பாகிஸ்தான் ராணுவத்திற்கும், இந்திய ராணுவத்திற்கும் இடையே இரவு முழுதும் தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது பாகிஸ்தானின் இஸ்லாமாபாத், லாகூர், கராச்சி மற்றும் சியால் கோட் நகரில் இந்திய ராணுவம் தாக்குதலை நடத்தி வருகிறது.
அதேபோல், காஷ்மீர், ராஜஸ்தான் ,பஞ்சாப் உள்ளிட்டு மாநிலங்களில் பாகிஸ்தானும் இந்தியாவின் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் இரு தரப்பிலும் ஏற்பட்டுள்ள உயிர் சேதங்கள், பொருட்சேதங்கள்,பற்றி தகவல் வெளியாகவில்லை.
மேலும், நேற்று இரவு தொடங்கிய இந்த தாக்குதல் தொடர்ந்து நீடித்து வருகிறது. நாட்டின் ராணுவ வீரர்களின் போர்த் தாக்குதல் குறித்து பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ராஜ் நாத் சிங் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.