
தமிழ்நாட்டில் அதன் எதிரொலியாக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள், மாநில ஆளுநர் ரவி கிடப்பில் போடப்பட்டு வருவதால், அதற்கு உச்சநீதிமன்றம் சென்று தமிழக அரசு வழக்கு தொடர்ந்து ,அந்த வழக்கின் தீர்ப்பு அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக இருந்தாலும், இரண்டு நீதிபதிகளின் அமர்வு ,அந்த சட்ட மசோதாவை உச்ச நீதிமன்றத்தில் நிறைவேற்றி ,திமுக அரசிடம் பாராட்டு ,பத்திரங்களை பெற்று விட்டார்கள்.

அதற்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலினும் ,திமுக கட்சியின் பேச்சாளர்களும் ,கட்சியின் ஒத்து ஊதும் தொலைக்காட்சிகள் ,,பத்திரிகைகள் நன்றி தெரிவித்து விவாத மேடையில் ,இதற்கு பாராட்டும் தெரிவித்தது.தவிர,

அப்போதும் மக்கள் அதிகாரத்தில் ,இது ஒரு தவறான தீர்ப்பு என்று அன்றே எடுத்துரைத்தது. அதையெல்லாம் அப்போது பெரிதாக எடுத்துக் கொண்டிருக்கமாட்டார்கள். ஏனென்றால், பெரிய தொலைக்காட்சி ,பெரிய பத்திரிகை என்று மக்கள் என்றும் நினைத்துக் கொண்டிருப்பது தான் மிகப்பெரிய தவறு. அந்த தவறையும் மக்கள் அதிகாரம் சுட்டிக்காட்டியது.

மேலும், பத்திரிகை துறையில் பெரிய பத்திரிகை என்றும், சிறிய பத்திரிகை என்றும் பேதம் கிடையாது. ஏனென்றால், உண்மையான செய்திக்கும் ,அறிவு சார்ந்த விஷயங்களில்,ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு கிடையாது . அது எதற்கு என்றால்!
பணத்துக்கு தான் ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு உண்டு. ஒருவரிடம் 100 கோடி இருக்கும், ஒருவரிடம் 10 கோடி இருக்கும், ஒருவரிடம் பத்து லட்சம் இருக்கும் ,இந்தப் பாடுகள் எல்லாம் பணத்துக்கு தான் உண்டு. அறிவுக்கு அது இல்லை. மேலும்,

மத்திய மாநில அரசின் செய்தித் துறை ,இப்போது அறிவுக்கு அர்த்தம் இல்லாமல் ,பணத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் துறையாக ,அது செயல்பாட்டு வருக்கிறது. இது அவர்களுக்கே தெரியாது. சர்குலேஷன் சட்டம் என்பது பணத்தை வைத்து தான் சர்குலேஷன் என்பது ஆடு, மாடு மேய்ப்பவனுக்கு கூட தெரியும் . அது கூட தெரியாமல் செய்தித் துறை அதிகாரிகளாக இருக்கிறார்கள்.மேலும்,

பணம் இருந்தால் ,என்னிடம் எவ்வளவு சர்குலேஷன் நீங்கள் கேட்டாலும், யாராக இருந்தாலும் அத்தனை பிரதிகளையும் அச்சு அடிக்க முடியும் .
ஆனால், உண்மை ,அறிவு சார்ந்த விஷயம் , மக்கள் என் கருத்துக்கள், மக்களின் பிரச்சினைகள், செய்தியின் உண்மை தன்மை, இதை எல்லாரும் கொடுக்க முடியாது .அதை உணர்த்தவும் முடியாது. அதுபோல்தான் ,இந்த சட்ட சிக்கல் பிரச்சனை. நீதிமன்றத்திலே பல ஆண்டுகளாக ,உச்ச நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்றத்திலும், மத்திய அரசுக்கும் ,மாநில அரசுக்கும் இடையே ஒரு போட்டியை நீதித்துறை ஏற்படுத்தி விட்டது.

அதற்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைக்க ஜனாதிபதி மாளிகை இன்று நீதித்துறையை கண்காணிக்கும் ஒரு குழு அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அது உயர்நீதிமன்றத்திலும் ,அந்த குழு அமைக்க வேண்டும், மாவட்ட அளவிலும் ,உள்ள நீதிபதிகளுக்கும் அந்த குழு அமைக்க வேண்டும். அப்போதுதான் இந்த நீதித்துறையில் பொது மக்களின் வழக்குகள் தேங்காமல், வாய்தா போட்டு இழுத்தடிப்பது ,,தவறான தீர்ப்புகளை கொடுப்பது , ஊழல்வாதிகளுக்கு சாதகமான தீர்ப்பு கொடுப்பது,,போன்றவற்றை யெல்லாம் சரி செய்ய முடியும்.இது ஒரு நல்ல விஷயம் தான்.

இது பற்றி ஏற்கனவே மக்கள் அதிகாரத்திலும், செய்தி வெளியிட்டு இருக்கிறோம். இப்போது நீதிமன்றம் ஆட்சியில் இருப்பவர்களின் ஊழல் விவகாரத்திலும் தலையிட்டு, அதற்கு இவர்கள் மறைமுக ஆதரவு தெரிவிக்கிறார்கள் என்று பலமுறை மக்கள் அதிகாரத்தில் குறிப்பிட்டு இருக்கிறேன்.மேலும்,

தமிழ்நாட்டில் எத்தனையோ அமைச்சர்கள் மீது ஊழல், வழக்குகள் போய்க்கொண்டிருக்கிறது. அந்த ஊழல் வழக்குகள் மீது அவர்கள் நீதிமன்றத்தில் போய் தடையானை வாங்குவதும் ,அந்த வழக்குக்கு கால நீட்டிப்பு செய்து ,அவர்களை காப்பாற்றிய வருவதும், ஊழல் ஒழிப்புக்கு மிகப்பெரிய சவால்களாக நீதிமன்றங்கள் இருந்து வருகிறது என்று பொது மக்களுக்கும் தெரியும்.

மேலும்,நீதிமன்றம் ஊழல்வாதிகளை நிரபராதிகளாக ஆக்கி ,சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க வைக்க என்னென்ன வழிமுறைகளை எல்லாம் கையாண்டு இருக்கிறார்கள்? என்பதை சில நீதிபதிகள் இந்த வழக்கு விசாரணையின் போது, ஜனாதிபதி மாளிகை அதை ஆய்வு செய்து பார்த்தால், உண்மை புரியும். தவிர,

தமிழ்நாட்டில் டாஸ்மாக் ஊழல், தமிழக மக்களால் பேசப்பட்ட ஊழல், அப்படிப்பட்ட ஊழலை அமலாக்கத்துறை விசாரிக்கக் கூடாது . அவர்களுக்கு அதிகாரம் இல்லை என்று சொன்னது உச்ச நீதிமன்றம், அப்படி என்றால், அந்த ஊழலை யார் தான் விசாரிப்பது?

தவிர,அந்த ஊழலை அப்படியே விட்டு விட்டு போகலாமா? இது எவ்வளவு பெரிய தவறான செயல்? ,இதுபோல்,உச்சநீதிமன்றம் பல இடங்களில் தவறு செய்துள்ளது. இந்த தவறை நீதிபதிகள் தவறான அரசியல்வாதிகளுக்கு ,ஊழலை மறைமுகமாக ஊக்கு வித்து காப்பாற்றும் வேலை தான் ,இந்த வேலை. மேலும்,இது சமூக நலனுக்கும் ,தேச நலனுக்கும் எதிரானது.இதன் விளைவு ,தற்போது
நாட்டின் அரசியல்! ஊழலை மையமாக வைத்து போய்க் கொண்டிருக்கிறது. அதற்கு நீதித்துறையில் அரசியல் கட்சி பின்னணி கொண்ட நீதிபதிகள் தான் முக்கிய காரணம். இதற்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் வேலையை ஜனாதிபதி மாளிகை தொடங்கி விட்டது.

மேலும், ஜனாதிபதி மூர்மு உச்சநீதிமன்ற நீதிபதிகளிடம் 14 கேள்விகளை கேட்டுள்ளார் .அதற்கு எந்த பதிலும், உச்சநீதிமன்ற நீதிபதிகளிடமிருந்து இதுவரை சரியான பதில் இல்லை. அதற்கு பதிலாக, மாநில முதல்வர்களின் கருத்து கேட்பு ,உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் சொன்னவுடன் ,இது சட்ட வரம்பிற்கு எதிரானது.மேலும்,
சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள், ஆளுநர் கிடப்பில் போட்டால், அதை உச்சநீதிமன்ற நீதிபதிகள் அந்த மசோதாவை நிறைவேற்ற உத்தரவு பிறப்பிப்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. மேலும்,
ஒவ்வொரு மாநில சட்டமன்றத்திலும், பல மசோதாக்கள் அந்த மசோதாவின் உண்மை நிலை குறித்து ,ஆய்வு செய்யாமலே சட்டமன்றத்திலே நிறைவேற்றுகிறார்கள். அது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக இருந்தாலும் ,இவர்கள் என்ன மசோதாக்களை நிறைவேற்றினாலும் ,அதற்கு அப்படியே ஆளுநர் கையெழுத்து போட வேண்டியது தான் என்பது மாநில முதல்வர்களுடைய கணக்குமட்டுமல்ல, அவர்களுடைய கருத்தும் அது தான்.

அதற்கு அரசியலமைப்பு சட்டம் தேவையற்றது .இவர்களுக்காக எந்த சட்டத்தை வேண்டுமானாலும், நிறைவேற்றிக் கொள்ளலாம். அதற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க வேண்டுமா? மேலும் ,அது மக்களுக்கு எதிராக இருந்தாலும், இவர்களுடைய சொந்த நலனுக்கு ஆதாயமாக இருந்தால், அந்த மசோதாவை நிறைவேற்றுகிறார்கள். அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை என்றால் , உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் மூலம் நீதிபதிகளிடம் அதற்கு ஒப்புதல் வாங்குகிறார்கள். இது எப்படிப்பட்ட குறுக்கு வழி?, அப்படிதான் தமிழ்நாட்டில்!

ஆளுநர் ரவியின் அதிகாரம் தான் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனம் .இத்தனை ஆண்டுகளாக ஆளுநர்கள் நியமித்ததை ,இன்று திடீரென்று தமிழக முதல்வர் ஸ்டாலின் ,சட்டமன்றத்திலே தீர்மானம் நிறைவேற்றி, அந்த மசோதாவை அவரே அதற்கு ஒப்புதல் அளிக்க அனுப்பி, ஆளுநர் முடியாது என்றவுடன் திருப்பி மறுபடியும், அதை நிறைவேற்றி ஒப்புதல் அளிக்க சொன்னால், முடியாது என்ற உடன் ,உச்ச நீதிமன்றத்தில் இந்த தவறான மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தார்கள். இது எவ்வளவு பெரிய தவறு.
இப்படியெல்லாம் நடக்கக்கூடிய உச்ச நீதிமன்றத்திலே, ஒரு செக் வைக்கும் வேலையை நீதிபதிகளுக்கு ஜனாதிபதி மாளிகை, உச்ச நீதிமன்ற நீதிபதிகளை கண்காணிக்கும் குழுவை அமைக்கும் பணியை ஆரம்பித்துவிட்டது. அதிர்ச்சியில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் இருந்து வருகிறார்கள்.மேலும்,
இவர்களுடைய நிலைப்பாடு என்னவென்றால், மத்திய அரசுக்கும் ,மாநில அரசுக்கும் மோதல் போக்கிலே தொடர்ந்து இருந்து வந்தால் ,சட்ட போராட்டங்கள் கொண்டு வருவார்கள்.
அதற்கு இவர்களே , அரசியலமைப்பு சட்டத்திற்கு அது எதிராக இருந்தாலும், நாடாளுமன்ற அதிகாரத்தை இவர்கள் கையில் எடுத்து, தீர்ப்பு சொல்வார்கள். இதற்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி ?வெகு விரைவில் ஜனாதிபதி மாளிகை......!