கட்சியை துவக்கிய நாளிலிருந்து மக்கள் பணி என்பது இல்லை,அரசியல் பணியும் இல்லை. இதற்கு அடுத்தது இவர் ஆரம்பத்தில் பேசும் போது யாரை முன்னிலைப்படுத்துகிறார் ?என்றால்,

பெரியார் ,அம்பேத்கரை முன்னிலைப்படுத்துகிறார். தற்போது எம்ஜிஆரையும் ,விஜயகாந்தையும் முன்னிலைப்படுத்தி ரோல் மாடலாக பேசுகிறார் . இவருக்கு விஜயகாந்த்திடம் நெருக்கம் இருந்திருக்கலாம். ஏனென்றால் இவர் அப்பாவின் குடும்ப நண்பர். ஆனால், எம்ஜிஆர் இடம் நெருங்கி இருக்க முடியாது. இவர் சின்ன பையனாக இருந்திருப்பார்.மேலும்,

சினிமா வேறு ,அரசியல் வேறு சினிமாவில் நடிப்பதெல்லாம் அரசியலில் நடிக்க முடியாது .அது நிழல், இது நிஜம், விஜய் இடம் பணம் இருக்கிறது. தவிர, விஜய்க்கு சப்போர்ட் செய்ய வெளிநாட்டு கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள். அவர்களுடன் இங்கிருக்கின்ற கிறிஸ்தவர்களும் இணைப்பில் இருக்கிறார்கள்.

இப்போது அவர்களுக்கு இந்தியாவில் தன்னுடைய மதம் சார்ந்த ஒரு பொலிட்டீசியன் தேவை. அதற்கு ஜோசப் விஜய் தேர்வு செய்து இருக்கிறார்கள். ஜோசப் விஜய் பின்னால் யார் முக்கிய புள்ளியாக இருக்கிறார்கள்? ஆதார் அர்ஜுன், ஜான் ஆரோக்கியா சாமி, இவர்கள்தான் வெளியே தெரிகிறது. தெரியாதவர்கள் பலர் இருப்பார்கள்.இங்கே ,புசி ஆனந்த், பேருக்கு இருக்கிறார்.

இவர்கள் தமிழ்நாட்டின் அரசியலை படிக்காதவர்கள். மேலும்,திமுக என்ற கட்சிக்கு விதை போட்டவர்கள் அண்ணாதுரை மற்றும் அவரை சார்ந்த பல முக்கிய புள்ளிகள் தான் இதற்கு வித்திட்டவர்கள்.அப்போது கருணாநிதி அந்தக் கூட்டத்துக்கு வெளியில் இருந்தவர் தான். இன்று அதையே தனக்குள் வைத்துக் கொண்டார்.
அதற்கு பக்க பலமாக இருந்தவர் எம்ஜிஆர் . இவர் இல்லை என்றால் கருணாநிதி முதலமைச்சராக ஆகியிருக்க முடியாது. அது கட்சியின் வரலாறு தெரிந்தவர்களுக்கு நன்கு தெரியும். இப்படி ஒவ்வொரு கட்சியும் அன்று மக்களிடம் விதைக்கப்பட்ட அரசியல், இன்று ஆலமரமாக அது நிற்கிறது. ஜோசப் விஜய் பணம் இருக்கிறது .அவருடன் அதற்கு தகுதியான ஆட்கள் இல்லை.
அவர் நல்ல மனிதராக கூட இருக்கலாம். அது பிரச்சனை இல்லை .ஆனால், இவருக்கு சப்போர்ட்டிபாக யார் இருக்கிறார்கள்? என்றால் கிறிஸ்தவர்கள் தான் தீர்மானிக்கும் இடத்தில் ,அதிக சப்போட்டிவ் . மற்றவர்கள் கலந்தார் போல் வேலைக்காரர்களாகத்தான் இருப்பார்கள். மாநாட்டில் விஜயின் பேச்சு!
இவர் கொள்கை எதிரியை பிஜேபியை சொல்லிவிட்டார். அரசியல் எதிரியை திமுகவை சொல்லிவிட்டார். முதலில் ஆரம்பத்தில் பெரியாரை , அம்பேத்கரை சொன்னார்.

இப்போது அதையெல்லாம் விட்டு, விட்டு எம்ஜிஆரை சொல்கிறார்,விஜயகாந்தை சொல்கிறார். தவிர, ஸ்டாலினை அங்க்கில் என்று பேசிவிட்டார்.இது தேவை தானா? எதைப் பேச வேண்டும் ?என்று கூட சரியாக இவருக்கு எழுதிக் கொடுக்கவில்லை.

மேலும், எம்ஜிஆரை அரசியலில் முன்னிலைப்படுத்தி பேசி இருக்கிறார். அரசியலுக்கு வந்து முதலமைச்சராக ஜெயித்தார் .ஆனால் ,அரசியலை சொதப்பி வைத்து விட்டு தான் போனார்.இது அரசியல் தெரிந்தவர்களுக்கு தெரியும். அந்த உண்மையை சீமான் சொல்கிறார் .அது உண்மையான விஷயம் தான்! என்ன என்றால் ?எம்ஜிஆர் அரசாங்கத்திடமிருந்த கல்வியை, தனியாரிடம் ஒப்படைத்தார் .மருத்துவத்தை அரசாங்கத்திடமிருந்து தனியாரிடம் ஒப்படைத்தார் .இது இரண்டுமே எம்ஜிஆர் செய்த மிகப்பெரிய தவறு.

எது எங்கு இருக்க வேண்டுமோ, அது அங்கு இருந்தால்தான் மக்களுக்கு அது நல்லது. அது மட்டுமல்ல, எம்ஜிஆர் அவருடைய கட்சிக்காரர்களுக்கு சாராயக் கடைகளை ஏலம் விட்டு லட்சாதிபதிகளாக ஆக்கினார். கல்வி கல்லூரிகளை ஆரம்பிக்க சொல்லி அவர்களை எல்லாம் தற்போது கல்வி தந்தையர்களாக ஆக்கிவிட்டார் .இது ஏன் சொல்கிறேன் ?என்றால் , மக்களுக்கு இலவசமாக இருந்த அத்தனையும், இன்று வியாபாரமயமாக ஆக்கிவிட்டார்கள்.

எம்ஜிஆர் சத்துணவு தந்த வள்ளல் என்று போற்றப்பட்டார். சத்துணவு போடவில்லை என்றால், ஏழை மாணவர்களுக்கு அது ஒரு தேவை தான். இதற்கு முன்னரும் இருந்தது. என்ன அந்த கோதுமை சாதம் போடுவார்கள். சோறு போட்டு கல்வியை வியாபாரம் ஆக்கி வைத்து விட்டு போனார் எம்ஜிஆர். சோறு போட்டதை விட அரசின் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல் போனார்.
எம்ஜிஆரிடம் நல்ல குணம் நற்பண்பு அதை எல்லாம் குறை சொல்ல முடியாது. உதவி செய்வதில் அவர் தனித்துவம் மிக்கவர். ஆனால், அரசியலில் எதை செய்ய வேண்டும்? எதை செய்யக்கூடாது? எது மக்களுக்கு தேவை? என்பதை விட்டு விட்டு, சோறு போட்டு பெருமை தேடினார். இவருடைய கட்சி காரனை அரசு பணியிலும், காண்ட்ராக்ட் கமிஷனிலும், இது போன்ற பெரிய நிறுவனங்களையும் ஆரம்பிக்க சொல்லி கோடீஸ்வரர்களாக ஆக்கிவிட்டார்.
இப்படிப்பட்ட அரசியல், உழைப்பவனுக்கு எதிராக இவை அத்தனையுமே நின்று கொண்டு, இன்று தமிழகத்தை ஆட்டிப் படைக்கிறது. இது இந்த அரசியல் சரி செய்ய வேண்டிய வேலை .அதற்கு மறைமுகமாக ஆதரவாக இருப்பது இந்த கார்ப்பரேட் பத்திரிகை தொலைக்காட்சிகள்.

பத்திரிக்கையின் சுதந்திரம் பறிக்கப்பட்டு, அது அரசின் கொள்கை முடிவாக செய்தித்துறை பத்திரிகைகளுக்கு சலுகை, விளம்பரங்களை கொண்டு வந்து விட்டார்கள் .செய்தித் துறையின் இந்த அடிமை கூட்டமாக பத்திரிக்கை, தொலைக்காட்சிகள், சலுகை விளம்பரத்திற்காக எதை வேண்டுமானாலும், அவர்கள் சொல்லுகின்ற செய்தி உண்மை என்று மக்களிடம் சொல்லிக் கொண்டிருக்கிறது.

இப்படி இந்த அரசியலில் இருந்து தமிழக மக்களுக்கு மாற்றம் தேவை. இந்த மாற்றத்தை எந்த அரசியல் கட்சி தமிழகத்தில் கொடுக்கப் போகிறது என்பதுதான் மக்களின் அது மட்டுமல்ல,தமிழ்நாட்டில் ஊழலற்ற,நேர்மையான, உண்மையான அரசியல் மக்களுக்கு தேவை .
இப்படிப்பட்ட இந்த அரசியலை ஜோசப் விஜய் இதுவரை மக்களிடம் கொண்டு செல்லவில்லை .அவருக்கும் அரசியல் தெரியாது. தெரிந்தவர்களை வைத்துக் கொண்டு, அவரும் அதை செய்யவில்லை. கூட்டத்தை காட்டுவது அரசியல் அல்ல !பேசிவிட்டு போவது அரசியல் அல்ல! நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? உங்கள் கொள்கை என்ன? உங்களின் கொள்கை எதிரி பிஜேபி என்று சொல்கிறீர்கள். பிஜேபி இந்துக்களுக்கு முக்கியத்துவம் ஆன ஒரு அரசியல் கட்சி. அப்போ இந்துக்களுக்கு எதிராக கொள்கை உள்ள கட்சி தமிழக வெற்றி கழகமா?

மேலும், அரசியல், சினிமா இரண்டு துறையுமே அதிர்ஷ்டத்தில் முக்கிய பங்கு வகிக்கக்கூடிய இடம் .அதில் உங்களுடைய அதிர்ஷ்டம் எப்படி இருக்கிறது? என்பது, கணிக்க நான் ஜோதிடஅல்ல. பதவிக்கு வருபவர்கள் அதிர்ஷ்டம் அடித்து வந்து விடுகிறார்கள். உதாரணத்திற்கு உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆக ஆகிவிட்டார். அவர் கட்சியில் !அரசியலில் அவருடைய உழைப்பு என்ன? இது அதிர்ஷ்டம் அல்லவா?

அதனால் ,விஜயின் அரசியல்! 2026 தேர்தலில் தான் தெரிய வரும். இது எப்படி போகிறது ?எதை நோக்கி செல்கிறது? ஆனால், ஒன்று மட்டும் தெளிவாக தெரிகிறது .விஜய்க்கு அரசியல் ஆலோசகர்கள் மற்றும் தகுதியானவர்கள் இவர்களிடம் இல்லை. விஜய் கிறிஸ்தவர்களை மட்டும் நெருங்கி வைத்துக் கொண்டால், விஜய்க்கு இந்துக்களின் ஓட்டு ஒரு காலம் விழாது.