சட்டமன்றத்தில் இயற்றப்படும் மசோதாக்கள் அனைத்திலும் கவர்னர் கையொப்பமிட வேண்டும் என்ற கருத்து தவறானது.

மக்களுக்கு எது முக்கியத்துவம் ஆனது? எது அவசியமானது ?என்பதை அறிந்து தான் கவர்னர்கள் அதில் கையெழுத்திட வேண்டும். இது தவிர, அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான, முரண்பாடான மசோதாக்களுக்கு கவர்னர்கள் அதை திருப்பி அனுப்பினால், தவறு இல்லை .கிடைப்பில் போட்டாலும், தவறில்லை .
அதற்கான காரணத்தை, விளக்கத்தை ,அவர் சொல்லி விட வேண்டும் .சொல்லாமல் இருந்ததால், தமிழ்நாட்டில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு இப்போது சுப்ரீம் கோர்ட் அளவுக்கு சென்று ,இந்த பிரச்சனை இவ்வளவு பெரிய முக்கியத்துவம் ஆகியிருக்காது. இதை கவர்னர் ரவி தவிர்த்து விட்டார்.

மேலும், இவர் ஒரு தவறு செய்தார் என்றால், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளும், தவறை செய்து விட்டார்கள் .அது என்ன என்றால்? எங்களுடைய சொந்த அதிகாரத்தை ஆர்டிக்கல் 143 வைத்து நாங்கள் இந்த சட்டத்தை நிறைவேற்ற இதற்கு ஒப்புதல் அளிக்கிறோம் . அந்த சட்ட மசோதாவுக்கு இவர்களே ஒப்புதல் அளித்து விட்டார்கள். இங்கதான் பிரச்சினையை ஆரம்பித்தது.

இதை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அவர் (வந்த வழி) எப்படி நீதிபதியாக ஆகியிருக்கிறார்? என்றால் அரசியல் கட்சியின் அதாவது (திமுக)ஆட்சியாளர்கள் மூலம் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார் என்பது இதற்கு ஒரு முக்கிய முன் உதாரணம். அதனால் தான், மக்கள் அதிகாரம் திரும்ப, திரும்ப ,நீதிபதிகள் அரசியல் கட்சியினரின் சிபாரிசுகளில் தேர்வு செய்யப்படக்கூடாது என்று மீண்டும் வலியுறுத்துகிறேன்.

அதனால்தான், ஸ்டாலினுக்கு இந்த மசோதாவை அவருடைய சொந்த அதிகாரத்தில் அதை நிறைவேற்றி விட்டார் என்கிறார்கள் நீதித்துறை வட்டாரம் . மேலும்,இது அரசியலமைப்பு சட்டம். கவர்னரின் சொந்த உரிமையில் தலையிட சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளுக்கு அதிகாரம் இல்லை. இது அரசியல் அமைப்பு சட்டம். அவர்கள் கிடப்பில் போடுவது, அல்லது மசோதாவில் திருப்பி அனுப்புவது, இது எல்லாம் கவர்னரின் அதிகாரம்.
அதேபோல் அவர்களுக்கு காலக்கெடு விதித்து, மூன்று மாதத்திற்குள் எல்லா மசோதாக்களுக்கும் நீங்கள் கையெழுத்திட வேண்டும் என்று ஜனாதிபதிக்கும், கவர்னருக்கும் உத்தரவிட்டது தவறு.மேலும்,
நீதிபதிகள் இந்த அதிகாரத்தை எதற்கு பயன்படுத்த வேண்டும்? என்றால், ஒரு நிரபராதி சட்டத்தின் முன் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்ற ஒரு சூழ்நிலை ஏற்படும் போது ,நீதிபதிகள் அப்போதுதான் மனசாட்சியுடன் இந்த அதிகாரத்தை கையில் எடுக்க வேண்டும்.
ஆனால், அரசியலமைப்பு சட்டத்தில் கவர்னரின் அதிகாரத்தை பிடுங்கி, முதல்வருக்கு வழங்குகிறார்கள். அது எப்படி என்றால், பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிப்பது கவர்னர்கள் தான் .ஆனால், அந்த அதிகாரம் சட்டமன்றத்திலே மசோதாவாக நிறைவேற்றி, முதலமைச்சர்கள் பறிக்கப் பார்த்தார்கள். அதற்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சட்டத்தை நிறைவேற்றியது சரிதான். அந்த மசோதா நிறைவேறியது என்று இவர்களாக உத்தரவு போட்டு விட்டார்கள்.
இது எங்க போய் முடியும்? என்றால் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனம் ஊழலில் தான் போய் முடியும். அப்படி என்றால்! இந்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் இந்த ஊழலுக்கு துணை போகிறார்கள் என்பதுதான் அர்த்தம். அதனால் ,அரசியல் சாசனத்தில் கவர்னர்கள், மசோதாக்கள் மீது இவர்கள் சொல்லக்கூடிய அனைத்திலும் கையெழுத்து போட வேண்டிய அவசியம் இல்லை.
அப்படி என்றால் தேர்வு செய்யப்பட்ட மக்களால் ஆன (நாங்கள்) பிரதிநிதிகள் எதற்கு என்கிறார்கள்? உங்கள் சுயநலத்திற்கு கொண்டுவரும் மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை .மக்கள் நலனுக்கு முக்கியத்துவம் இருந்தால், கவர்னர் மசோதாக்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இல்லை என்றால் !
அதை திருப்பி அனுப்பலாம், கிடப்பில் போடலாம் ,எதை வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் ,ஒன்று மட்டும் கவர்னர் இந்த மசோதா மீது மக்களுக்கு அறிவிப்பு வெளியிட வேண்டும் . குறிப்பிட்ட மசோதா மக்கள் நலனுக்கு எதிரானது இது தேவையற்றது. என்பதை குறிப்பிட்டு அந்த மசோதாவை பற்றி, மக்களுக்கு பத்திரிக்கையில் தெரிவித்து விட வேண்டும்.