அதாவது பத்து ரூபாய் போட்டால் நூறு ரூபாய் கிடைக்குமா? இதுதான் கார்ப்பரேட் அரசியல். ஒருவருடைய அரசியலின் இன்வெஸ்ட்மென்ட் என்ன? அவருடைய சமூக சேவையா? இல்லை, ஓட்டுக்கு கொடுக்கின்ற பணமா?

மக்கள் ஏதோ கொள்ளையடித்த பணத்தை கொடுக்கிறார்கள் என்று அந்த ஆயிரம், 500 ரூபாய் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். அது தவறு .
மேலும்,இலவச அறிவிப்புகளை நம்பி ஏமாறுகிறார்கள். பொய்யான வாக்குறுதிகளை தேர்தல் நேரத்தில் சொல்லிவிட்டு, அதை செயல்படுத்தாமல் ஏமாற்றிக் கொண்டிருப்பது, இத்தனையும் கார்ப்பரேட் அரசியல்.மேலும், கார்ப்பரேட் அரசியலின் முக்கியத்துவம் என்ன? உனக்கு கொடி பிடிக்க கூடிய உன்னுடைய கட்சிக்காரனை முதலாளியாக்குவாய் , ஆனால்,ஓட்டு போட்ட மக்களை நடுத்தெருவில் போராட வைப்பாய் , இதுதான் கார்ப்பரேட் அரசியலா? இது தவிர,

இதைவிட கார்ப்பரேட் அரசியலின் இன்னொரு முகம் இருக்கிறது. அது என்ன தெரியுமா? இன்றைய பல லட்சம் கோடி சொத்துக்கள், அவர்களின் பினாமி பெயரிலும் ,இவர்கள் பெயரிலும், இருக்கும். இதையும் தாண்டி , கருப்பு பணத்தை வெளிநாடுகளில் முதலீடு செய்யும் அளவுக்கு , தமிழ்நாட்டின் அரசியல் ஊழலும், பிளாக் மணியும், இன்று உயர்நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் வழக்காக போய்க் கொண்டிருக்கிறது . அது தான் கார்ப்பரேட் அரசியல்.மேலும்,

ஒரு முக்கிய கம்பெனியின் தலைமை நிர்வாகி ஒருவர் சொன்னார். அந்த காலத்தில் எந்த ஒரு சேவைக்கும் இந்த அரசியல்வாதிகள், எங்களை எதிர்பார்த்து கொண்டிருப்பார்கள். குறிப்பாக ஒரு டெண்டர் விட்டால் அது ஐவேசாக (High ways)இருக்கட்டும், அல்லது நகர்ப்புற , கிராம திட்டங்களாக இருக்கட்டும், எங்களுக்கு தான் முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

ஆனால் இப்போது இவர்களே 500 கோடி திட்டமானாலும் ,இவர்களுடைய பினாமி பெயரில் எடுத்து வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் . அப்படி என்றால், இவர்கள் எல்லாம் கார்ப்பரேட் அரசியல்வாதியாக ஆகிவிட்டார்கள்.

அதனால் தான் இவர்கள் கார்ப்பரேட் பத்திரிக்கை ,தொலைக்காட்சிகளை இந்த கார்ப்பரேட் வியாபார அரசியலுக்கு பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் . அரசியல் கார்ப்பரேட் ஆனதால், இன்று மக்கள் தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் ஏழை, எளிய நடுத்தர மக்களின் வாழ்க்கை போராட்டமாக மாறிவிட்டது. இதைப் பற்றி மக்களுக்கு புரியாது. அதை புரிந்து கொண்டு வெளிப்படுத்தக்கூடிய ஊடகங்களும் இல்லை .சோசியல் மீடியாக்களும் இல்லை.

அரசியல்வாதிகள் அவர் என்ன சொன்னார்? இவர் என்ன சொன்னார் ?இவர் என்ன பேசினார் ?யார் எதை பேசினால் என்ன? அவர்களின் அரசியல் வளர்ச்சிக்காக பேசிக் கொண்டிருக்கிறார்கள். மக்களின் வளர்ச்சிக்காக இன்று எந்த அரசியல் கட்சி? எந்த அரசியல்வாதி பேசிக் கொண்டிருக்கிறான் ?ஒருவரை சொல்லுங்கள்.
இதையெல்லாம் விரைவில் மக்கள் அதிகாரம் youtube சேனல்களில் சொல்ல வேண்டிய கடமை இருக்கிறது. ஏனென்றால், மக்களுக்கு செல்போன், கம்ப்யூட்டர், இணையதளம் ,வந்தவுடன், மனித உழைப்பு குறைந்து விட்டது. விஞ்ஞானத்தின் வளர்ச்சி அதிகரித்ததால், இன்று உழைப்பை நம்பி வாழ்பவர்கள் ,ஒவ்வொரு நாளும் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், அரசியல் கட்சியை பின்புலமாக வைத்துக் கொண்டு ,ஊரை ஏமாற்றுபவர்கள் உழைப்பவர்களை விட அதிகமாகி விட்டார்கள். காரணம் அரசியலில் உழைக்காமல் கோடிகளை சம்பாதிக்கலாம். அதுதான் இன்றைய அரசியலின் திறமை.

அந்தத் திறமையை தான் கார்ப்பரேட் பத்திரிக்கை, தொலைக்காட்சிகள் கார்ப்பரேட் அரசியலை ஊக்கி வைத்துக் கொண்டிருக்கிறது. இப்பவாவது இந்த உண்மை! செய்தி துறை அதிகாரிகளுக்கு தெரியுமா ?அது புரியுமா ?
இந்த உண்மையும் மக்கள் அதிகாரத்தில், தெளிவாக சொல்லி இருக்கிறது. இதற்கு மேலும் ஒரு செய்தித் துறை ஐஏஎஸ் அதிகாரி வைத்தியநாதன் நடவடிக்கை சமூக நலன் பத்திரிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்றால்! இவர் ஐஏஎஸ் படித்தது வீண். மேலும் ,

அரசியல்வாதிகளுக்கு பத்திரிக்கை பற்றிய அதிகம் புரிதல் இல்லை. ஏன் பத்திரிக்கை துறையில் இருப்பவர்களுக்கே இல்லை என்ற போது அவர்களுக்கு எப்படி இருக்கும்? அதனால் தான் தொடர்ந்து மக்கள் அதிகாரம் இதை படித்தவர்களிடம் முறையிடுகிறது. ஏனென்றால் அவர்கள் கற்பூரம் மாதிரி, தீக்குச்சி வைத்து பற்ற வைத்தால் உடனே அது தீ பற்றிக் கொள்ளும் .மேலும்,

அரசியல்வாதிகளுக்கு இதைப் பற்றி அவர்கள் தெரிந்து கொள்ளவும் ஆசைப்பட மாட்டார்கள். ஏனென்றால், அவர்கள் நலனில் எத்தனை கோடி சுருட்டலாம் , அதற்கு எப்படி எல்லாம் மக்களிடம் கவரக்கூடிய பேச்சுகளை பேசலாம்? எதிர்க்கட்சியை எப்படி மட்டம் தட்டி பேசலாம்? எப்படி வசை பாடலாம்? இதை மக்களிடம் நம்மை விளம்பரப்படுத்தும் தொலைக்காட்சி ,பத்திரிகைகள் எது ?அதுதான் தெரியும்.

குறிப்பாக சொல்லப் பனால் பத்திரிக்கைத்துறை இவர்களின் சுயநல துறையாக மாற்றிவிட்டார்களா? அல்லது அவர்களை மாறிவிட்டார்களா? இதற்கு தான் மக்களின் வரிப்பணத்தில் கோடிக்கணக்கில் இவர்களுக்கு கொடுக்கப்படும்,அரசின் சலுகை, விளம்பரமா?

அதாவது, அரசியலில் ஊழல் செய்வது,அரசியலில் கொள்ளை அடிப்பது , அதை நியாயப்படுத்த நீதிமன்றங்களுக்கு செல்வது, அங்கே பணத்திற்காக வழக்கறிஞர்களும் நீதிபதிகளும் இருந்தால், தீர்ப்பை விலைக்கு வாங்குவது, அந்த திறமையை நியாயப்படுத்தும் பத்திரிக்கை தொலைக்காட்சிகளுக்கு கோடிக்கணக்கில் சலுகை விளம்பரங்களை கொடுப்பது, வேறு ஒன்றும் தெரியாது.மேலும்,

இன்று தூய்மை பணியாளர்கள் கூட்டமாக இருப்பதால் ,அவர்கள் வீதிக்கு வந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தினமும் உழைப்பை நம்பி வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள். இந்த மக்கள் அவர்கள் உரிமைக்காக அவர்கள் போராடும் போது அவர்களை காவல் துறை குண்டு கட்டாக தூக்கி வெளியே போடுவது, கைது செய்து அடைப்பது, இது எல்லாம் ஒரு தகுதியான ஆட்சியாளர்களின் அரசியலா? அவர்கள் கேட்கிறார்கள் நாங்கள் இதற்கு தான் ஓட்டு போட்டமா? ஸ்டாலின்? இதற்கு திமுகவும் ,ஸ்டாலினும், பதில் சொல்ல முடியாது. அவர்கள் என்ன கேட்கிறார்கள்? பணி நிரந்தரம் செய்யுங்கள்.

நாங்கள் இத்தனை ஆண்டு காலம் தூய்மை பணியில் பணியாற்றி இருக்கிறோம். எங்களுக்கான உரிமையை கொடுங்கள். அடுத்தது இவர்கள் இந்த பணியாளர்களை பணி நிரந்தரம் செய்தால், அவர்களுக்கு அரசின் சம்பளத்தில் தொகை கொடுக்க வேண்டும் . அந்த அடிப்படையில் அவர்களை பணி நிரந்தரம் செய்தால், ஏகப்பட்ட பணம் அதற்கு செலவழிக்க வேண்டி வரும்.
அதாவது இது அரசியல் சேவை என்பதை மாற்றி ஒரு கார்ப்பரேட் அரசியல் பிசினஸாக மாற்றிவிட்டார்கள் . இந்த கார்ப்பரேட் அரசியலின் பின் விளைவு தற்போது, கணக்கு வழக்கு பார்க்காமல் இவர்கள் கொள்ளையடிப்பார்கள்.

ஆனால், அரசு ஊழியர்களுக்கும், உழைப்பவர்களுக்கும், கணக்கு பார்த்துக் கொண்டிருப்பார்கள். இப்போதாவது இந்த மக்களுக்கு இந்த உண்மை புரிகிறதா? அப்படி தான் சமூக நலன் பத்திரிகைகளுக்கு கணக்கு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் தகுதி பார்க்க வேண்டும். சமூக நலன் பார்க்க வேண்டும். அந்த பத்திரிகையின் தரத்தை பார்க்க வேண்டும்.

இதையெல்லாம் பத்திரிக்கை துறையில் பார்க்காமல்! பத்திரிகையின் வியாபாரத்தை பார்க்கிறார்கள் . அதாவது செய்தித் துறை ஒரு பத்திரிக்கையாளனின் பத்திரிக்கை மற்றும் தகுதி, திறமையை பார்க்க வேண்டுமே தவிர, அதை பார்க்காமல், அதனுடைய வியாபாரத்தை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். எவ்வளவு வியாபாரம் ஆகிறது? அதுவா முக்கியம்? எத்தனை கோடி வியாபாரம் ஆனால் உனக்கு என்னய்யா? மக்களுக்கு எது முக்கியம்? மக்களுக்கான செய்தி முக்கியத்துவமா ?அல்லது அந்த பத்திரிகையின் வியாபாரம் முக்கியத்துவமா? எது என்பதை செய்தித் துறை நீதிமன்றத்தில் சொல்ல முடியுமா?மேலும், செய்தித்துறை,

மக்களுடைய வரிப்பணத்தில் தான் அந்த பத்திரிகைகளுக்கு சலுகை, விளம்பரங்கள் கொடுத்து கொண்டு இருக்கிறீர்கள் .உங்கள் வீட்டில் இருந்து யாரும் எடுத்துக் கொண்டு வந்து கொடுக்கவில்லை .அதனால் தான், மக்கள் அதிகாரம் தொடர்ந்து உங்களை கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறது.
இந்த கேள்விக்கெல்லாம் ஒரு நாள் நிச்சயம் நீங்கள் நீதிமன்றத்தில் பதில் சொல்லத்தான் போகிறீர்கள். அப்போது தெரியும் திமுகவின் அரசியல் சமூக நலனா? அல்லது கார்ப்பரேட் நலனா?

2026க்கு பிறகு எந்த ஆட்சி வரும் என்பது கணிக்க முடியாத ஒரு தேர்தல். தமிழ்நாட்டில் பல துறைகள் இந்த ஆட்சியாளர்களிடம் நீதி கேட்டு எத்தனையோ போராடிக் கொண்டிருக்கும் துறைகளில் ,சமூக நலன் பத்திரிக்கை துறையும் ஒன்று.
திமுகவின் கார்ப்பரேட் அரசியலுக்கு சமூக நலன் முக்கியத்துவமா?அல்லது வியாபார நலன் முக்கியத்துவமா?இனியாவது அது திமுக அரசுக்கு புரியுமா? மேலும்,ஓட்டுக்காக அரசியல் ,ஓட்டுக்காக ஆட்சி நிர்வாகம், செய்பவர்களுக்கு இது புரியாது .
மக்களுக்காக ஆட்சி! மக்கள் நலனுக்காக ஆட்சியாக இருக்கும் போது தான் ,இந்த உண்மை அரசியல்வாதிகளுக்கு புரியும்.அதை விடுத்து,ஆட்சியாளர்களுக்கும் அவர்களின் கட்சிக்காரர்களுக்கும், ஆட்சி நடத்தினால்! இந்த உண்மைகள் புரியாது . இதற்கு கடந்த கால ஆட்சியாளர்களின் அரசியல் வரலாற்றை புரட்டிப் பார்த்தால், உண்மைகள் மக்களுக்கு புரியும் .