இதை அரசியல் புரிந்தவர்கள், படித்தவர்கள் ,ஆய்வாளர்கள் ,சிந்தித்துப் பார்த்தால் நன்கு புரியும்.

தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் சீர்திருத்தம் என்று கொண்டு வந்து ,ஒவ்வொரு மாநிலத்திலும் இறந்தவர்கள் பெயர்கள் ,குடிபெயர்ந்தவர்கள் பெயர்கள் ,அதை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்து வருகிறது. அதில் என்ன தவறு இருக்கிறது?அதை செயல்படுத்த இருப்பதால், அதை செய்யக்கூடாது என்று தமிழ்நாடு அரசு சார்பில் ஸ்டாலின் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இதில் ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டிய உள்ளது. இவர் அப்படிப்பட்ட சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யக்கூடாது என்று இடைக்கால உத்தரவு கேட்கிறார். அது ஒரு பக்கம், அடுத்தது சுப்ரீம் கோர்ட் வாக்காளர் பட்டியல் சீர்திருத்தத்தில் விதி மீறல்கள் கண்டறியப்பட்டால், சுப்ரீம் கோர்ட் ரத்து செய்யப்படும் என்று எச்சரிக்கை செய்துள்ளது.

ஆக கூடி, சுப்ரீம் கோர்ட் மாநில அரசுகளுடன் சேர்ந்து மத்திய அரசை மறைமுகமாக எதிர்த்து வருகிறது . சுமார் இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு மேலாகவே இந்த நிலை சுப்ரீம் கோர்ட்டில் இருந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் அங்கு பணத்தை கொடுத்தால், இது போன்ற வேலைகள் மறைமுகமாக அரங்கேறும். இதை சமீபத்தில் 100 கோடிக்கு மேல் யஸ்வந்த் வர்மா நீதிபதியின் வீட்டில் எரிந்த நிலையில் கண்டறியப்பட்ட பணம், அது பற்றி விசாரணை வைக்க வேண்டும் என்று சொன்னபோது, யஸ்வந்த் வர்மா நீதிபதி ,என் மீது லஞ்சம் வாங்கியதாக களங்கம் கற்பிக்கப்பட்டால், பல நீதிபதிகள் பட்டியலை வெளியிடுவேன் என்று பகிரங்கமாக மிரட்டியது பொதுமக்களுக்கு தெரிந்த ஒன்று தான்.மேலும்,

இன்று நாட்டில் எதிர்க்கட்சிகள்!சுப்ரீம் கோர்ட் வைத்துக் கொண்டு, மத்திய அரசுடன் மோதிக் கொண்டிருக்கிறது. எந்த ஒரு பிரச்சனையானாலும், அதற்கு சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்து விடுகிறார்கள். இவர்கள் செய்கின்ற தவறுகளுக்கு சுப்ரீம் கோர்ட் பரிகாரம் செய்கிறதா? பொதுமக்கள் இதை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

கடந்த இரண்டு ,மூன்று ஆண்டுகளாக ஒவ்வொரு மாநிலத்திலும் நடக்கின்ற ஊழல் விவகாரங்கள் முதல் சட்டப் பிரச்சனைகள், மசோதாக்கள் வரை எடுத்துப் பாருங்கள், அவை அத்தனையும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகளாக போய்க்கொண்டிருக்கிறது.
அப்படி என்றால், மத்திய அரசு மக்களுக்காக செயல்படவில்லை .மாநில அரசு, மக்களுக்காக செயல்படவில்லை .சுப்ரீம் கோர்ட் மக்களுக்காக செயல்பட்டு கொண்டிருக்கிறதா? இதை சுப்ரீம் கோர்ட் தங்களுடைய எல்லை எது என்பதை புரியாமல் போய்க் கொண்டிருக்கிறார்கள் என்று அரசு வழக்கறிஞர் துஷார் மேத்தா நீதிமன்றத்திலே வாதிட்டு இருக்கிறார்.மேலும்,

இதற்கு காரணம், அரசியல் கட்சிகளில் இருந்து நீதிபதிகளாக வந்தவர்களுக்கு, இந்த அரசியல்வாதிகளின் தவறுகள் ,பெரிதாக தெரியாது. ஏனென்றால், அரசியல் கட்சிகளில் இருக்கும்போது அதே தவறை செய்த நீதிபதிகள், இப்போது இந்த அரசியல்வாதிகளின் தவறுகளை காப்பாற்ற, சட்டத்தின் மூலம் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும், ஜனாதிபதி , பிரதமர் இதற்கு ஒரு முக்கிய முடிவை எடுக்க வேண்டும். அந்த முடிவு நாட்டு மக்களுக்காகவும், நீதித்துறையை காப்பாற்றவும் ,எடுக்கப்பட்ட ஒரு சரியான முடிவாக அது இருக்க வேண்டும்.

.ஏனென்றால், நாட்டில் நீதித்துறை நேர்மையானதாக செயல்பட்டால் தான், மக்கள் நன்றாக இருக்க முடியும் .ஆட்சி நன்றாக இருக்க முடியும். குற்றவாளியும் நீதிமன்றத்தில் நிரபராதி என்று சொல்வான், நிரபராதியும் நீதிமன்றத்தில் நிரபராதி என்று தான் சொல்வான் .
ஆனால், யார் குற்றவாளி? என்று நிருபிப்பது தான் நீதிமன்றத்தின் வேலையே தவிர, குற்றவாளிகளுக்கு துணைப் போவது ,நீதிமன்றத்தின் வேலை அல்ல. நீதிமன்றத்தில் குற்றவாளிகளை காப்பாற்றுவது நீதிமன்றத்தின் வேலையும் அல்ல. நீதிமன்றம் எதற்கெடுத்தாலும் எதிர்க்கட்சிகளின் பிரதிநிதியாக செயல்பட்டால், மத்திய அரசின் நிர்வாகத்தில் சிக்கல்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

இப்போது வக்ஃ வாரிய சட்ட மசோதாவுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டதும், அரசியல் உள் நோக்கத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பது பொதுமக்களுக்கு புரிகின்ற உண்மை . ஒருவர் வஃப் வாரியம் அமைக்க ஐந்தாண்டுகள் இஸ்லாம் மதத்தில் இருக்க வேண்டும். வஃப் வாரிய சொத்து ,அரசாங்க சொத்தா? அல்லது தனியார் சொத்தா ?என்பதை நிர்ணயிக்கும் அதிகாரம் மாவட்ட ஆட்சியருக்கு கொடுக்கப்பட்டது.
மாவட்ட ஆட்சியருக்கு தான் வருவாய் துறையின் கணக்கு பதிவுகள் ,ஒவ்வொரு மாவட்டத்திலும் என்ன? என்று உடனடியாக பார்த்து அதை சரி செய்ய முடியும் .ஆனால், அதற்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்திருப்பது அரசியல் உள்நோக்கமானது .
மேலும் ,அந்த சொத்து பிரச்சனை நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றால், பல ஆண்டுகள் இழுத்தடித்துக் கொண்டிருப்பார்கள். இதற்குள் வழக்கு தொடர்ந்தவர் இறந்து போகலாம். இல்லையென்றால், அவர் சொந்த பிரச்சனைகளுக்காக போராட முடியாமல், அதை விட்டு ,விட்டு போய்விடலாம். இவ்வளவு பிரச்சனைகள் இருக்கின்ற இந்த இடத்தில், சுப்ரீம் கோர்ட் அரசியல் உள்நோக்கத்துடன் தான் இதை இடைக்கால தடை உத்தரவு கொடுத்துள்ளது. யாருடைய நிலத்தை இவர்கள் வஃப் வாரியம் என்று அறிவிப்பார்கள் ? சுப்ரீம் கோர்ட் இவர்களுடைய எல்லையை மீறுகிறது.

நாட்டில் மதம் என்று வழிபாடு செய்ய தானே தவிர, மதத்தை வைத்து அரசியல் செய்ய யாருக்கும் உரிமை இல்லை. பிஜேபியை மதம் என்று சொல்லி, எதிர்க்கட்சிகள் மதத்திற்கு உள்ளே அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆக கூடி இந்துக்கள் முட்டாள்களாக இருந்தால், எதிர்க்கட்சிகளுக்கு வாக்களியுங்கள். நீங்கள் அறிவு பூர்வமாக சிந்திப்பவர்களாக இருந்தால், இந்த பிரச்சனை மதப்பிரச்சனையாக ஆக்கியிருக்கிறார்கள்.
ஒரு நாட்டில் ஒவ்வொரு மதத்திற்கும் ஒரு சட்டங்களை கொண்டு வந்து, அவரவர் இஷ்டத்திற்கு அவரவர் செயல்பட்டுக் கொண்டிருந்தால், எப்படி நிர்வாகத்தை நடத்த முடியும்? இதுக்கெல்லாம் சுப்ரீம் கோர்ட் என்ன தீர்வு கொடுக்கப் போகிறது? அது மட்டுமல்ல, மத்திய அரசு முஸ்லிம்கள் அல்லாத ஒரு மூன்று பேர் அந்த வாரியத்தில் உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என்று இந்த சட்டத்தில் சொல்லப்பட்டுள்ளது. அப்போதுதான் இவர்கள் என்ன செய்கிறார்கள்? யாருடைய சொத்தை இவர்கள் அபகரிக்க பார்க்கிறார்கள்? என்பது தெரியவரும்.

இதற்கு சுப்ரீம் கோர்ட்டுக்கு, இந்த எதிர்க்கட்சிகள் வாழ்த்து சொல்லி, நன்றி சொல்லி பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். வேண்டுமானால், இந்த எதிர்க்கட்சிகள் கொள்ளை அடித்து வைத்துள்ள சொத்துக்களை எல்லாம் முஸ்லிம்களுக்கு எழுதி வையுங்கள். இப்போதுதான் உங்களுக்கு எல்லாம் புத்தி வரும்.
இன்று அரசாங்க சொத்தையும், தனியார் சொத்தையும், வஃப் சொத்து என்று பதிவு செய்து இருக்கிறார்கள் . இதைப் பற்றி எல்லாம் பேசாமல், இதைப் பற்றி மக்களுக்கு இந்த உண்மை தெரியாமல் தான், வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் .ஆனால், பாதிக்கப்பட்ட மக்கள் இதை புரிந்து எவ்வளவு போராடி இருக்கிறார்கள் தெரியுமா? பல கிராமங்களில் பாதிக்கப்பட்ட மக்கள் இருக்கிறார்கள் .அவர்களை கேட்டுப்பாருங்கள் சொல்வார்கள் .ஒரு கிராமமே வஃப் சொத்து என்று ராணிப்பேட்டை மாவட்டத்தில் சொல்லிவிட்டார்கள். அந்த செய்தி கூட மக்கள் அதிகாரத்தில் வெளியிட்டிருக்கிறேன் .கிராமத்தின் பெயர் தான் ஞாபகம் இல்லை.

இப்படி மக்களுக்கு எதிரான செயல்பாட்டை செய்து வரும் இந்த வஃப் வாரியம், இதில் சுப்ரீம் கோர்ட் இந்த பிரச்சனைக்கு தடை விதித்திருப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் வரிசையில் விஜய் நன்றி தெரிவித்திருப்பது, ஒட்டுமொத்த இந்துக்களின் எதிர்ப்புக்கு இப் பிரச்சனையை கொண்டு சென்றிருக்கிறார்கள்.

மேலும், தீவிரவாதம், பயங்கரவாதம் ,அந்நிய சக்திகளின் தலையீடு, இவை அத்தனையும் காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் கூட்டணிகள் மறைமுகமாக அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது .அதற்கு ஊடகங்கள் அதை மக்களிடம் உண்மையென்று சொல்லிக் கொண்டிருக்கிறது.
அதை தான் நேற்று கூட ,இந்த பிளாக் லிஸ்ட் அல்லது சிவப்பு குறியீடு என்று பட்டியல் உளவுத்துறை மூலம் ஆய்வு செய்து மக்கள் அதிகாரத்தில் எடுக்க வேண்டும் என்று மத்திய உளவுத்துறைக்கு இந்த கோரிக்கையை, மத்திய அரசிடம் கொடுக்க வேண்டும் என்று மக்கள் அதிகாரம் பத்திரிகையின் கோரிக்கையாகவே சொல்லப்பட்டது.
இது தவிர, மாநில அரசின் ஊழல்கள், மத்திய அரசு கண்டுபிடித்து சிபிஐ மூலமோ, அல்லது அமலாக்கத்துறை மூலமோ அல்லது வருமான வரித்துறை மூலமோ நடவடிக்கை எடுத்தால் ,மத்திய அரசு இதை வைத்து எங்களை பயமுறுத்துகிறது என்கிறார்கள். அப்படி என்றால் உங்கள் தவறுக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது. உடனே சுப்ரீம் கோர்ட் சென்று விடுவீர்கள்.சுப்ரீம் கோர்ட் உங்களை காப்பாற்றும்.
அதேபோல் ,30 நாட்களுக்கு மேல் பதவியில் இருப்பவர்கள் ஒருவர் சிறையில் இருந்தால், அந்தப் பதவி தானாகவே போய்விடும். இது ஒரு நல்ல சட்டம் தான். இதற்கும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். பதவியில் இருந்து கொண்டு, சிறையில் இருந்து இருந்தால், அங்கிருந்து கையெழுத்து போட்டு அனுப்புகிறார்கள். இது எவ்வளவு கேவலமான வேலை. நீங்கள் தவறு செய்து விட்டு தான் சிறைச்சாலைக்கு செல்கிறீர்கள் .

அந்த வழக்கு பத்து ஆண்டுகள் சுப்ரீம் கோர்ட்டில் ஓடிக்கொண்டிருக்கும் .அதுவரை இவர் பதவியில் இருந்து சிறைச்சாலையில் கையெழுத்து போட்டு, நிர்வாகத்தை பார்த்துக் கொண்டிருப்பாரா? டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் போலவா ?

இப்படி எல்லாம் மறைமுக அரசியல் சுப்ரீம் கோர்ட்டில், மத்திய அரசுக்கு எதிராக நடந்து கொண்டிருக்கிறது. இதற்கு சுப்ரீம் கோர்ட்டுக்கு மத்திய அரசு நிர்வாகத்தில் தலையிடக்கூடாது .நிர்வாக பிரச்சனைகளில் தலையிடக்கூடாது. சட்ட பிரச்சனைகளில் மட்டும்தான் நீதிமன்றம் தலையிட வேண்டும் ஒழிய, மத்திய அரசு கொண்டுவரும் மசோதாக்களுக்கு தடை விதிப்பது, ஊழல்வாதிகளுக்கு துணை போவது, இப்படிப் பட்ட பிரச்சனைகளுக்கு எல்லாம் நாடாளுமன்றத்தில் உடனடியாக சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கை.