்துக்கு நீதிபதிகள் போகக்கூடாது.அவர் (கடவுள்) கல்லோ,சிலையோ என்று பார்த்தால் , அங்கே கடவுள் தெரிய மட்டார். அந்தக் கல்லும், சிலையும் கடவுளாக பாருங்கள் .அங்கே கடவுள் இருப்பார் .அதுதான் சனாதன தர்மம்.மேலும்,

உச்சநீதிமன்ற நீதிபதி .பி.ஆர். கவாயின் கருத்து சனாதனத்திற்கு எதிரான கருத்து என்று சொல்வதை விட மக்களின் மன உணர்வுகளையும், மத உணர்வுகளையும், புண்படுத்தும் கருத்து.என்னதான் இவர் உயர் பொறுப்பில் இருந்தாலும், இந்த கருத்து முஸ்லிம் மதத்திற்கோ அல்லது கிறிஸ்தவ மதத்திற்கோ இவர் சொல்லி இருப்பாரானால், வெளிநாடுகளில் இருந்து தாக்குதல்கள் கூட ,அதாவது கண்டனங்கள் குவிந்திருக்கும்.

மேலும், மத்திய பிரதேசத்தில் உள்ள ஒரு விஷ்ணு சிலையை மீட்பது தொடர்பான வழக்கில் ,இவர் என்ன வார்த்தை பயன்படுத்தி இருக்கிறார்? என்றால்,இது முற்றிலும் விளம்பர நோக்கம் கொண்ட வழக்கு. என்று அந்த மனுவை தள்ளுபடி செய்தது மட்டுமல்ல,போய் இப்போது கடவுளிடமே ஏதாவது செய்யச் சொல்லுங்கள்.

நீங்கள் விஷ்ணுவின் தீவிர பக்தர் என்று சொல்கிறீர்கள். எனவே, இப்போதே சென்று பிரார்த்தனை செய்யுங்கள்" என்றார். அப்போது வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் தன்னுடைய காலனியை கழற்றி நீதிபதியின் மீது வீச முயன்றுள்ளார். அது அவர் முன்னாடி விழுந்து உள்ளது. உடனே வழக்கறிஞரை கைது செய்து காவல்துறை விசாரிக்க தொடங்கி விட்டது.
தலைமை நீதிபதி இவர் தொடர்ந்து மேலும், பல வழக்குகளை உச்ச நீதிமன்ற நீதிபதி விசாரித்துக் கொண்டிருக்கிறார். இது ஒரு ஆணவமான பேச்சு தான். மேலும்,தெய்வங்களை சிலை வடிவில் வணங்குகிறார்கள். அவர்களுடைய மத உணர்வுகளை புண்படுத்துவது தவறு.

மேலும்,அவர் உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருக்கிறார் என்ற ஒரு உயர் பொறுப்பு ,100 கோடி மக்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் கருத்து. இப்படிப்பட்ட கருத்து சொன்ன இவர் தலைமை நீதிபதியாக இருப்பதற்கு தகுதியா? என்பதுதான் நாட்டு மக்களின் கேள்வி? மேலும்,
மக்களின் தெய்வ நம்பிக்கையை, மத நம்பிக்கையை, அலட்சியம் செய்யக்கூடாது. அவரவர்க்கு அவரவர் மதம் உயர்ந்தது . நீங்கள் என்ன செய்திருக்கும் வேண்டுமென்றால் நீங்கள் மனுவை தள்ளுபடி செய்தீர்கள், அதோடு போயிருந்தால் ,எந்த பிரச்சனையும் கிடையாது .

ஆனால் ,நீங்கள் விஷ்ணு பக்தர் ,அவரிடமே போய் கேளுங்கள். அவர் அந்த சிலையை செய்து தருவார். இது தெய்வத்தை கிண்டல் செய்த ஒரு பலனை கண்டிப்பாக நீங்கள் பெரிய நீதிபதியாக இருந்தாலும், உங்களுக்கும் அந்த தண்டனை தெய்வ குற்றம் வந்து சேரும். அதில் மாற்று கருத்து இல்லை.

மேலும், அரசியலுக்காக ஸ்டாலின் சனாதனத்தை எதிர்க்கிறேன் என்று பேசுகிறார். சனாதானத்தை எதிர்ப்பவர், ஏன் இவர்கள் வீட்டில் சாமி கும்பிடுகிறார்கள்? மேலும்,இதற்கு பிரதமர் நரேந்திர மோடியும் இதற்க்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார். அவரும் அரசியலுக்காக கண்டனம் தெரிவித்து விட்டாரா?செருப்பு வீசியது கண்டனத்திற்குரிய செயலாக இருக்கலாம்.
ஆனால், நீதிபதியின் கருத்து கேவலமானது. அவருக்கு யாரும் தண்டனை கொடுக்க மாட்டார்கள். ஏனென்றால்! தலைமை நீதிபதி ஆச்சே, அதனால், தான் அவரே கையில் எடுத்து செருப்பை வீசி விட்டார? அதற்கு வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் சொல்லும் ஒரே பதில் அந்த இடத்தில் எனக்கு என்ன நடந்தது என்று தெரியாது என்று தெரிவித்து விட்டார்.

இதில் என்னை என் குடும்பம் என் மீது எந்த குற்றம் சொன்னாலும் ,நான் அதை பொருட்படுத்தவில்லை. இதனால், ஜெயிலுக்கு போனாலும் நான் அதைப்பற்றி கவலைப்படவில்லை என்று தெரிவித்துள்ளார். அப்படி என்றால்! அவர் எவ்வளவு பெரிய ஒரு பக்திமான் என்பது இதிலிருந்து தெரிகிறது. எனவே ,நாட்டில் மக்களிடையே இந்த கருத்து மோதலுக்கு காரணமாக நீதிபதிகள் இருக்கக் கூடாது. மேலும்,
அரசியல் வேறு, மதம் வேறு, சட்டம் வேறு, மக்களின் மத நம்பிக்கை, தெய்வ நம்பிக்கை வேறு. இதைப் புரிந்து தலைமை நீதிபதி பேசியிருக்க வேண்டும். ஆனால் உயர்ந்த பதவியில் இருக்கிறோம் என்று பேசி இருப்பது கண்டனத்திற்குரியது.

அதேபோல், சனாதனத்திற்கு எதிரான திருமாவளவன் ,வைகோ ,போன்றவர்கள், எப்படியும் பேசுவது அரசியல் !என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். அது அரசியல் தெரியாத முட்டாள்களிடம் பேச வேண்டிய பேச்சு.மேலும்,
ஒரு நீதிபதி மக்களின் மத நம்பிக்கையும், மத உணர்வையும் ,எப்படி இழிவாக பேசலாம்? மேலும், வழக்கறிஞர் ராஜேஷ் கிஷோர் சனாதன தர்மத்தை அவ மதிப்பதை இந்தியா பொறுத்துக் கொள்ளாது" என்று உச்ச நீதிமன்றத்திலே , நீதிபதி முன் கூச்சலிட்டார்.