நாட்டு மக்களுக்கு தற்போதைய காலகட்டத்தில் பல சட்டங்கள் திருத்தப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

அதில் முக்கியமாக அரசியல் கட்சிகளின் அராஜகங்கள் ,அதாவது கட்டப்பஞ்சாயத்து, ரவுடிசம் ,கொலை ,கொள்ளை, போதைப் பொருள் கடத்தல், போன்ற பல சமூக விரோத செயல்களில் ஈடுபடக் கூடியவர்கள் அரசியல் கட்சி என்று மக்களிடம் அடையாளப்படுத்திக் கொண்டு, காவல்துறையை கையில் போட்டுக் கொண்டு, இந்த வேலைகளை செய்து வருகிறார்கள்.

அப்படி இல்லை என்றால், ஆளும் கூட்டணி கட்சி கூட்டணி என்று தற்போதைய விடுதலை சிறுத்தைகள் கட்சி போன்று பல அல்லது திமுக ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் என்று சொல்லிக்கொண்டு, இந்த அரசியல் கட்சிகளின் அராஜகங்கள் ,நாட்டில் அதிகரித்த வண்ணமே இருக்கிறது.

அதுமட்டுமல்ல, ஒரு அரசியல் கட்சியை, இன்னொரு அரசியல் கட்சியினர் பழிவாங்கவும், பி.சி.ஆர் கம்ப்ளைன்ட் கொடுத்து, எதிரியை பழி வாங்குகிறார்கள். அது தவிர, தற்போது பிஜேபியில் சிறுபான்மை இனப் பிரிவு தலைவர் வேலூர் இப்ராஹிம் மகன் மீது போதைப்பொருள், கஞ்சா வைத்திருந்ததாக போலீசார் பொய் வழக்கு போட்டு, அவரது மகனை சித்திரவதை செய்வதாக, அவரே வெளிப்படையாக மக்களிடம் தெரிவிக்கிறார்.

தவறு செய்திருந்தால், என் மகன் சட்டத்தின் முன் நிறுத்துங்கள் ,நீதி மன்றத்திலே ,அதற்கான தண்டனை எதுவாக இருந்தாலும், என் மகனுக்கு கொடுக்கட்டும் என்று அவரே தெரிவிக்கிறார். அப்படி என்றால் ,ஒரு நிரபராதியை போலீஸ் இது போன்ற பொய் வழக்குகள் மூலம், சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு ,அரசியல் கட்சிகளின் ஏஜெண்டுகளாக செயல்படுவது மிக, மிக தவறான ஒன்று.மேலும்,

அரசியல் கட்சிகளின் அராஜகங்களுக்கு துணை போகக் கூடிய காவல் துறைக்கும், அரசியல் கட்சியினருக்கும் ,நாடாளுமன்றத்திலே, கடுமையான சட்டங்கள் நாட்டு மக்களின் நலன்களுக்காக கொண்டு வரப்பட வேண்டும். இது காலத்துக்கு ஏற்ப இந்த சட்டங்கள் மாற்றப்பட வேண்டும் .

ஒரு காவல்துறை அதிகாரிகள் பொய் வழக்கு போடுகிறார்கள் என்றால், அவர்களை சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும். மேலும், அந்தப் பொய் வழக்கு, அவருடைய தொழிலில் ,அதாவது அவர் பணியில் இருந்து நீக்கப்பட வேண்டும். அல்லது செய்த தவறுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டும்.

அதேபோல் தான், அரசியல் கட்சிகள் அவருடைய முக்கிய நிர்வாகிகள் யாராவது தற்போது திருமாவளவன் கட்சியில் ஒரு வழக்கறிஞரை தாக்கினார்களே அது போன்ற செயல்கள், அந்த காலத்தில் ,எந்த அரசியல் கட்சியிலாவது இருந்ததுண்டா? இருந்தால் நிரூபிக்க முடியுமா?

அப்போது அரசியல் கட்சிகள் எப்படி செயல்பட்டது? இப்போது இருக்கிற அரசியல் கட்சிகள் எப்படி செயல்படுகிறது? அதேபோல்! அப்போது இருந்த காவல்துறை அதிகாரிகள் நேர்மைக்கு இலக்கணமாக இருந்தார்கள். இப்போது இருக்கிற காவல்துறை அதிகாரிகள், ஆளுங்கட்சிக்கும், அரசியல் கட்சிக்கும் ,எடுபிடி வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்.

மேலும், அந்த காலத்தில் அரசியல் கட்சிகள் ,பொதுநலத்திற்காக இருந்தது ,இருந்தார்கள். இந்த காலத்தில் அரசியல் கட்சிகள் சுயநலத்திற்காகவும், அவர்களுடைய வருமானத்தையும், குடும்ப வருமானத்தையும், சொத்து சேர்க்கவும் ,அரசியல் கட்சியாகி விட்டது. அதனால், காலத்திற்கு ஏற்ப இந்த சட்டங்கள்எல்லாம் மாற்றப்பட வேண்டும்.மேலும்,

அந்த காலத்தில் அரசியலுக்கு வருபவர்கள் ,கௌரவத்திற்காக வந்தார்கள். இந்த காலத்தில் அரசியலுக்கு வருபவர்கள், கொள்ளையடிக்கவும் ,ஊரை ஏமாற்றவும், பொது சொத்துக்களை எப்படி பங்கு போடலாம்? என்றும் இதற்கு தான் அரசியல் கட்சிகள் மூலம் அதிகாரத்தை கைப்பற்ற நினைக்கிறார்கள்.தவிர, ஊடக மைக்குகளில் பேசுபவர்கள் எல்லாம் பெரிய அரசியல்வாதிகளாக ஆகிவிடுகிறார்கள். இதுதான் கார்ப்பரேட் பத்திரிக்கை தொலைக்காட்சிகள் செய்யக்கூடிய போலி பத்திரிக்கை பிம்ப அரசியல்!

இதனால், பாதிக்கப்படுவது, பொதுமக்கள் மட்டுமல்ல, சமூக ஆர்வலர்கள், சமூகநலன் பத்திரிகைகள், அப்பாவி பொதுமக்கள், இவர்கள் அனைவருக்கும் நாட்டில் மிகப் பெரிய மறைமுக அச்சுறுத்தல், மிரட்டல், பொய் வழக்குகள், ஊழல்கள் ,மோசடிகள், வன்முறைகள், அநியாயங்கள் ,அக்கிரமங்கள் நடைபெறுவதற்கு நாட்டில் காவல்துறையும் ,அரசியல் கட்சியினரும் ,முக்கிய பங்கு வைக்கிறார்கள்.

இதில் சில அவர்களுக்கு ஆதரவான பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும் கூட ,உடந்தையாக செயல்படுகிறார்கள். பணம் கொடுத்தால் எப்படி வேண்டுமானாலும், செய்தி எழுதுகிறவர்கள் , சோசியல் மீடியாக்கள், கூலிக்கும் மாரடைக்க கூடிய கூட்டங்கள் ,ஒரு பக்கம் இருக்கிறது .இந்த கூட்டங்கள் சமூகத்தின் உண்மையை எடுத்துச் சொல்வதில்லை.

இதனால் பாதிக்கப்படுவது ,அப்பாவி மக்களும் ,நிரபராதிகளும் தான் தண்டிக்கப்படுகிறார்கள். சட்டம் அரசியல் அதிகாரம், அரசியல் கட்சி பலம், பண பலம் ,மூலம் ஏழை, எளிய நடுத்தர மக்களின் உரிமைகள் நசுக்கப்படுகிறது.

ஆதிக்க சக்தி என்பது இன்று அரசியல் கட்சிகளின் அராஜகங்களாகவே இருக்கிறது. திருமாவளவன் அடிக்கடி ஒன்று சொல்லுவார் அது என்ன எனறால் , ஆதிக்க ஜாதி என்று குறிப்பிடுவார் இப்போது யார் ஆதிக்கம் செலுத்துகிறார்கள்? என்பதை இவருடைய கட்சியினர் அராஜகங்களே நாட்டு மக்கள் தெரிந்து கொண்டார்கள்.
அதனால்,பிரதமர் நரேந்திர மோடி இந்த சட்டங்கள் சாமானிய மக்களுக்கும், ஏழை, எளிய நடுத்தர மக்களுக்கும் ,அவசியமானது என்பதை புரிந்து அனைத்து அரசியல் கட்சிகளுக்கும், அப்பாற்பட்டு மக்கள் நலனுக்காக இந்த சட்டங்கள் மாற்றப்பட வேண்டும் .

அதுவரை அரசியல் கட்சி என்பது ஆதிக்க சக்திகளின் அராஜகமாகவும் மக்களின் உரிமைகளை நசுக்கப்படக்கூடிய சக்தியாகவும், நாட்டில் இருந்து வருகிறது. இது உடனடியாக தடுக்கப்பட வேண்டும் . இதை நாடாளுமன்றத்தில் அரசியல் கட்சியினரின் அராஜகங்களுக்கு அந்தந்த அரசியல் கட்சிகள் பொறுப் பேற்று, கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யும் அதிகாரத்தை தேர்தல் ஆணையத்திற்கு கொடுக்கப்பட வேண்டும்.

இது தவிர, ஊழல் வழக்குகள், மோசடி வழக்குகள், வன்முறைகள், குற்ற வழக்குகள், குற்ற வழக்குகளின் பின்னணிகள், கொண்டவர்கள் தேர்தலில் வேட்பாளராக நிற்க தகுதி அற்றவர்களாக சட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டும். அரசியலுக்கும் அரசியல் கட்சிக்கும் தகுதியானவர்கள் இருக்க வேண்டுமே ஒழிய தகுதியற்ற கூட்டங்கள் தேவையற்றது.

இதுதான் தற்போது உழைப்பவனை முட்டாளாக்கி, ஊரை ஏமாற்றுபவன் புத்திசாலியாக ,அரசியல் கட்சிகள் செய்து கொண்டிருக்கிறது. இந்த நிலை மாற்றப்பட வேண்டும். பொய் வழக்குகள் போட்டு பழிவங்குவது, நிரபராதிகள் தண்டிக்கப்படுவது ,இவை அத்தனைக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றால் நாடாளுமன்றத்தில் கடுமையான சட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டும்.

மேலும், நாட்டில் அரசியல் கட்சிகள் பெருகுவதல், சமூக நலன் பணிகளை செய்வதற்கு, பதிலாக ஊழலும், அராஜகங்களும் ,வன்முறைகளும் ரவுடியிசமும் தான் அதிகரிக்கிறது. குறிப்பாக அரசியல் கட்சிகள் பெயரில் சமூக விரோத கும்பல்கள் அதிகரிக்கிறது. இதனால் பொது சொத்துக்களை பங்கு போடுவது அரசியல் கட்சிகளிடையே போட்டி ஏற்பட்டுள்ளது. இது சமூகத்திற்கு எதிரான வேலை.

மேலும்,இவர்களால் உழைக்கும் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். அரசியல் கட்சிக்கு தகுதியற்றவர்கள், அரசியல் கட்சி என்று சொல்லிக் கொள்வதில் அர்த்தம் இலலை. அதற்கு தலைவன் என்று கட்சி நடத்துவதற்கும் தகுதி இல்லை. இப்படிப்பட்ட அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் உடனடியாக ரத்து செய்ய வேண்டும். தவிர, ஒவ்வொரு அரசியல் கட்சியும் நாட்டில், சமூக விரோத செயல்களில் , எத்தனை பேர் ஈடுபட்டு இருக்கிறார்கள்? அது பற்றி மத்திய உளவுத்துறை ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

தவிர , ஒவ்வொரு அரசியல் கட்சியில் ,எவ்வளவு புகார்கள்? மாதந்தோறும் ஆண்டுதோறும் என்பதை நாட்டு மக்களுக்கு வெளிப்படையாக மத்திய உளவுத் துறை தனது இணையதள பக்கத்தில் , வெளியிட்டு நாட்டு மக்களுக்கு அதை தெரிவிக்க வேண்டும்.
மேலும், ஒவ்வொரு மாநிலத்திலும் எத்தனை என்பதை ஆய்வு செய்து, அந்த கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும். அப்போதுதான் இது அரசியல் கட்சியா? அல்லது சமூக விரோத கும்பலா ?என்பது நாட்டு மக்களுக்கு தெரிய வரும்.