ஆன்லைன் கேமிங் மசோதாவை நிறை வேற்றிய மத்திய அரசு (ஆன்லைன்) இணையதள பத்திரிகைகளுக்கு ஏன் ?ஒப்புதல் அளிக்கக்கூடாது ? - மக்கள் அதிகாரம் மீடியா.

 

மத்திய அரசு ஆன்லைனில் கேம் விளையாட அதற்கு சட்டம் கொண்டு வந்துள்ளது.

அது பணத்தை வைத்து விளையாட அனுமதி இல்லாமல் இணையதளத்தில் கேம் விளையாட சட்டம் கொண்டு வந்துள்ளது. அந்த சட்டம் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த ஆன்லைன் விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளித்த மோடி ஆன்லைன் பத்திரிகைகளுக்கு ஏன் முக்கியத்துவம் அளிக்கக் கூடாது? மேலும், இந்த ஆன்லைன் பத்திரிக்கை என்பது சாதாரணமாக எல்லாரும் படிக்க மாட்டார்கள். அதில் விஷயம் இருந்தால் தான் அந்த கண்டனத்தை ஓபன் பண்ணி படிப்பார்கள்.

இப்படிப்பட்ட ஆன்லைன் முக்கியத்துவம் வாய்ந்தது தான். இதையே பத்திரிக்கை துறையில் சர்குலேஷன் ஆகவும் கொண்டு வரலாம். ஆனால், எல்லாவற்றிலும் ஆன்லைன் என்பது மோசடி வேலையாகவும், இதில் போலிகள் கொண்டு வருகிறார்கள். பத்திரிக்கை துறையில் மட்டுமல்ல எல்லாத் துறைகளிலும் தற்போது நாட்டில் போலிகள் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த போலிகளை எளிதில் அடையாளம் காண முடியும். நானும் பத்திரிக்கை நானும் RNI வாங்கி வைத்து கொண்டு நடத்திக் கொண்டிருக்கிறேன். எப்படி பல ஆயிரக்கணக்கான பத்திரிகைகள் தமிழ்நாட்டில் ஒரு பத்திரிக்கையை பார்த்து காப்பி அடித்துக் கொண்டிருக்கிறார்கள். செய்தியை சரியான முறையில் கொடுக்கத் தெரியாமல் இருப்பவர்கள் எல்லாம் பத்திரிகையாளர்கள் என்று அடையாள அட்டையை காண்பித்துக் கொண்டிருக்கிறார்கள்.

பத்திரிகை என்றால் என்ன ?என்று தெரியாத ஒரு கூட்டம் ,எல்லாம் பத்திரிகை என்று சுற்றி திரிகிறது . இவையெல்லாம் ஒழிக்கப்பட வேண்டும். இது தவிர ,கார்ப்பரேட் மீடியாக்கள் தங்களுடைய செய்திகளை விளம்பரப்படுத்துகிறார்கள். அதாவது அதை மார்க்கெட்டிங் செய்கிறார்கள். மார்க்கெட்டிங் செய்து கூட பெரிய அளவில் அது ஒன்றும் மக்களிடம் போய் நின்றுவிடவில்லை.

இங்கே ஆன்லைன் என்பது அவ்வளவு எளிதில் மக்களிடம் சென்றடைய முடியாது. காரணம் படித்தவர்கள், விஷயம் தெரிந்தவர்கள், விவரமானவர்கள் தான், ஆன்லைனை அதிகம் பார்க்கிறார்கள். இது சோசியல் மீடியா அல்ல. யார் வேண்டுமானாலும், என்ன சொல்கிறார்கள்? என்று பார்த்துக் கொண்டு அதில் வீவ்ஸ் கொண்டு வருவது முக்கிய நோக்கம் அல்ல.

மக்களிடம் உண்மைகள் போய் சேர வேண்டும். எந்த உண்மைகள் அரசாங்கத்திற்கு சொல்ல வேண்டும் ?இதை எல்லாம் தெரிவிக்கின்ற ஒரு முக்கிய இடமாக தான் இணையதள பத்திரிகைகள் இருக்கிறது.

இது ஏன்? தற்போது அவசியமென்றால்! மக்கள் பத்திரிகைகளை வாங்கி படிக்கக்கூடிய மனநிலை எல்லாம் மாறிவிட்டது. ஒரு காலத்தில் பத்திரிக்கை வாங்கி படிப்பது ,அது ஒரு கௌரவமாக ,ஒரு ஹாபிட் ஆக கூட இருந்தது.

இப்பொழுது செல்போனில் பத்திரிக்கை படிப்பது ,மக்களுக்கு அவசியமாகிவிட்டது. ஒரு பஸ்ஸிலோ ,,ட்ரெயின் கிலோ நூற்றுக்கு 99 சதவீதம் செல்போனை தான் நோண்டிக் கொண்டிருப்பார்கள். அதில் அவர்கள் இணையதள பத்திரிகை படிக்கிறார்களா ?அல்லது சினிமா பார்க்கிறார்களா? அல்லது youtube சேனல்களை பார்க்கிறார்களா? ஏதோ ஒன்றை செல்போனில் தான் அவர்கள் கண்கள் பார்த்துக் கொண்டிருக்கும்.

இப்படிப்பட்ட (ஆன்லைன்) தற்போதைய இணையதளத்தின் முக்கியத்துவம் மக்களுக்கு அவசியமாகிவிட்டது .அதனால், மத்திய மாநில அரசின் செய்தித் துறை காலத்திற்கு ஏற்ப சமூக அக்கறையுடன் கூடிய, இணையதள பத்திரிகைகளுக்கு முக்கியத்துவம் அளித்து அரசின் சலுகை ,விளம்பரங்கள் கொடுக்கப்பட வேண்டும் . அது பத்திரிகை சுதந்திரத்தை பாதிக்காமல் ஆட்சியாளர்களின் கொள்கை முடிவாக இருக்கக்கூடாது.

அங்கும் வியாபாரம் நோக்கம் கொண்ட ஆன்லைன் பத்திரிகைகள் மற்றும் அரசியல் கட்சி சார்ந்த இணையதள பத்திரிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை தவிர்க்கப்பட வேண்டும்.மேலும், தகுதியில்லாத போலி பத்திரிகைகளை RNI கேன்சல் செய்து ஒழிக்கப்பட வேண்டும். இதையெல்லாம் சரி செய்தால் தான் பத்திரிக்கை துறையை சீர் செய்ய முடியும்.

Popular posts
கார்ப்பரேட் பத்திரிக்கை தொலைக்காட்சிகள் மற்றும் அரசியல் கட்சிகளின் வியாபாரத்தை இளைஞர்கள்புரிந்து கொண்டால்!அரசியல்உங்கள்எதிர்காலமுன்னேற்றத்திற்கானது .
படம்
காவல்துறையில் பொது மக்களுக்கு மற்றும் பத்திரிகை செய்தியாளர்களுக்கு நடக்கின்ற கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறதா? இந்த சட்டம்?
படம்
போலி சாமியார்களின் வாழ்க்கை எவ்வளவு சொகுசானது?சித்தர் சேஷாத்ரியின் வாழ்க...
படம்
அரசியல் கட்சிகள் மற்றும் கட்சியினரின், கொள்கை, கோட்பாடு, சித்தாந்தம், வேதாந்தம், என்று மக்களுக்காக பேசுவது? சினிமா அரசியலா? இந்த கொள்கைக்கு அர்த்தம் என்ன ?
படம்
மத்திய அரசு! முப்பது நாள் பதவியில் இருப்பவர் சிறையில் இருந்தால், அவருடைய பதவி காலி!இந்த சட்டத்திற்கே! எதிர்க் கட்சிகளுக்கு பயமா? - சட்ட மசோதா நிறைவேற்றம்.
படம்