மனித பிறப்பு எதற்கு? என்று தெரியாமல், இந்த சாதி நோயாளி பேசிக் கொண்டிருக்கிறார் திருமாவளவன் .
பிறக்கும் போது தாய் வயிற்றில் அவன் எந்த ஜாதி என்று யாருக்காவது தெரியுமா? நீ செய்யற தப்புக்கு எல்லாமே சாதியை முன்னிறுத்தி, தப்பிக்கலாம் என்றால்! அது மனித பிறப்புக்கு !நீ அர்த்தமற்றவன்.

அரசியலில் சாதியைக் கொண்டு வருவதே தவறு . அரசியல் அனைத்து ஜாதிக்கும் பொதுவானது . அங்கே ஜாதி கட்சி எதற்கு ? ஜாதிக்கு மட்டுமே கட்சியா? இட ஒதுக்கீடு சலுகை வேண்டுமா? சங்கமாக போராடு! தவறில்லை. இந்த கட்சி எல்லாம் அரசியல் கட்சி என்று எப்படி ஏற்றுக் கொள்வது? ரவுடிசம் செய்வதற்கும், கட்டப்பஞ்சாயத்து செய்வதற்கும், அரசியல் கட்சிகள் என்றால்! அதை ஏற்றுக் கொள்ள முடியாது.

மேலும், அரசியல் தெரியாதவனிடம் எதைப் பேசினாலும், நீ சொல்வது தான் அரசியல் என்று நினைத்துக் கொண்டிருப்பான் . தவிர,அரசியலுக்கு அர்த்தம் தெரியாது .ஜாதிக்கு அர்த்தம் தெரியாது .அதனால்,என்னவென்று தெரியாதவனிடம், நீ எப்படியும் பேசிக் கொண்டிருக்கலாம். அவன் உனக்கு கைதட்டிக் கொண்டிருப்பான்.மேலும்,

உழைப்பவன் ஜாதியைப் பற்றி பேசுவதில்லை. ஜாதியைப் பற்றி பேசுபவன், உழைப்பதில்லை. மேலும், திருமாவளவன்! அவர்கள் ஆதிக்க ஜாதி என்று சொல்லி, நீ அவர்களை ஆதிக்கம் செலுத்தலாம் என்று நினைக்கக் கூடாது. அங்கு தான் இந்த முரண்பாடுகள் !
மேலும் சனாதன சக்தியை எதிர்க்கிறேன் என்று சொல்கிறார். சனாதன சக்திக்கும், இந்துக்களுக்கும் வேறுபாடு இல்லை. பட்டியலின சமூகத்திலும், சனாதன சக்தியை விரும்பக் கூடிய தெய்வ வழிபாடுகள், நடத்திக் கொண்டு தான் இருக்கிறார்கள். அதற்கு நமது நாட்டின் ஜனாதிபதி மூர்முவே உதாரணமானவர்.

இதில் என்ன தவறு இருக்கிறது? அவரவர் கடவுள் ,அவரவர் வழிபாடு, அவரவர் இறை நம்பிக்கை! கடவுள் பெயரை சொல்லி ஏமாற்றினால் தான் தவறு. அப்படி இருக்கும் போது நீங்கள் கடவுளை எதிர்க்கிறீர்களா ?அல்லது அந்த கடவுள் வழிபாடு முறைகளை கடைப்பிடித்து வாழ்கின்ற மக்களை வெறுக்கிறீர்களா? யாரை? எல்லாமே தவறாகத் தான் இருக்கிறது.

இப்படிப்பட்ட ஒரு நபர் !எப்படியும் பேசிக் கொண்டிருக்கலாம், என்றால்! அதை யார் ஏற்றுக் கொள்வார்கள்? இந்த லட்சணத்தில் வக்கீல் என்று கோட்டுகளை போட்டுக்கொண்டு ரோடில் வந்து காத்துகிறார்கள்! இவர்கள் வக்கீலா? அல்லது கட்டப்பஞ்சாயத்து கூட்டமான்னே தெரியவில்லை . ஒரு வழக்கறிஞர் என்றால், தன்னைப்போல் ஒரு வழக்கறிஞர் பாதிக்கப்பட்டவருக்காக வழக்கறிஞர்கள் போராடுவது தவறு இல்லை .ஆனால் !திருமாவளவனுக்காக கத்துகிறார்கள்.மேலும்,

திருமாவளவன் மற்றும் அவரது கட்சியினர் செய்கின்ற தவறு.மேலும்,வேற்று சமுதாயங்களை தரக்குறைவாக பேசி! நீ உயர்ந்து விட முடியாது. ஒரு மனிதனுக்கு, ஒரு மனிதன் மரியாதை கொடுத்து, மதிக்கத் தெரிய வேண்டும். அவன் தான் மனிதன். மரியாதை தெரியாமல் வாழ்கின்ற கூட்டம் எப்படியும் பேசலாம்.
நானும் பல சமுதாயங்களை ஆய்வு செய்து பார்த்திருக்கிறேன் .அதில் பட்டியல் இன சமூகத்தில் ,இந்த அரசியல் பின்புலத்தில் இருப்பவர்கள் மட்டும்தான், இந்த பேச்சுக்களை எல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். எத்தனையோ தாழ்த்தப்பட்ட சமூகத்தில் படித்த இளைஞர்களை பார்த்திருக்கிறேன். அதிகாரிகளை பார்த்திருக்கிறேன். அவர்களெல்லாம் இந்த கலாச்சாரத்தில் இல்லை .மேலும்,
நீ செய்கின்ற தவறுக்கு, ஜாதி ஒரு சப்போட்டா? ஒரு வழக்கறிஞர் வண்டியை தள்ளும் போது உன்னுடைய கார் கூட வந்து நிற்கட்டும். ஒரு நிமிஷம் நில்லு, இதனால், உனக்கு என்ன பாதிப்பு ?
எதுவும் கிடையாது. என்ன ஒரு சாதாரண ஜாதி கட்சி ஆரம்பிச்ச, ஒருவர் !அவ்வளவு தான். உன்னால அந்த ஜாதிக்கு பெருமையா ?இல்ல சிறுமையா? ஒரு ஜாதி தலைவன் அந்த ஜாதிக்கு பெருமையாக அவனை பேச வேண்டும்.

ஆனால் ,உன்னை எல்லா ஜாதியுமே சிறுமையாக தான் பேசிக் கொண்டிருக்கிறான். ஜாதிக்கு அர்த்தம் தெரியாது? ஜாதி எதுக்குன்னும் தெரியாது? ஜாதி வச்சு அரசியல் பண்ணி மற்ற சமூகத்தை முட்டாளாக்க சொன்னாங்களா? அப்படியெல்லாம் ஆக்க முடியாது.மேலும்,

ஜாதிக்கும், பொருளாதார ஏற்றத்தாழ்வுக்கும், அர்த்தம் தெரியாத திருமாவளவனே இப்போது தெரிந்து கொள்! இதே பட்டியல் இன சமூகத்திலே எத்தனையோ கோடீஸ்வரர்கள் இருக்கிறார்கள், எத்தனை தொழிலதிபர்கள் இருக்கிறார்கள், அவர்கள் பெண் கொடுப்பார்களா? பட்டியல் இன ஜாதியில் ஒரு சாதாரண ஏழை பையனுக்கு பொண்ணு கொடுப்பார்களா? உன்னால் அவனுக்கு கட்டி வைக்க முடியுமா? மேலும்,

நீ ஜாதி! ஜாதி, என்று பைத்தியமாக பேசி ,எந்த ஜாதியும் திருத்தி விட முடியாது. உன் பேச்சால் மற்ற ஜாதிகள், ஜாதி சங்கங்கள் ,வன்முறையை தூண்டும் அளவில் தான் உன்னுடைய பேச்சு இருக்கிறது .மேலும்,
சாதி பற்றி பேசுபவன் எல்லாம், இதுவரை அவன் அந்த சாதிக்கு என்ன செய்திருக்கிறான்?எதையும் செய்தது கிடையாது. எவன் ஒருவன் சாதி, சாதி என்கிறானோ, அவன் அந்த சாதியை அழித்து கொண்டு இருப்பான். இது நான் அனுபவத்தில் கண்ட உண்மை..மேலும்,
இங்கே பட்டியல் இன சமூகத்தில், நீ அந்த சாதியை அழித்துக் கொண்டிருக்கிறாய். உழைத்து சாப்பிட வேண்டும் என்று நினைப்பவர்கள் ,ஜாதியைப் பற்றி பேச மாட்டான். ஊரை ஏமாற்றலாமா ?ஜாதியை ஏமாற்றலாமா? என்பவர்கள் தான் ஜாதியை பிடித்துக் கொண்டு, தொங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த வகையில் திருமாவளவன், ராமதாஸ், இன்னும் பலரை நான் பார்த்த கூட்டங்கள், அப்படியே தான் போய்க் கண்டிருக்கிறது. ஜாதிக்கு செய்கிறேன் என்று இவர்கள் செய்து கொள்வார்கள். இதுதான் ஜாதி சங்கங்களின் வேலை, ஜாதி கட்சிகளின் வேலை! மேலும்,
இந்த உண்மை தெரியாமல் தான், எத்தனையோ பேர் இவர்கள் பேச்சால் ,ஜாதி வெறியர்களாக மாறிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த உண்மைகள் தெரியாமல், எத்தனையோ பேர் ,இவர்களுடைய பேச்சால் தவறான பாதையில் போய் ,அதுவும் இளைஞர்கள் வாழ வேண்டிய வயதில், அவர்களுடைய குடும்பத்தை நடுத்தெருவிற்கு கொண்டு வந்து விட்டு, விட்டு நிற்பார்கள். அப்படி நின்றவர்கள் கதையை நேரிலே பார்த்து அவர்கள் சொன்னது பாட்டாளி மக்கள் கட்சியை சேர்த்த சிதம்பரத்தில் ராமதாஸால் 40 வயது வரை கல்யாணமே செய்து கொள்ளாமல், இந்த ஜாதி வெறியால் நாங்கள் நடுத் தெருவில் நின்றோம் என்று சொன்னார்கள்.
அவர்களுடைய வாழ்க்கை சோகமானது. பிறகு, தற்போது அவர்கள் கல்யாணம் செய்து, உழைத்து, கஷ்டப்பட்டு குடும்பத்தில் ,பிள்ளைகளை படிக்க வைத்து கல்யாணம் செய்து இருக்கிறார்கள்.மேலும்,
சண்டை, வன்முறை, இது எல்லாம் ஜாதியின் பெருமையை உயர்த்தாது. எது உயர்த்தும்? உன்னுடைய உழைப்பு !உன்னுடைய திறமை ,உன்னுடைய தகுதி, அதில் நீ முன்னுக்கு வந்தால்! எல்லா ஜாதியும் பாராட்டும்.

ஆனால் ,எந்த தகுதியும் இல்லாமல் ,நான் ஜாதியை வைத்து தப்பு செய்து, ஜாதி பெயரை சொல்லி, ஜாதிக்குள் ஒளிந்து கொள்கிறேன் என்றால்!எவனும் ஏற்றுக் கொள்ள மாட்டான். தட்டி கேட்பவனை உடனே பி சி ஆர் போட்டு தள்ளிவிடலாம் என்று பி சி ஆர் ஐ பயன்படுத்திக் கொண்டிருக்கக் கூடாது.மேலும்,

சாதியை வைத்து அரசியல் நடத்தி அதனால்! மக்களுக்கு என்ன பயன்? தவிர ,இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறாய் .அந்த தொகுதிக்கு இதுவரை நீ செய்தது என்ன? அந்த மக்களுக்கு உன்னால் என்ன நன்மை? அதையெல்லாம் இதுவரையில் திருமாவளவன் எந்த மீட்டிங்கிலும் பேசியது கிடையாது.ஆனால்!

இந்த ஜாதி நோயாளி !ஒரு பக்கம் அரசியலில் ஜாதியை பிடித்து தொங்கிக் கொண்டிருக்கிறார். மேலும்,சினிமாவில் பாடம் எடுக்கிறார்கள், இந்த பா. ரஞ்சித் , மாரி செல்வராஜ், ஜாதி படங்களைத் தவிர ,வேறு படங்களை எடுக்க இவர்களுக்கு தெரியாது. அதற்கான தகுதியும் இருக்காது. இந்த படங்களை யார் பார்ப்பார்கள்? அந்த காலத்தில்!

எம்ஜிஆர், சிவாஜி, படம் பார்த்துவிட்டு இந்த படங்களை எல்லாம் பார்த்தால் அதற்கு ஏணி வைத்தால் கூட எட்டாது. அதனுடைய தகுதியில் நூற்றில் ஒரு சதவீதம் கூட இருக்காது. இது ஏதோ தவறாகவோ, குறையாகவோ, சொல்வதாக நினைக்கக் கூடாது. கலை என்றால் மக்களை ஈர்க்கக்கூடிய ஆற்றல் அதற்கு இருக்க வேண்டும். அந்த ஆற்றல் ஒரு கலைஞனின் படைப்பிலிருந்து தான் வருமே ஒழிய, ஒன்றைப் பார்த்து காப்பியடித்து படத்தை எடுப்பவனுக்கு எல்லாம் வராது.மேலும்,
அவர்களுடைய நடிப்பு என்ன? அவர்களுடைய இசை என்ன? அதனுடைய கருத்து என்ன ?அதுல ஒரு சதவீதம் கூட இந்த படங்கள் எல்லாம் இருக்குமா?. இதெல்லாம் சினிமா என்று சொல்லிக்க அர்த்தமே இல்லை. என்ன சினிமா? தற்போது வில்லனையெல்லாம் ஹீரோவாக்குறானுங்க! அந்த காலத்துல எம்ஜிஆர் படம், எத்தனை முறை பார்த்தாலும் ,இன்னும் பார்க்கலாம் .சிவாஜி படம், எத்தனை முறை பார்த்தாலும், பார்க்கலாம். ஜெய்சங்கர் படம், அந்த ஒரு பாட்டு கூட இந்த படம் பூரா இணையாகுமா?
அதனால, நான் இந்த படங்களை எல்லாம் டிவியில் ஃப்ரீயா போட்டா கூட நான் பார்க்கிறது கிடையாது. மேலும்,ஒரு நீதிபதி அதுவும் தலைமை நீதிபதி ஒரு வழக்கறிஞர் மனு போட்டு ,அவருடைய சட்டப்படி என்ன கேட்கணுமோ ,அதை கேட்கிறார்.
ஆனால்! நீதிபதியாக பதில் எப்படி சொல்ல வேண்டும்? அந்த விஷ்ணுவிடமே போய் கேளுங்கள். செய்து தருவார்! இது நீதிபதி பேசும் போச்சா?

ரோட்ல போறேவ, பேசுற மாதிரி பேசினா ,அவன் செருப்பு கழட்டி அடிக்கிறான். தப்பு நீதிபதி கிட்ட இருக்கு. முதலில் ஒரு உயர்ந்த பொறுப்பில் இருக்கக்கூடிய நீதிபதி, அவ்வாறு பேசியது மிகப்பெரிய தவறு. அதற்கு திருமாவளவன் மாதிரி ஆளுக, முட்டுக்கொடுத்து பேசும் தவறை நியாயப்படுத்துவது ஏற்க முடியாத ஒன்று.மேலும்,
ஒருவனுடைய பிறப்பால் ,தாழ்ந்தவனாக இருந்தாலும், அவன் உயர்ந்த நிலைக்கு போகலாம். எப்படி? அவனுடைய பேச்சு, செயல், குணம், மற்ற சமூகம் பாராட்டி அவனை வாழ்த்த வேண்டும். அதுதான் சமூகம் .
அதுதான் அவன் பிறந்த ஜாதிக்கு அவன் சிறப்பானவனாக, போற்றப்படுபவனாக, இருக்க வேண்டும் . அதில் இருக்கிறது ஜாதியின் பெருமை. நீ தப்பு செய்துவிட்டு ,எல்லா இடத்திலும் ஜாதி எடுத்துக்கொண்டு வந்து அங்கே சேர்த்து ,கூட்டங்களை போட்டு பேசிக் கொண்டிருந்தால், எந்த ஜாதியா ?இருந்தாலும் ,யாரும் மதிக்க மாட்டான்.
அந்த தவறுக்கு மேலும், தவறைத் தான் செய்து கொண்டிருக்கிறீர்கள். இப்போதாவது திருமாவளவனின் கூட்டம் திருந்துமா? ஒருவேளை ,பிஜேபியோ, அல்லது ஆர். எஸ் .எஸ் .காரன் என்று சொல்வீர்களா ? உங்களுக்கு தெரிஞ்சது அதுதான் .அவன் ஒருத்தன் மாட்டிக்கினு முழிக்கிறான்.எந்த ஜாதியாக இருந்தாலும் உழைத்து வாழ்பவன் நேர்மையாக வாழ்பவன் அவன் ஜாதியை வைத்து பிழைப்பு நடத்துவதில்லை.