அரசியல் கட்சி தலைவர்களின் சுயநலத்தால்! நாடும், நாட்டு மக்களும், எவ்வாறு நெருக்கடிக்கு ஆளாகிறார்கள்? இளைஞர்களும் ,பொதுமக்களும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள்.


ஒரு நாடு பொருளாதாரம், பாதுகாப்பு, மக்களின் சுதந்திரம், மக்களின் வாழ்வாதாரம், கல்வி, முன்னேற்றம், வேலைவாய்ப்பு, தொழில், போன்ற அனைத்தும், அரசியல் சார்ந்தது.

ஒரு நாட்டின் அரசியல் வலிமையானதாக இருந்தால் தான், இவற்றை மக்கள் அனுபவிக்க முடியும். இது எதன் மூலம் சாத்தியமாகிறது ? என்றால் ,அரசியல் கட்சிகளின் பெரும்பான்மை பலத்தின் மூலம் அரசியல் நிர்ணயிக்கப்படுகிறது.

மக்களின் ஆதரவு என்பது அவர்களுடைய சொந்த சுயநலத்திற்கு அரசியல் தேர்வு என்பது நாட்டுக்கு எதிரானது. நாட்டு மக்களுக்கு எதிரானது. எனக்கு என்னுடைய அரசியல் கட்சி ஜெயித்தால் ,நான் பல கோடிகளை சம்பாதிப்பேன். எனக்கு அதன் மூலம் லாபம் கிடைக்கும் என்று தற்போதைய அரசியல் கட்சியினிர் மனநிலை என்பது மக்களுக்கும் தெரியும். அதே போல் தான்,

நாட்டில் அரசியல் கட்சித் தலைவர்கள் இருக்கிறார்கள் ? எதிர்க்கட்சிகளான இவர்கள், நாட்டின் எதிரி கட்சிகளாகவே செயல்படுகிறார்கள். ராகுல் காந்தி, ஸ்டாலின், திருமாவளவன், வைகோ, மற்றும் கம்யூனிஸ்டுகள் போன்ற அரசியல் கட்சிகளின் தலைவர்கள் நாட்டை பற்றி கவலைப்படாமல், இவர்களுடைய கட்சிக்காரர்கள் எப்படி இருக்கிறார்களோ ,அதே போல் தான், அவர்களும் இருக்கிறார்கள். இவர்களுடைய நோக்கம், ஆட்சி, அதிகாரத்தை மட்டுமே, குறிக்கோளாகக் கொண்டு செயல்படுகிறார்கள்.

இது எங்கே போய் முடிகிறது ?என்றால், ஒரு பக்கம் அரசியல் தெரியாத மக்களால், நாட்டுப்பற்று இல்லாத மக்களால், சமூக அக்கறை இல்லாத மக்களால், பணத்திற்காக வாக்களிக்கும் குடிகாரர்கள், சுய உதவி குழுக்களின் பெண்கள் ,இவர்கள் எளிதாக காசுக்கு விலை போகும் கூட்டமாக இவர்கள் இருக்கிறார்கள். மேலும்,

பாதிக்கப்படுவது அவர்களுக்கு நாமும் அதில் இருக்கிறோம் என்பது தெரியாது. நாம் என்ன பெரிய கோடீஸ்வரராக போகிறோமா? அல்லது லட்சாதிபதியாக ஆகப் போகிறோமா? எதுவும் இல்லை யார் வந்தால் என்ன? யார் போனால் என்ன? இப்படி பட்ட மனநிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களை தேடித்தான், திமுக கட்சியினர் ஒவ்வொரு தெருவிலும் எத்தனை பேர் இருக்கிறார்கள்? என்பதை லிஸ்ட் எடுத்து வைத்திருப்பார்கள்.

இவர்களுக்கு தேவை அடி முட்டாள்கள், அவர்களைப் பாராட்டி கூடிய பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், அவர்களை அவர்களே பாராட்டி, புகழ்ந்து மாலை போட்டுக் கொள்வார்கள் ,சால்வை அனுவித்துக் கொள்வார்கள்.

தன்னை யார் பாராட்ட வேண்டும் ?எப்படிப்பட்டவர் பாராட்ட வேண்டும்? என்ற தகுதி கூட தெரியாமல் எல்லாம் தெரிந்த மேதைகள் போல் பேசுவார்கள் .இந்த திமுக அரசியல் கட்சியினர். அவர்களுக்கு தேவை பணம், பதவி, இது மட்டும் தான் முக்கியம். வேறு எதுவும் தேவையில்லை.

அதற்காக எந்த நிலைக்கும் போவார்கள். இப்படிப்பட்ட கட்சிகள் நாட்டு நலனிலும், நாட்டு மக்கள் நலனிலும், எப்படி இவர்கள் கவனம் செலுத்துவார்கள்? தமிழ்நாட்டில் இந்த நிலைமை என்றால், மத்தியில் ஆளுகின்ற பிஜேபி அரசுக்கு கூட்டணி கட்சிகளால் ராகுல் காந்தி மறைமுகமாக நெருக்கடி ஏற்படுத்தி வருவதாக தகவல்.

அது எப்படி என்றால், பிஜேபிக்கு ஆதரவு அளித்து வரும் கூட்டணி கட்சிகளான , சந்திரபாபு நாயுடு மற்றும் நிதீஷ் குமார் இவர்கள் மூலம் எப்படி நெருக்கடி கொடுக்கலாம்? தெலுங்கு தேச கட்சியில் பிளவு ஏற்படுத்தும் அளவுக்கு, அந்நிய சக்திகளின் துணையோடு, அதாவது டிரம்ப் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து அதிக வரிகளை விதித்து விட்டார்.

அதாவது இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யக்கூடிய பொருட்களுக்கு வரி விதிப்பு அதிகரித்ததால், ஆந்திராவின் பொருளாதார அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது அங்கு மட்டுமல்ல,

தமிழ்நாட்டிலும் கடல் வாழ் உயிரினங்களின் ஏற்றுமதி பொருட்கள் அதிகமாக தான் உள்ளது இவை அத்தனைக்கும் டிரம்பின் வரி விதிப்பு இந்திய பொருளாதாரத்திற்கு ஒரு சரிவு .தான். இங்கே பின்னலாடை தொழில் சரிவடைந்துள்ளது.

இப்படி பல பிரச்சனைகளுக்கு இங்கு இருக்கக்கூடிய அரசியல் கட்சி தலைவர்கள் ,மறைமுகமாக இந்தியாவுக்கு எதிராக சதி செய்து கொண்டிருக்கிறார்கள். அதில் முக்கிய நபர் ராகுல் காந்தி. ராகுல் காந்தி எந்த காலத்திலும் இந்தியாவிற்கு பிரதமராக வர முடியாது. அவர்கள் குடும்பம் வரக்கூடாது.

அந்த தேசப்பற்று இந்திரா காந்தியோடு முடிந்து விட்டது. அவர்களிடம் பிச்சை வாங்கி, எச்சை வாங்கி, சாப்பிடக்கூடிய கூட்டம் , கட்சி என்றும், ஊடகம் என்றும், எப்படி வேண்டுமானாலும் பேசட்டும்,நாட்டு மக்கள் சிந்தியுங்கள். ..!

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பற்றி தாங்கிக் கொள்ள முடியாமல் வெளிநாட்டு சக்திகளோடு இவர்கள் ரகசிய கூட்டணி வைத்து ஆட்சி ,அதிகாரம் கைப்பற்ற நினைக்கிறார்கள். இது நாட்டு மக்களை முட்டாளாக்கும் வேலை.மேலும்,

தெலுங்கு தேச கட்சியின் நிறுவனரான என்.டி .ராமராவின் பேரன் ஜூனியர் என்.டி.ஆர் மூலம் தெலுங்கு தேச கட்சிக்கு நெருக்கடி கொடுக்கிறார்கள். இதை ஏன்? சொல்ல வருகிறேன் என்றால்! நாட்டு மக்களுக்கு அரசியலும், அரசியலைப் பற்றிய உண்மைகளும், அரசியல் கட்சிகளைப் பற்றிய உண்மைகளை, ஊடகங்கள் வெளிப்படுத்துவதில்லை.

இந்த நெருக்கடி பிஜேபி அரசை கவிழ்க்க மறைமுகமாக திட்டம் போடும் வேலை. சரி அப்படியே பிஜேபி கவிழ்த்து விட்டு, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பிஜேபி விட சிறப்பாக காங்கிரஸ் ஆள் ஆட்சி கொடுக்க முடியுமா?

50 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியின் அரசியல் வரலாறு பல லட்சம் கோடி ஊழல்! மட்டும்தான் மக்களுக்கு அவர்களால் கொடுக்க முடிந்தது. இது தவிர, பல்லாயிரம் கோடி வெளிநாடுகளில் கடனை வைத்துவிட்டு போனார்கள். இதையெல்லாம் சரி செய்து இந்தியாவின் பெருமையை உலக அரங்கில் நிலைநாட்டியவர் பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு மக்கள் இதை சிந்திக்க வேண்டும். மேலும்,

இந்த உண்மைகள் இன்று !பல கோடி பேருக்கு தெரியாது. இவை அத்தனையுமே, இந்த அரசியல் கட்சிகளின் சுயநலமும், அரசியல் கட்சித் தலைவர்களின் சுயநலமும், நம் நாடும், நாட்டு மக்களும், எந்த அளவுக்கு நெருக்கடிக்கு உள்ளாகிறார்கள் !என்பது இந்தியா மட்டுமல்ல,

உலக நாடுகளின் தலைவர்களும், உலக நாட்டு மக்களும், அப்படித்தான் பாதிப்படைகிறார்கள். நாம் நினைப்போம், இவரும் அரசியல் கட்சித் தலைவர், அவரும் அரசியல் கட்சித் தலைவர் , என்றுதான் மக்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு உதாரணம் ,அதேபோல்தான், இன்று லட்சம் பத்திரிகைகள் தமிழ்நாட்டில் இருக்கிறது.

அதில் எத்தனை பத்திரிகைகள்? நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும், சமூக நன்மைக்காகவும், உண்மையான செய்திகளை வெளியிடுகிறது ?என்பதை ஆய்வு செய்து பாருங்கள். பத்து கூட தேருமா?

பல பத்திரிகைகள் ஒரு பத்திரிக்கையில் இருந்து காப்பி, இன்னொரு பத்திரிக்கையில் இருந்து அதை பார்த்து காப்பி, இப்படி காப்பி அடிக்கிற கூட்டமாக இருக்கிற பத்திரிகைகள் ,தொலைக்காட்சிகள் எப்படி இதையெல்லாம் மக்களின் நலனுக்காக கொண்டு போய் சேர்ப்பார்கள்?

இதை சேர்த்தால் அவர்களுக்கு எந்த நன்மையும் கிடைக்காது .எந்த பலனும் கிடைக்காது. அவர்களை பாராட்டினால் அவர்கள் செய்வதெல்லாம் நல்லது என்று புகழ்ந்தால், பணம் கொடுப்பார்கள்.

செய்தி துறையில் சலுகை, விளம்பரங்கள் கொடுப்பார்கள். அரசு அடையாள அட்டை கொடுப்பார்கள்.

ஆனால், மக்கள் அதிகாரம் நீ கொடுத்தாலும், கொடுக்கவில்லை என்றாலும் ,இந்த மக்களுக்காக மக்கள் நலனில், தேச நலனுக்காக ,சமூக நலனுக்காக, தொடர்ந்து செய்திகளை வெளியிடும். இது வியாபார நோக்கத்திற்காக அல்ல.

Popular posts
Tamil Nadu Government Journalists Identity Card? Or circulation ID card of magazines? Can you give a proper explanation for this? - Press Officers.
படம்
சிவவாக்கிய சித்தரின்! ஆன்மீக கொள்கை, செயல்பாடுகள் பற்றிய உண்மைகள் .
படம்
பறையர் இன மக்களுக்கு தங்கள் வரலாறு தெரியாமல், ஆளுக்கு ஒரு கருத்து பேசுகிறார்கள் . இதுபற்றிய கடந்தகால வரலாற்று உண்மைகள் என்ன?
படம்
நாட்டில் அரசியல் கட்சிகள் பரிந்துரையில் ,தகுதியற்ற நீதிபதிகள் நியமனம்! இன்று நீதித்துறையில் ,நீதியை நிலை நாட்ட முடியாமல், வழக்கறிஞர்கள் போராடும் அவல நிலையா?
படம்
கரூர் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட நிலையில்! திமுக ஏன் பதறுகிறது? - எதிர்க்கட்சித் தலைவர் அதிமுக பழனிசாமி ?
படம்