நாட்டில் ஊழலையும், ஊழல் அரசியலையும், ஊழல்வாதிகளையும் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த என்ன வழி ?

 



மக்கள் அதிகாரம் தொடர்ந்து ஊழலுக்கு எதிராக போராடும் ஒரு பத்திரிக்கை. இங்கே மக்களுக்கு ஊழலுக்கும், லஞ்சத்திற்கும், அர்த்தம் தெரியாதவர்கள். லஞ்சத்தைக் கூட ஏற்றுக் கொள்ளலாம் .ஆனால், ஊழலை ஏற்றுக் கொள்ள முடியாது.இது மிகப்பெரிய சர்ச்சையான கருத்து தான். 

ஏனென்றால்! ஊழல் என்பது பல ஆயிரம் கோடிகளில் நடப்பது! லஞ்சம் என்பது ஆயிரம், ஐநூற்றுல் இருந்து லட்சத்திற்குள் நடப்பது! இது இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு. இந்த கோடிகளில் ஊழல் செய்யும் அமைச்சர்கள் தான் அதிகம், எந்த ஒரு உயர் அதிகாரியும் கோடிகளில் ஊழல் செய்ய முடியாது. செய்தால், அவர் தப்பிக்க முடியாது. உடனே அந்த சம்பந்தப்பட்ட துறை மந்திரிகளே, அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து விடுவார்கள்.

மேலும், இந்த மந்திரிகள், கோடிகளையும் தாண்டி ,வெளிநாடுகளில் இவர்களுடைய இந்த முதலீடு போய், அங்கிருந்து மீண்டும் அந்த பணம் இங்கே வந்து, கம்பெனி ஆரம்பிக்க ,அங்கிருந்து ஒரு ஏஜென்ட் தயார் பண்ணி தமிழ்நாட்டிலோ, இந்தியாவுக்கு கொண்டு வருகிறார்கள். இப்படி போகிறது இந்த பிளாக் மணியும், ஊழலும். இது ஒட்டுமொத்த இந்தியாவின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் வேலை. 

ஒரு மாவட்டத்தில் 10 லட்சம் பேர் இருக்கிறார்கள் என்றால்! அந்தப் பத்து லட்சம் பேருக்கான பணம் சர்குலேஷன் குறைந்த பட்சம் ஒரு 50 கோடி என்று வைத்துக் கொள்வோம். இங்கிருந்து ஒரு மாவட்டத்திலிருந்து 500 கோடி போய் விடுகிறது. ஒவ்வொரு மாவட்ட அமைச்சர்களும் 500, 1000 என்று ஆளாளுக்கு பங்கு போட்டுக் கொண்டால் ,பணம் எங்கே இருக்கும்? எங்கே ஏழை எளிய, நடுத்தர மக்களிடம் இந்த பணம் புழங்கும்? 

இதை அப்படியே பாதி கொண்டு வந்து, தேர்தல் நேரத்தில் கருப்பு பணமாக அரசியல் என்றால் என்ன என்று தெரியாத மக்களிடம் பணத்தை கொடுத்து அவர்களுடைய அரசியல் அதிகாரத்தை வாங்கிக் கொள்கிறார்கள். இவர்களுக்கு ஓட்டுரிமை கொடுத்ததே தவறு. எல்லாமே சுயநல அரசியல். இப்போது திமுக எடுத்துக் கொண்டால், அதிமுக எடுத்துக் கொண்டால், எல்லா அரசியல் கட்சிகளும், இந்த சுயநல அரசியலை தான் முன்னெடுத்து தமிழ்நாட்டில் செய்து கொண்டிருக்கிறார்கள். எதற்காக நீங்கள் பணம் கொடுக்க வேண்டும்? உங்களை அரசியல் தெரியாத முட்டாள்கள் பணம் கேட்டார்களா? நீங்களாக கொண்டு போய் அவர்களிடம் கொடுத்து அரசியல் அதிகாரத்தை விலை பேசுகிறார்கள். இதனால், உழைப்பவன் இந்த சமூகத்தில் முன்னேற முடியாது . 

 ஒரு கட்சி கொடியை பிடித்துக் கொண்டு, படிக்காத கூட்டங்களை சேர்த்துக்கொண்டு, அதாவது கூட்டத்தைக் காட்டி படித்தவனை, தகுதியானவனை மிரட்டுவது. இதுதான் இந்த சுயநல அரசியல் இது கீழ் மட்டத்திலிருந்து மேல் மட்டம் வரைக்கும் இந்த அரசியல் வாதிகள் என்ற போர்வையில் செய்து கொண்டிருக்கிறார்கள்.

 கீழே லட்சத்தில் இவர்கள் கணக்கு என்றால், மேலே கோடிகள், அதற்கு மேலே பல நூறு கோடிகள், அதற்கு மேலே பல ஆயிரம் கோடிகள், இதுதான் இந்த ஊழல் அரசியல். இது நன்றாக மக்களுக்கு புரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன். 

இதற்கு பக்க பலமாக இருப்பது மூன்று துறைகள் ஒன்று நீதித்துறை! மற்றொன்று பத்திரிக்கை துறை !அடுத்தது காவல்துறை! இது மூன்றுமே மறைமுகமாக இந்த ஊழலை வளர்த்துக் கொண்டிருக்கிறது.அதாவது மறைமுகமாக இந்த ஊழல் அரசியலுக்கும், ஊழல்வாதிகளுக்கும், ஆதரவு தந்து கொண்டிருக்கிறது. என்னடா இது ஒரு புரியாத புதிதாக சொல்கிறானே என்று கூட நீங்கள் நினைக்கலாம். 

இதை ஏன் சொல்கிறேன் என்றால்? மக்கள் அதிகாரம் பத்திரிக்கை இந்த செய்திகள் ,லீகல் டீம்க்கு ரொம்ப சப்போர்ட்டிவாக இருக்கிறது என்று அங்கிருந்து எனக்கு வருகின்ற தகவல். அதனால்தான் ,இந்த லீகல் டீமுக்கு இப்படி ஒரு முக்கியமான செய்தி போய் சேர வேண்டும் என்று தான் இதை அவர்களுக்கு செய்தியாக மக்களுக்கு செய்தியாக தெரிவிக்கிறேன். 

முதலில் நீதித்துறையில் அரசியல் கட்சி பின்புலத்தில்,அல்லது சிபாரிசில், ஒருவர் நீதிபதியாக வரக்கூடாது. அது மாவட்ட நீதிபதியாக இருந்தாலும் சரி, உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தாலும் சரி, உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்தாலும் சரி, அவர்கள் மெரிட்டில் தான் தேர்வு செய்யப்பட வேண்டும். ஆனால்,

இங்கே அரசியல் அதிகாரத்தால், அரசு வழக்கறிஞராக நியமனம் செய்யப்பட்டு, அவரே சில ஆண்டு காலம் பணியாற்றி, அவரை நீதிபதியாக நியமித்து விடுகிறார்கள். இவர்கள் சரியாக சட்டம் கூட படித்திருக்க மாட்டார்கள். வழக்குகளை சரியான முறையில் நடத்திக் கூட ஜெயித்திருக்க மாட்டார்கள்.மேலும், இவர்கள் அரசியல் கட்சிகளில் மாவட்ட செயலாளராக பணியாற்றி கட்சி வழக்கறிஞர் அணிகளாக பணியாற்றி இவர்களுக்கு என்ன சட்டம் தெரியும்? இவர்களுடைய சட்டத்தின் தகுதி அந்த வழக்கின் வெற்றியில் தெரியும்.

ஆனால், அரசியல் கட்சிகளின் கொடியைப் பிடித்துக் கொண்டு, கட்சி மேடைகளில் பேசி விட்டு, ஆட்சியாளர்களின் சிபாரிசுகளால் நீதிபதியாக வந்து விடுகிறார்கள். எனக்குத் தெரிந்து பாட்டாளி மக்கள் கட்சியில் ஒவ்வொருவர் அப்போது மாவட்ட செயலாளராக இருந்தவர் ,இப்போது உயர் நீதிமன்ற நீதிபதியாக இருக்கிறார்.

இப்படிப்பட்டவர்களை நீதிபதியாக நாட்டில் நியமித்தால், ஊழல்வாதிகளுக்கு தான் இவர்கள் துணை போய்க் இருப்பார்கள். எவ்வளவு புகார்கள் வந்து?எத்தனை ஆயிரம் கோடி ஊழல் செய்தாலும் அவர்களை தண்டனையிலிருந்து மறைமுகமாக சட்டத்தின் ஓட்டைகளை பயன்படுத்தி இந்த ஊழல்வாதிகளை காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.மேலும்,

ஒரு பக்கம் வாய்தா போட்டு, அதை நீடித்துக் கொண்டிருப்பார்கள். பிறகு ஆதாரமில்லை, சரியாக நிரூபிக்கப்படவில்லை என்று தள்ளுபடி செய்து விடுவார்கள். இதற்குள் ஆட்சி மாறிவிட்டால், அதை தூக்கி குப்பையிலோ அல்லது ஓரங்கட்டி வைத்து விடுவார்கள். அதனால், நீதிபதிகளுக்கு பொய்க் கணக்கு காட்டும் ஆடிட்டர்களின் கணக்கு ,அதை ஏற்றுக் கொள்வார்கள். ஆரம்பத்தில் இவனுடைய சொத்து என்ன? அரசியலுக்கு வந்த பிறகு இவனுடைய சொத்து மதிப்பு என்ன? இதுதான் ஆதாரம். மேலும் ,இவனுடைய பினாமி சொத்து எங்கு இருக்கிறது? எத்தனை பேரிடம் இருக்கிறது? எத்தனை கோடிகள் வங்கி கணக்கில் இருக்கிறது ?இதுதான் ஆதாரம்.இவர்களெல்லாம் டிரஸ்ட் ஒன்று ஆரம்பித்து விடுகிறார்கள். இந்த வருமானத்தை  டிரஸ்ட் உள்ளகொண்டு வருகிறார்கள். டிரஸ்ட் என்ன செய்தது?  இதற்கு எப்படி வந்தது பணம் ?இவ்வளவு தான். மேலும்,

நான் இந்த தொழில் செய்தேன் அதில் முதலீடு செய்தேன். எனக்கு இத்தனை கோடி வந்தது. எப்படி வரும்? நீ அரசியல்வாதியாக இருக்கும்போது என்ன தொழில் செய்தாய்? உங்கப்பன் உடைய சொத்து என்ன? அதற்கு எவ்வளவு தூரம் அதில் லாபம் வரும்? பல ஆயிரம் கோடி லாபம் வருமா? அப்படிப் பார்த்தால், உழைக்கும் மக்களுக்கு வரவில்லை. உங்களுக்கு மட்டும் எப்படி வருகிறது? இதைவிட நீதிபதிகளுக்கு என்ன ஆதாரம் வேண்டும்? ஒருவன் ஊழல் செய்ததற்கு ஆதாரமே! அவனுடைய சொத்து கணக்கு, .அவனுடைய வங்கி கணக்கு ,பினாமி சொத்துக்கள் ,இதுதான் ஆதாரம். வேறு என்ன ஆதாரம் வேண்டும்? வெளிநாடுகளில் முதலீடு இதைவிட என்ன ஆதாரம் வேண்டும்? 

இதைவிட கொடுமை, ஊழலை வெளிக்கொண்டுவர டாஸ்மாக் மது கடைகளில் எத்தனை கோடி ஊழல்? என்று மக்களுக்கே பேசு பொருளாக இருந்த ஒரு விஷயத்தை,(ED) இடி கையில் எடுத்து ரெய்டு நடத்தி, ஆதாரங்களை திரட்டி, வெளிநாடுகளில் செய்யப்பட்ட முதலீடுகள் எல்லாம் திரட்டி ,ரெய்டு போனால், உச்ச நீதிமன்றம் அவர்களுக்கு அதிகாரம் இல்லை என்கிறார்கள். 

நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் சட்டத்தை பயன்படுத்துகிறார்களா? இல்லை அரசியல்வாதிகளுக்கும், ஊழல்வாதிகளுக்கும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்களா? எது என்பதை அவர்கள் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். ஊழல்வாதிகளை நிரபராதிகளாக மாற்றுவதற்கு நீதிமன்றம் தேவை இல்லை. நிரபராதிகளை ஊழல்வாதிகளாக மாற்றுவதற்கும் நீதிபதிகள்  தேவையில்லை.. உண்மை எதுவோ, அதை சொல்வதற்கு தான், அதற்கான தண்டனையை கொடுப்பதற்கு தான் நீதிமன்றம் தேவை. 

அதே போல் தான் பத்திரிக்கை பொய்யை உண்மையாக திரித்து காட்டுவதற்கு பத்திரிகைகள் தேவையில்லை. ஊழல்வாதிகளை நல்லவர்களாக மைக்கைகளை காட்டி பேசிவிட்டு, மக்களிடம் ஏமாற்றுவதற்கு தொலைக்காட்சிகள் தேவையில்லை. இதற்கெல்லாம் ஒரே வழி இந்த பத்திரிக்கை, தொலைக்காட்சிகளுக்கு மக்களின் வரிப்பணத்தில் கோடிக்கணக்கில் சலுகை, விளம்பரங்கள் கொடுத்தது மிகப்பெரிய தவறு. இது மத்திய ,மாநில அரசாங்கம் உடனடியாக இது நிறுத்தப்பட வேண்டும். 

மாநிலம் நிறுத்தாது. ஏனென்றால், அவர்களுடைய ஊழல் அரசாங்கத்தை நான்காவது தூணாக தாங்கி பிடித்துக் கொண்டிருக்கிறது. அதனால்தான் இவர்களுடைய கார்ப்பரேட் கம்பெனியில் வேலை செய்யக்கூடிய செய்தியாளர்கள், அரசாங்க அடையாள அட்டை, பத்திரிகை நல வாரியத்தில் உறுப்பினர்கள், மற்றவர்கள் தகுதியற்றவர்கள். 

பத்திரிகைகளின் தகுதியும், தரத்தையும் அரசியல் அதிகாரம் நிர்ணயிக்கிறதா? இது நிர்ணயிக்கும் அதிகாரத்தை செய்தித் துறைக்கு வழங்கியது மிகப்பெரிய தவறு. பத்திரிக்கை துறை சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்றால், நீதித்துறை சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்றால் அரசியல் தலையீடு இருக்கக்கூடாது. 

அதிலும், இந்த செய்தி துறையில் பணியாற்றக் கூடிய அதிகாரிகளுக்கு இவர்கள் பத்திரிக்கையைப் பற்றி என்ன புரிதல் இருக்கிறது? என்று எனக்கு தெரியவில்லை. அதாவது, தினசரி பத்திரிக்கைகளுக்கு தான் நாங்கள் சலுகை, விளம்பரங்களை கொடுப்போம். இந்த தினசரி பத்திரிகைகளில் ஒரு நாளைக்கு எத்தனை மக்களுக்கான செய்திகள் வருகிறது? என்று ஆர்.டி.ஐ யில் கேட்டேன். பதில் இல்லை. 

பத்திரிகையின் தகுதியும், தரம்தான் முக்கியமே , அதை தினசரி பத்திரிக்கையா? மாத பத்திரிகையா? வார பத்திரிகையா? எந்த பத்திரிக்கையாக இருந்தாலும், அதனுடைய செய்திகள் அர்த்தமற்றதாக இருந்தால், சுயநலத்துடன் அரசியல் கட்சி சார்ந்து இருந்தால், அதற்கு ஏன் மக்களின் வரிப்பணத்தை வீணடிக்க வேண்டும்? அது வியாபார பத்திரிகையாக இருந்தால்! அதற்கு ஏன் மக்கள் வரிப்பணத்தை கோடிக்கணக்கில் வீணடிக்க வேண்டும்? இதையெல்லாம் இந்த செய்திகள் மக்களுக்கும் , லீகல் டீமுக்கும், முக்கியத்துவமானது. இதை மத்திய அரசியல் கொண்டு போய் சேர்ப்பதற்கு மிகவும் அவசியமானது. 

மேலும்,சர்குலேஷன் அதாவது நீ எத்தனையாயிரம் அடிக்கிறாய்? எவ்வளவு வியாபாரம் செய்கிறாய்? அந்த வியாபாரத்தால் மக்களுக்கு என்ன நன்மை? இதை வைத்து செய்தித்துறை சலுகை, விளம்பரங்களை கொடுக்குமா? என்ன அர்த்தமற்ற சட்டம்? பத்திரிக்கை யாருக்கு? மக்களுக்கா? இல்லை அரசியல் கட்சிகளுக்கு? ஆட்சியாளர்களுக்கா? யாருக்கு இதை செய்து துறை சொல்லுங்கள்.சமூக நலனுக்கு முக்கியத்துவம் தராத செய்தித் துறை வியாபாரத்திற்கும் அரசியல் கட்சிக்கு முக்கியத்துவம் தருகிறது. இதுதான் செய்தித் துறையின் தகுதியா? அரசு விதியா? அதனால்தான், நாட்டில் மக்களின் பிரச்சனைகள், சட்ட போராட்டங்கள், ஊழல்கள் அதிகரிப்பதற்கு முக்கிய காரணம். இப்படிப்பட்ட சட்டங்கள் கார்ப்பரேட் பத்திரிக்கைகளுக்கு சாதகமாகவும், ஊழலுக்கும், ஊழல் அரசியலுக்கு சாதகமாகவும் உள்ளது.

 இதை எல்லாம் ஏன் சொல்கிறேன், என்றால்! இந்த செய்திகள் அத்தனையும் லீகல் டீமுக்கு செல்கிறது. அவர்கள் கண்டிப்பாக இதை மத்திய அரசின் உயர்மட்ட சட்ட வல்லுனர்களிடம் இந்த உண்மைகள் போய் சேர வேண்டும். அடுத்தது காவல்துறை! காவல்துறை மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்குகிறார்களா? இல்லை, இந்த அரசியல்வாதிகளிடம் சம்பளம் வாங்குகிறார்களா? என்று தெரியாமல் அவர்கள் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். சட்டத்தின் பாதுகாப்பு யாருக்கு கொடுக்க வேண்டும்? ஊழல்வாதிக்கு கொடுக்க வேண்டுமா அல்லது நிரபராதிக்கு கொடுக்க வேண்டுமா ?என்று தெரியாமல் காவல்துறை செயல்படுகிறது. 

அதாவது, காவல்துறைக்கு உள்ள ஒரு அதிகாரம், யாரை வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும், ஒருவர் புகார் கொடுத்தால், அவர் மீது நடவடிக்கை எடுத்து, அவரை கைது செய்து விடுவார்கள். ஆனால், கைது செய்வதற்கு முன், உச்ச நீதிமன்றம் சில நிபந்தனைகளை விதித்து இருக்கிறது. அவர் நிரபராதியா? உண்மையிலேயே அந்த குற்றம் செய்தவரா? குற்றத்திற்கும், அவருக்கும் உள்ள ஆதாரம் உங்களிடம் இருக்கிறதா? இப்படிப் பல கேள்விகள் காவல்துறைக்கு சட்டம் கொடுக்கப்பட்டிருக்கிறது. 

அதையெல்லாம் மீறி மொட்டையாக எதுவும் தெரியாது. அவர் சொன்னார் நான் செய்து விட்டேன். இதற்கு அரசு அதிகாரியாக செயல்படக்கூடிய ஒரு தகுதி ?இங்கே கவனிக்க வேண்டியுள்ளது. காவல்துறை அதிகாரிகள், சாதாரண மக்களிடம் என்ன அணுகுமுறை? அரசியல் கட்சியினரிடம் என்ன அணுகுமுறை? அதிகாரத்தில் இருப்பவர்களிடம் என்ன அணுகுமுறை? இதை அத்தனைக்கும் பதில் இந்த லீகல் டீம் தான், இந்த சமூக நன்மைக்காக காவல்துறைக்கு ஒரு கடிவாளம் போடக்கூடிய ஒரு சட்டத்தை கொண்டு வர வேண்டும். 

அதுமட்டுமல்ல, நேர்மையான பத்திரிகையாளர்கள், சமூக நலனுக்காக போராடுகிறவர்கள், ஊழலுக்கு எதிராக போராடுவார்கள், சமூக ஆர்வலர்கள் இவர்களுடைய பாதுகாப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இவர்களுக்கு காவல்துறை அவசியம் பாதுகாப்பு கொடுக்க வேண்டும். இது எந்த மந்திரி சொன்னாலும் சரி, இதையெல்லாம் சமூகத்தில் முக்கியமாக இவர்களுக்கு ஒரு கடிவாளம் போடக்கூடிய ஒரு சட்டம் தேவை. 

இதையெல்லாம் நாட்டில் இந்த சட்டங்கள் வரைமுறை இல்லாமல், மறைமுகமாக காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. இதற்கு அவசியம் சட்டத்தின் மூலம் ஒரு தீர்வு ஏற்படுத்தக்கூடிய சட்டமாக இதற்கெல்லாம் வைத்தால் தான், சமுதாயத்தில் உழைப்பவர்கள் முன்னேற்றம் இருக்கும் .இல்லையென்றால், ஊரை ஏமாற்றுபவர்கள் அரசியல் கட்சி கொடியைப் பிடித்துக் கொண்டு, இவர்கள் பல ஆயிரம் கோடிகளை கொள்ளையடித்துக் கொண்டிருப்பார்கள். மக்கள் அதை வேடிக்கை பார்த்துவிட்டு தான் இறுதிவரை போய் சேர வேண்டும்.

Popular posts
கார்ப்பரேட் பத்திரிக்கை தொலைக்காட்சிகள் மற்றும் அரசியல் கட்சிகளின் வியாபாரத்தை இளைஞர்கள்புரிந்து கொண்டால்!அரசியல்உங்கள்எதிர்காலமுன்னேற்றத்திற்கானது .
படம்
காவல்துறையில் பொது மக்களுக்கு மற்றும் பத்திரிகை செய்தியாளர்களுக்கு நடக்கின்ற கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறதா? இந்த சட்டம்?
படம்
போலி சாமியார்களின் வாழ்க்கை எவ்வளவு சொகுசானது?சித்தர் சேஷாத்ரியின் வாழ்க...
படம்
அரசியல் கட்சிகள் மற்றும் கட்சியினரின், கொள்கை, கோட்பாடு, சித்தாந்தம், வேதாந்தம், என்று மக்களுக்காக பேசுவது? சினிமா அரசியலா? இந்த கொள்கைக்கு அர்த்தம் என்ன ?
படம்
மத்திய அரசு! முப்பது நாள் பதவியில் இருப்பவர் சிறையில் இருந்தால், அவருடைய பதவி காலி!இந்த சட்டத்திற்கே! எதிர்க் கட்சிகளுக்கு பயமா? - சட்ட மசோதா நிறைவேற்றம்.
படம்