நாட்டில் எத்தனையோ சித்தர்கள் மகன்கள் ஜீவசமாதி அடைந்திருக்கிறார்கள். வாழும் சித்தர்கள் ஆகவும் இருக்கிறார்கள். அவர்கள் தான் இந்த உலகத்தை வழிநடத்தக்கூடிய தெய்வங்கள். ஜீவசமாதி அடைந்தவர்கள் சூட்சமமான அருபமான உருவத்தில் நடமாடுகிறார்கள். வாழும் சித்தர்கள் நடமாடும் தெய்வங்களாக இருக்கிறார்கள்.
உலகை வழி நடத்தக்கூடிய சித்தர்கள் ,மகான்கள், என்றும் அழிவற்ற பரமாத்மாக்கள். கலியுகத்தில் எத்தனையோ தெய்வங்கள் கோயில்கள் இருக்கலாம்.அந்த கோயில்களுக்கு எளிதாகவும் சென்று வரலாம். ஆனால், மகான்களின் ஜீவ சமாதியும், வாழும் சித்தர்களாக இருக்கக்கூடியவர்களையும், அவர்களுடைய அனுமதி கிடைத்தால் தான் நாம் அவர்களை போய் பார்க்க முடியும் .இதுதான் நிதர்சனமான உண்மை. .
மேலும்,தெய்வத்தின் அனுகிரகம் இருந்தால் தான் மகான்களின் ஜீவ சமாதிகளை அணுகி சகல பாவங்களையும், கர்ணவினைகளையும் துடைத்தெறிய முடியும். இது எந்த கோயில்களிலும், எந்த சாமியும் கர்ம வினையை துடைத்தெறியாது . இவர்கள் என்றும் அழிவற்ற பரம்பொருள் .இவர்கள் பிறப்பு மனிதர்களாக இருந்தாலும், தெய்வ நிலையை அடைந்தவர்கள்.
அதாவது பரம்பொருளிடம் ஐக்கியமான பரமாத்மாக்கள், ஜீவாத்மா பரமாத்மாவை அடைவதே முக்தி. அதுதான் மனித வாழ்வின் குறிக்கோள். ஆனால், ஒரு மனிதன் அந்த நிலையை எளிதில் அடைய முடியுமா?ஒரு காலம் முடியாது. இவர்கள் எல்லாம் வாழ்ந்த வாழ்க்கை, அவர்கள் போராடிய போராட்டம் அது பற்றி வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
ஒவ்வொரு மகன்களும், சித்தர்களும் அவர்களுடைய குடும்ப வாழ்க்கை மிகவும் போராட்டமானது. அதைத்தான் நதிமூலம், ரிஷிமூலம் பார்க்கக் கூடாது என்பார்கள். அவர்களுடைய கடந்த கால வாழ்க்கையை பற்றி நினைப்பவர்கள் ,இப்போது இருக்கும் நிலையை பற்றி நினைப்பவர்கள். இது இரண்டுக்கும், சம்பந்தம் இல்லாத ஒன்று. அதாவது மனித ஆத்மா அந்த சித்து நிலை அடைந்த பிறகு, அவர்களுக்கு எதுவுமே தேவையற்றது .
அவர்கள் கேட்பதெல்லாம் அவர்கள் பக்கத்திலே, அருகிலே வந்து நிற்கும் .அப்படி இருக்கும்போது ,அவர்களுக்கு எதற்கு இந்த பொருட்கள்? அதனால், அவர்கள் இதையெல்லாம் விரும்புவதில்லை. நாம் தான் விரும்புகிறோம் .நாம்தான் தேவை என்று அதிகப்படியாக ஆசைப்படுகிறோம் .
ஆனால், அவர்கள் ஆசையை துறந்து இறைவன் திருவடியில் வாழ்பவர்கள். அப்படிப்பட்டவர்களை குருவாக ஏற்று எத்தனையோ புண்ணிய ஆத்மாக்கள், வாழ்ந்து கொண்டிருக்கிறது. அவர்களை குருவாக அடைவதற்கே புண்ணியம் செய்திருக்க வேண்டும். இது சாதாரண விஷயம் அல்ல, ஏனென்றால் இந்த உலக வாழ்க்கையில் இருந்து அவர்களை வெற்றி பெற செய்பவர்கள் அவர்கள் தான், அவர்களுடைய அனுகிரகம் இருந்தால், இறைவன் திருவடியை அடைய முடியும்.
ஆனால், இன்றைய சாமியார்கள் என்ற போர்வையில் பல கோடிகளை, பல லட்சங்களை, மக்களிடம் வாங்கிக் கொண்டு, சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். எல்லாவற்றையும் துறந்தவர்கள் தான் சித்தர்கள். மேலும் ஆசைகளை வெறுத்தவர்கள் இந்த உலக இன்பங்களை வெறுத்தவர்கள், தான் இறைவனிடம் நெருங்க முடியும். ஆனால் பற்று அறுக்காமல், பரமனை அடைய முடியாது .மேலும்,
, உலகியல் வாழ்க்கை இன்பங்களை பற்றி கொண்டு, தொற்றிக்கொண்டு, எல்லாவற்றையும் சேர்த்துக் கொண்டு, நிச்சயம் பரம்பொருளை யாராலும் அடைய முடியாது .