பாட்டாளி மக்கள் கட்சியை குடும்ப சொத்து போல்! அப்பன் ,மகன் பாகம் பிரித்துக் கொண்டார்களா ? இதற்கும் சில கூட்டம் எதற்கு துணை போகிறது? - வன்னியர் சமுதாயத்தில் அரசியல் தெரிந்தவர்கள் கேள்வி?

 

வன்னியர் சமுதாயத்திற்காக ஏற்படுத்தப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சி சங்கத்தில் இருந்து உருவானதை இன்று அப்பன், மகன் சொத்து பாகம் பிரித்துக் கொள்வது போல் அன்புமணி ஒரு பக்கம் பொதுக்குழு, ராமதாஸ் ஒரு பக்கம் பொதுக்குழு இப்படி கூட்டத்தை பிரித்துக் கொண்டார்கள்.

ஒரு கட்சிக்கு அர்த்தம் என்ன ?என்று கூட தெரியாத இந்த கூட்டம், இந்த சமுதாயத்திற்கு சேவை செய்ய? ஒரு பக்கம் அன்புமணி, இன்னொரு பக்கம் ராமதாஸ், இதில் இருப்பவர்கள் யாருக்கு என்ன செய்வார்கள்? இதை சமுதாயம் புரிந்து கொள்ளுமா?

மேலும்,இதற்கெல்லாம் அர்த்தம் தெரியாமல் பத்திரிக்கை, தொலைக்காட்சிகள் எதற்காக செய்தி எழுதிக் கொண்டிருக்கிறார்கள்? இவர்கள் ராமதாசுக்கும், அன்புமணிக்கும் செய்தி எழுதுகிறார்களா ?இல்லை வன்னியர் சமுதாயத்திற்கு செய்தி எழுதிக் கொண்டிருக்கிறார்களா? தவிர,சவுக்கு சங்கருக்கு என்ன தெரியும்?

இந்த சமுதாயத்தை பற்றி ?ஏதோ ஐயா சொன்னார் ,அன்புமணி சொன்னார், இவங்க சொல்றது சமுதாயத்திற்கு தேவையா? இதுவரை சொன்னதெல்லாம் எத்தனை செய்திருக்கிறார்கள்? இதை பத்திரிக்கை, தொலைக்காட்சிகள் வெளியிடுமா? என்பதுதான் வன்னிய சமுதாய மக்களின் கேள்வி?

மேலும், இந்தக் கட்சிக்காக உழைப்பை தந்தவர்கள் ,பொருளை தந்தவர்கள் ,ஏன்? வாழ்க்கையே கூட அர்ப்பணித்தவர்கள் எல்லாம் இருக்கிறார்கள். அவர்களெல்லாம் இந்த கட்சியின் ராமதாஸ் & அன்புமணி கோ வில் உழைத்தவர்களுக்கு, போராடியவர்களுக்கு, ஜெயிலுக்குப் போனவர்களுக்கு, மரியாதையும் முன்னுரிமையும் கொடுக்காததால், அவர்கள் எல்லாம் கட்சியிலிருந்து விலகி பல ஆண்டுகள் ஆகிவிட்டது.தவிர,

ஏன்? துப்பாக்கி சூட்டில் 21 பேர் இறந்தார்கள். அவர்களுக்கும், அவர்கள் குடும்பத்திற்கும், ராமதாஸ் எதுவுமே செய்யவில்லை. இப்போது கூட போய் அந்த பகுதியில் கேட்கலாம் . மேலும்,ஆரம்பத்தில் பாட்டாளி மக்கள் கட்சியை பட்டித் தொட்டி எங்கும், இந்த சமூக மக்களுக்காக குரல் கொடுத்தவர்கள், போராடியவர்கள், அவர்களெல்லாம் இப்போது வேதனையுடன் சமுதாயம் இன்னும் திருந்தவில்லையே, என்று ஆதங்கத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

45 வருடமாக இவர்கள் கூட்டம் போட்டு,இட ஒதுக்கீடு அரசியலை தான் இந்த சமுதாயத்திடம் பேசிக் கொண்டிருக்கிறார்கள் ? அதற்கு இது வரை என்ன செய்தார்கள்?

இது ஒன்றும் யாருக்கும் புரியாதது அல்ல. இங்கே இவர்கள் ஏமாந்த சமுதாயமா? இல்லை, சமுதாயத்தை ஏமாற்றுகிற கூட்டமா? இவர்களால் சமுதாயத்திற்கு என்ன நன்மை? இந்த கட்சி ஆரம்பித்ததே வன்னிய சமுதாயத்திற்கு இட ஒதுக்கீடு முன்னெடுத்து தான் ஆரம்பிக்கப் பட்டது.ஆனால், இன்று இட ஒதிக்கீடு பேசியே, இட ஒதுக்கீடு வியாபாரம் வன்னியர்களிடம் நடத்துகின்ற ஒரே கட்சி! பாட்டாளி மக்கள் கட்சி ? இதை வைத்து, அரசியல் அதிகாரம் கை பற்றி கோடிஸ்வர்களாக ஆகி விட இவர்கள் லட்சியமாக இருக்கிறது.

மேலும்,சில பேரு என்ன நினைக்கிறார்கள்?என்றால், இந்த கட்சி !அவர்களுடைய சுயநலத்திற்காக, சமுதாயம் மதிப்பதற்கும், மற்ற சமூகத்திலும் இவர்கள் பேரை சொல்லிக் கொள்வதற்கும், இந்த வியாபார அரசியலை தங்கள் சொந்த நலத்திற்காக இந்தக் கட்சி மற்றும் கொடியை காண்பித்து, பிழைப்பு நடத்துகிறார்கள் என்கின்றனர்.தேர்தல் வந்தால் கையில் காலில் விழுந்தால்! சமுதாயம் ஓட்டு போடுவார்கள் என்று நினைக்கிறார்கள். ஏனென்றால் சமுதாயத்திற்காக நாங்கள் குரல் கொடுக்கிறோம். இந்தக் குரல் யாருக்குடா வேணும்? இது

அரசியல் தெரிந்தவர்கள் கேள்வி? மேலும்,இந்த உண்மை தெரிந்தவர்கள் மிகவும் குறைவு. அதனால் தான்,இப்படிப்பட்ட ஒரு போலியான அரசியலால் !சமுதாயத்திற்கு எந்த நன்மையும் இவர்களால் ஏற்படுத்த முடியவில்லை.ஏற்படாது.இது யாருக்கு வேண்டும்? இந்த அரசியல்?இதனால், சமுதாயத்திற்கு என்ன நன்மை? என்பதை இந்த சமுதாயத்தில் அரசியல் தெரிந்தவர்கள் ,கேள்வி? மேலும்,இதைப்பற்றி புரியாதவர்கள், அவர்களுக்கு புரிய வைப்பது கடினம்.

ஏனென்றால், தூங்குகிறவர்களை எழுப்பலாம். தூங்குற மாதிரி நடிப்பவர்களை எழுப்ப முடியாது என்பார்கள், அந்த வகையை சார்ந்தவர்கள். இனிமேல் எப்படி இவர்கள் நடித்தாலும், தேர்தல் வந்தால், இவர்கள் நம்ம ஆளு, மற்ற நேரங்களில் வேறு மாதிரியான ஆளா? சமுதாயத்தை மதிக்கத் தெரியாதவர்கள் !எப்படி சமுதாயத்திற்கு நன்மையை செய்வார்கள்? சண்டைக்கு மல்லு கட்டுபவர்களால், சமுதாயத்திற்கு செய்ய முடியுமா?

இதையெல்லாம் சமுதாயம் ஓரளவுக்கு புரிந்து தான் வைத்திருக்கிறது.பார்ப்போம். மேலும் ,கார்ப்பரேட் பத்திரிக்கை ,தொலைக்காட்சிகள் இந்த போலி அரசியலுக்கு துணை போய் வன்னியர் சமுதாயத்தை மட்டுமல்ல ,மற்ற சமுதாயங்களையும், இவர்கள் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் . நேற்று கூட சட்டம் படித்துக் கொண்டிருக்கிற ஒரு மாணவரிடம், இதைப் பற்றி விளக்கமாக எடுத்துரைத்தேன்.இதை ஏன் சொல்கிறேன் என்றால்,

வன்னியர் சமுதாயத்தில் படித்தவர்கள் இருக்கிறார்கள் ,அரசியல் தெரிந்தவர்கள் இருக்கிறார்கள், இன்னும் சொல்லப்போனால், பல அறிவு ஜீவிகள் கூட இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் ராமதாஸின் அரசியல்! அன்புமணியின் அரசியல் தெரியாதா? அவர்களுக்கு தெரியாதது ?இந்த கூட்டத்திற்கு தெரியுமா? எவ்வளவு சுயநலம்?

இதற்கும் சில கூட்டம் எதற்காக போகிறது? இந்த சமுதாயம் கல்வியிலும் ,வேலைவாய்ப்பிலும், முன்னுரிமை பெற வேண்டும் என்று போகிறார்களா?இல்லை இவர்கள் சொந்த அரசியலாதாயத்திற்காக போகிறார்களா? எதற்கு? என்பதுதான் அரசியல் தெரிந்தவர்கள்! ஒவ்வொருவரும் கேட்கின்ற கேள்வி? ஏனென்றால் ,அவர்கள் இந்த சமூக நன்மைக்காக போராடுகிறார்கள். மேலும், பாட்டாளி மக்கள் கட்சி எதற்காக ஆரம்பித்தது ?என்பது சமுதாயத்திற்கு நன்கு தெரியும். ஆனால், இந்த கட்சி தற்போது,

அப்பன் ,மகன் இருவரும் பாகம் பிரித்துக் கொள்கிறார்கள். அதாவது இவர் ஒரு பொதுக்குழு, அவர் ஒரு பொதுக்குழு நடத்தி முடித்து விட்டார்கள்.ஒரு கட்சிக்கு அர்த்தம் என்ன? என்று தெரியாத இந்த கூட்டம், இந்த சமுதாயத்திற்கு என்ன செய்யபோகிறார்கள்? ஒரு பக்கம் அன்புமணி ?இன்னொரு பக்கம் ராமதாஸ் ?

இதில், இருப்பவர்கள் யாருக்கு என்ன? நன்மை செய்வார்கள்? இதை சமுதாயம் புரிந்து கொள்ளுமா? இது பற்றி எதுவும் தெரியாமல்,இதற்கெல்லாம் அர்த்தம் தெரியாமல் ,இந்த கார்ப்பரேட் பத்திரிக்கை, தொலைக்காட்சிகள் செய்தி எழுதிக் கொண்டிருக்கிறார்கள் ? வன்னிய சமுதாயத்தை ஏமாற்றவா? இல்லை, இந்த பத்திரிகைகளின் ஆதாயத்திற்காக எழுதுகிறார்களா? எதற்கு இந்த செய்திகளை இவர்களுடைய பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் ,எழுதிக் கொண்டிருக்கிறார்கள் ? என்பது வன்னிய சமுதாயத்தில், அரசியல் தெரிந்தவர்கள் கேள்வி?மேலும்,

தற்போதைய படித்த இளைஞர்கள் வன்னிய சமுதாயத்தில், வன்னிய சமுதாயத்திற்கு ராமதாஸும், அன்புமணியும் செய்தது என்ன ?என்று தான் அவர்களின் கேள்வி? இது தவிர, தகுதியானவர்கள், அரசியல் தெரிந்தவர்கள் ,விவரமானவர்கள் ,அதே கேள்வியை தான் கேட்கிறார்கள் ?மேலும்,

இது வருகின்ற 2026 தேர்தலில், நிச்சயம் வன்னிய சமுதாயம் எப்படி வாக்களிப்பார்கள்? இந்த உண்மை புரிந்து வாக்களிப்பார்களா? இல்லை, புரியாமல் பணத்திற்காக வாக்களிப்பார்களா? இதுதான், இந்த சமுதாயத்தில் அரசியல் தெரிந்தவர்கள், ,விவரமானவர்கள் பேசிக் கொண்டிருக்கும் கேள்வி? அவர்கள் சமூக நன்மைக்காக போராடுகிறார்கள்.

இவர்கள் சமுதாயத்தை அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இதையெல்லாம் எப்போது இவர்கள் புரிந்து கொள்ளப் போகிறார்கள்? என்பது தான் அவர்களுடைய ஒரே கேள்வி? மேலும், வன்னியர் சமுதாயத்தை ஏமாற்றி !அரசியல் அதிகாரத்திற்கு வர அலைகிறார்களா? இவர்களுடைய அரசியல் தகுதி என்ன? இதை வன்னியர் சமுதாயம் சிந்திக்கவில்லை என்றால்! தொடர்ந்து சமுதாயம் ஏமாறும். இது வன்னிய சமுதாயத்திற்காக போராடுபவர்கள் கருத்து . அதனால்! உழைத்து சாப்பிடுங்கள். சமுதாயத்தை ஏமாற்றி சாப்பிடலாம் என்று நினைக்காதீர்கள் .சமுதாயம் தொடர்ந்து ஏமாறாது.

Popular posts
கார்ப்பரேட் பத்திரிக்கை தொலைக்காட்சிகள் மற்றும் அரசியல் கட்சிகளின் வியாபாரத்தை இளைஞர்கள்புரிந்து கொண்டால்!அரசியல்உங்கள்எதிர்காலமுன்னேற்றத்திற்கானது .
படம்
காவல்துறையில் பொது மக்களுக்கு மற்றும் பத்திரிகை செய்தியாளர்களுக்கு நடக்கின்ற கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறதா? இந்த சட்டம்?
படம்
போலி சாமியார்களின் வாழ்க்கை எவ்வளவு சொகுசானது?சித்தர் சேஷாத்ரியின் வாழ்க...
படம்
அரசியல் கட்சிகள் மற்றும் கட்சியினரின், கொள்கை, கோட்பாடு, சித்தாந்தம், வேதாந்தம், என்று மக்களுக்காக பேசுவது? சினிமா அரசியலா? இந்த கொள்கைக்கு அர்த்தம் என்ன ?
படம்
மத்திய அரசு! முப்பது நாள் பதவியில் இருப்பவர் சிறையில் இருந்தால், அவருடைய பதவி காலி!இந்த சட்டத்திற்கே! எதிர்க் கட்சிகளுக்கு பயமா? - சட்ட மசோதா நிறைவேற்றம்.
படம்