நாட்டுக்கு நாடு, போர் செய்வது, ஆயுதங்களை வாங்கி குவிப்பது,மனித குலத்தின் வெற்றியல்ல! அது அழிவு.

அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒரு பக்கம் இந்தியாவுக்கு நட்பாக இருப்பார். மற்றொரு பக்கம் இந்தியாவுக்கு எதிரான நாடுகளுக்கு ஆயுதங்களை விற்பார்.இதுதான் வெளிநாட்டு அரசியல்.

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே நடந்த தீவிரவாதிகள் சண்டைகளில், பாகிஸ்தானின் ஏவுகணைகள்,சீனா கொடுத்த ஏவுகணைகள்,மேலும், துருக்கியில் இருந்து வந்த ஏவுகணைகள்,இவை அத்தனையும் தூக்கி அடித்து அழித்து விட்டது இந்தியாவின் ஏவுகணைகள்.

அதனால், அமெரிக்கா,சைனா போன்ற நாடுகள் ஒருவரை,ஒருவர் சண்டை போட்டு அழித்துக் கொள்ளக்கூடிய ஆயுதங்களை விற்பனை செய்து வருமானத்தை பார்க்கிறார்கள். மேலும் தற்போது துருக்கைக்கு 2,600 கோடி மதிப்பிலான ஏவுகணைகளை விற்பனை செய்ய அமெரிக்கா போக்குதல் அளித்துள்ளது.

மேலும், உலக நாடுகளுக்குள் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு ஆயுதத்தை கையில் எடுத்து விற்பனை செய்வது, உலக நாடுகளுக்கு அது அழிவை ஏற்படுத்தும். அதைவிட ஒவ்வொரு நாளும், சண்டையிட்டுக் கொள்வது, மனித குலத்தை அழிப்பதற்கான வேலை.

அதனால், ஆக்கபூர்வமான மக்களின் அத்தியாவசிய தேவைகளை உற்பத்தி செய்து அதை வியாபாரம் ஆக்கி பொருளாதாரத்தை ஈட்டினால் நல்லது. இது அழிவு பாதையை தான் கொண்டு செல்லுமே ஒழிய ஆக்கபூர்வமான மனித சமுதாயத்தின் உணர்வுகளை மதித்து வாழ வைக்க வியாபாரம் செய்வது நாட்டுக்கு நாடு பதற்றத்தை தான் உருவாக்குமே

தவிர, அது அமைதியை உருவாக்காது. இதே போல் தான்,ஊரில் ரெண்டு பேர் அடித்துக் கொண்டால்,அவர்களை சமாதானம் செய்து வைக்க ஒருவன் தலைவனாக வந்து விடுவான். அதைதான் டிரம்ப் எதிர்பார்க்கிறார்.

இப்படி ஒரு நாட்டிற்குள் எத்தனை அரசியல் இருக்கிறதோ, அதைவிட மோசமான அரசியல் வெளிநாடுகளிலும் இருக்கிறது. இதையெல்லாம் தாண்டி நாட்டின் வெளிவரவு கொள்கை மற்றும் வர்த்தக உறவுகள் செயல்படுத்த வேண்டி உள்ளது. அதனால், இன்றைய இந்தியாவின் தலைமை நிர்வாகத்தை பிரதமர் நரேந்திர மோடி யார் கால்களிளும் விழாமல், இந்தியாவின் கௌரவத்தை இந்திரா காந்திக்கு பிறகு,உலக நாடுகளில் தலை நிமிரச் செய்த ஒரே பிரதமர்.

மேலும், தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு இந்தியா பாகிஸ்தான் இடையே டிஜிஎம்ஓக்கள் ராணுவ அதிகாரிகள் சந்திப்பை ஏற்படுத்தப்பட்டு இரு நாடுகளுக்கு இடையேயான ஓர் பதற்றத்தை குறைக்க பேச்சுவார்த்தை தொடர முடிவு எடுத்துள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. அதில் எல்லைகளில் இருந்து படையை திரும்ப பெறவும், ஒரு குண்டு கூட சுடக்கூடாது எனவும் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக இந்திய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரம் காஷ்மீர் பிரச்சனை பற்றியோ, சிந்து நதி நீர் ஒப்பந்தம் பற்றியோ, எந்த விதமான பேச்சுகளும் இடம் பெறவி

Popular posts
நாமக்கல்: சட்டப்பணிகள் ஆணைக்குழு இலவச சட்ட உதவிக்கு கட்டணமில்லா எண்
படம்
இந்தியாவுடன் ஆன போரில் பாகிஸ்தான் ஜெயித்ததாக அந்நாட்டு பிரதமர் அறிவிப்பு.
படம்
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் நடந்த போரில் நாட்டிற்குள் பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசிய தேசவிரோத சக்திகளை களையெடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்குமா?
படம்
பத்திரிக்கை என்றால் என்ன? எது பத்திரிக்கை?
நாட்டில் பிரிவினைவாத அரசியலை ஒழிக்க, மக்கள் பிரதிநிதிகளின் சொத்து கணக்கு, தவிர, அரசியல் கட்சிகள் மற்றும் ஊடகங்கள் சட்டத்திற்கு புறம்பான சொத்துக்களை சேர்த்தால்,அந்த சொத்துக்கள் நாட்டுடைமையாக்க சட்டம் கொண்டு வரப்படுமா? சமூக ஆர்வலர்களும், தேச நலன் விரும்பிகளும்!
படம்