
அப்படிப்பட்ட பத்திரிகை தொலைக்காட்சிகளுக்கு தான் தற்போது அரசின் சலுகை, விளம்பரங்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்ல, அதனுடைய வளர்ச்சிக்கு தான் அரசாங்கத்தின் செய்தித் துறை, வருடத்திற்கு 500 கோடிக்கு மேல் மக்களின் வரி பணம் வீணடித்து வருகிறது.இது காலத்திற்கு ஏற்ப சட்டங்கள் மாற்றப்பட வேண்டும்.

அதேபோல் தான், நீதித்துறையிலும், வழக்கறிஞர்கள், நீதிபதிகள் ஒரு வரைமுறை இல்லாமல், இதற்குள் அரசியல் வந்துவிட்டது. எமது மூத்த வழக்கறிஞர் ஒருவர் சொல்கிறார், பொதுநல வழக்கு என்று போட்டாலே ,சென்னை உயர்நீதிமன்றத்தில் உடனே டிஸ்மிஸ் செய்கிறார்கள். அப்படி என்றால், நீதிபதிகளுக்கு வழக்கின் சாராம்சம் தெரியவில்லையா?

இப்படி வழக்கின் சாரம்சம் தெரியாமல், நீதிபதியாக அந்த பொறுப்பில் அமர்ந்து, நீதி சொல்வது ஏற்புடையதல்ல, அதேபோல், பத்திரிக்கை துறையில் ஒரு சார்பாக அதாவது அரசியல் கட்சிக்காரர்களுக்கு சார்பாக நடத்திக் கொண்டிருக்கும் பத்திரிகைகளுக்கு சர்குலேஷன் சட்டத்தை வைத்து சலுகை, விளம்பரங்கள் கொடுப்பது , அரசியல் கட்சி சார்ந்த பத்திரிகைகளுக்கும், வியாபார நோக்கம் கொண்ட பத்திரிகைகளுக்கும், சமூக நலன் சார்ந்த பத்திரிகைகளுக்கும், ஒரே சட்டமாக சர்குலேஷன் சட்டம் இருப்பது ,பத்திரிக்கை துறையை சாகடிப்பதற்கு சமம். மேலும்,

இன்று, நீதித்துறையில் தகுதியற்ற வழக்கறிஞர்கள் போர்வையில், அரசியல் கட்சி குண்டர்கள் ,அரசியல் கட்சிக்காரர்கள் வழக்கறிஞர்களாக பதிவு செய்துவிட்டு, திருமாவளவனுக்காக கத்துகிற கூட்டம், தகுதியான வழக்கறிஞர்களாக இருக்க முடியாது. இவர்களெல்லாம் பார் கவுன்சில் உறுப்பினராக நீதிமன்றம் தாங்குமா? அதற்கென்று ஒரு தகுதி வேண்டாமா?
எதற்கெடுத்தாலும் ஜாதி !என்னடா ஜாதி? ஜாதி எதுக்கு? உன் வீட்டிலே வைத்துக் கொள்ளுங்கள் .ஜாதியை! உங்கள் குடும்பத்தில் வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் உறவில் வைத்துக் கொள்ளுங்கள் .

நீதிமன்றத்திலே ஜாதியை கொண்டு வந்து, நீதித்துறையை ஜாதி துறையாக ஆக்கி விட்டார்கள். எதற்கெடுத்தாலும் ஒடுக்கப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள்,மற்றும் ஆர்எஸ்எஸ் காரன்,பிஜேபி இந்த டயலாக் எல்லாம் யாரை ஏமாற்றும் வேலை? உழைத்து முன்னேறு! ஊரை ஏமாற்றி முன்னேற நினைக்காதே! எல்லா சமுதாயமும் உழைத்து தான் முன்னேற நினைக்கிறது. ஆனால், ஜாதி இல்லை என்று சொல்லிக்கொண்டு, ஜாதியை வைத்து, அரசியல் செய்து கொண்டு, இது யாரை ஏமாற்றும் வேலை? மேலும்,

பார் கவுன்சிலில் உறுப்பினராக இருப்பதற்கு, ஒவ்வொரு வழக்கறிஞரும், தனிப்பட்ட முறையில் அந்தந்த நீதிமன்றத்தில் குறைந்தபட்சம் 10 வழக்குகள் ஆவது இவர்கள் நடத்தி இருக்க வேண்டும்.

அதில் குறைந்தபட்சம் ஐந்து வழக்குகள் ஆவது அவர்கள் வெற்றி பெற வேண்டும். அவர்களை மட்டுமே பார் கவுன்சில் உறுப்பினராக சேர்க்கப்பட வேண்டும். அப்படி ஒரு தகுதியை நிர்ணயிக்காமல், 50 ஆயிரம் ,ஒரு லட்சம் என்று காசு கொடுத்து சர்டிபிகேட் வாங்கி வந்தவர்கள், எல்லாம் இன்று பார் கவுன்சில் உறுப்பினராக பதவியில் அமர்ந்து கொண்டு, நீதிக்காக போராடுவதை விட்டு, விட்டு ஒரு அரசியல் கட்சிகாரன் பின்னால் கத்திக் கொண்டே இருப்பது நீதித்துறையில் நீதிக்கே போராட்டம் ஆகிவிட்டார்கள்.

குறிப்பாக சொல்லப் போனால், அந்த நீதி தேவதைக்கே போராட்டம் தான் வந்து விட்டது. இப்படிப்பட்டவர்களை கொண்டு வந்து நீதித்துறையில் இவர்களை வழக்கறிஞர்கள் என்று சொல்வதற்கு அர்த்தம் இல்லை.

இதனால், பாதிக்கப்படுவது சமூகத்தில் பொதுமக்களும், தகுதி உள்ள வழக்கறிஞர்களும், பாதிக்கப்படுகிறார்கள். இதே நிலைமைதான் பத்திரிக்கை துறையிலும் ,தகுதியான பத்திரிகைகளும் ,தகுதியான பத்திரிகையாளர்களும், மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த முடியாமல், அவர்களுடைய உழைப்புக்கேற்ற, தகுதிக்கேற்ற, அரசின் சலுகை, விளம்பரங்கள் கிடைக்காமல் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

மேலும், திமுக அரசு அரசியல் சட்டத்திற்கு புறம்பாக சட்டமன்றத்திலே, தீர்மானங்களை நிறைவேற்றி, கவர்னருக்கு அனுப்புகிறார்கள். கவர்னர் ஆர் என். ரவி அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று இவர்களுடைய சட்டம். அதாவது, இவர்களுடைய அதிகாரம் என்னவென்றால்!
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் நாங்கள் என்ன சட்டம் கொண்டு வந்தாலும், கவர்னர் ரவி அதற்கு ஒப்புதல் அளித்து விட வேண்டும் .இதுதான் திமுக அரசின் அரசியல்.

இப்படித்தான் மீண்டும், கடந்த தமிழக சட்டப்பேரவையில் கொண்டு வந்த தீர்மானம் என்னவென்றால் ( ஏப்ரல் 29 ஆம் தேதி) தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக சட்டத்தை திருத்தம் மேற் கொள்வதற்கான சட்ட மசோதாவை கொண்டு வந்தது அதற்கு கவர்னர் ஆர் .என்.ரவி ஒய்புதால் அளிக்காமல் அந்த மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்து விட்டார்.
இதனால், தமிழக அரசு மீண்டும் இப் பிரச்சனை குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளது. உச்சநீதிமன்றத்திற்கு சட்ட மன்ற மசோதாவை நிறைவேற்றும் அதிகாரம் உள்ளதா? ஏற்கனவே, இது சம்பந்தமாக ஜனாதிபதி கேட்ட கேள்விக்கு இன்னும் உச்ச நீதிமன்றம் பதிலளிக்க முடியாமல் இருந்து வருகிறது.

மீண்டும் இதுபோன்ற அரசியல் குழப்பத்தை நீதிமன்றத்தில் அரசியல் தலையீடு, நீதித்துறைக்கு கலங்கத்தை ஏற்படுத்தி வருகிறது. எனவே, மத்திய அரசு மற்றும் ஜனாதிபதி மாளிகை கலந்து நீதித்துறையில் அரசியல் தலையீடு எதனால் ஏற்படுகிறது?

நீதித்துறையில் தகுதி என்பது மிக முக்கியமானது. அதேபோல் !பத்திரிக்கை துறையில் தகுதி மிக முக்கியமானது. இங்கே தகுதியின் அடிப்படையில் மத்திய மாநில அரசின் செய்தித்துறை செயல்படாமல் சர்குலேஷனும் அரசியல் கட்சியும் முக்கியமாக இருக்குமேயானால் பத்திரிக்கை துறை பொது நலமாக இருக்காது அது சுயநலமாக தான் இருக்கும்
மேலும், இது, இரண்டுமே ,அரசியல் பின்புலத்தில் செயல்படும் போது ,அரசியலிலும் குழப்பத்தை ஏற்படுத்துகிறது .சமூகத்திலும் பொதுமக்களுக்கும், தகுதி வாய்ந்த வழக்கறிஞர்களுக்கும், தகுதி வாய்ந்த சமூக நலன் பத்திரிகையாளர்களுக்கும், பத்திரிகைகளுக்கும், இது போராட்டமாக அமைந்துள்ளது.

இதற்கு முக்கிய காரணம் ,இரண்டு துறையிலும் ,போலிகள் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறது. போலிகளை களையெடுக்காமல், இந்த துறைகளை சரி செய்ய முடியாது. அதனால், சட்டத்தின் மூலம் பொது மக்களுக்கு பயனளிக்கக்கூடிய வகையில், சட்ட திருத்தம் மேற்கொள்வது, இரண்டு துறைகளிலும் மிக, மிக அவசியமானது என்பதை சமூக நலன் பத்திரிகையாளர்கள் சார்பிலும் ,மக்கள் அதிகாரம் பத்திரிக்கை சார்பிலும், வைக்கின்ற முககிய கோரிக்கை.