ஏரிகளில் சவுடு மண் ஊழலுக்கு யார் காரணம்……? வேதனையில் குவாரி உரிமையாளர்கள்.

 

தமிழ்நாட்டில் ஏரிகளில் சவுடு மண், கிராவல், மலை மண், போன்றவற்றிற்கு பர்மிட் அதாவது அனுமதி வழங்கும் அதிகாரிகள், பொதுப்பணித்துறை வருவாய்த்துறை கனிமவளத்துறை மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம், இறுதியாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் இத்தனை துறைகளில் இருந்து இதற்கு அனுமதி கொடுக்கப்படுகிறது.

மேலும், இதை குறிப்பிடப்பட்ட கிராமத்தில், இன்னாருக்கு 5000 லோடு, இத்தனை அடி ஆழம், இத்தனை அடி கியுப் மீட்டர் என்று அளவு குறிப்பிட்டு, அந்த சவடு மண் குவாரிகளில், அரசாங்கம் சவுடு மண் எடுக்க அனுமதி கொடுக்கிறது. ஆனால் கொடுக்கப்பட்டது 5000லோடு, என்றால், ஓட்டுவது அந்த ஏரியே ஓட்டி விடுகிறார்கள். இதற்கு யாரெல்லாம் முதலில் முக்கிய காரணமாக இருக்கிறார்கள் ? என்றால்!

அந்த கிராமத்தில் முன்னாள் தலைவர்கள், முன்னாள் கவுன்சிலர்கள், முன்னாள் வார்டு உறுப்பினர்கள், இன்னாள் கவுன்சிலர்கள், அது மாவட்ட கவுன்சிலர்கள் முதல் ஒன்றிய கவுன்சிலர்கள் வரை, முன்னாள் தலைவர்கள் சுமார் 30 வருடத்திற்கு முன் இருந்தவர்கள், தற்போது உள்ள இன்னாள் தலைவர்கள், துணைத் தலைவர்கள், (சமீபத்தில் போனவர்கள்) இவர்கள்தான் முதலில் வந்து நிற்கின்ற ஏஜென்ட்கள். அதாவது ஒரு கிராமத்தின் பொது சொத்து என்றால்! எங்களுக்கு தான் முதல் பங்கு என்பது போல, இந்த சவுடு மண் ஓட்டுபவர்களிடம் பேரம் பேசுகிறார்கள். மேலும்,

நாட்டில் முக்கிய அரசு பதவிகளில் இருந்து ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் வருவாய்த்துறை ,காவல்துறை அரசு ஊழியர்கள் யாராக இருந்தாலும்,அதிகாரம் மிக்க பொறுப்பில் இருந்தவர்கள் கூட ஓய்வு பெற்று விட்டால், அவர்களெல்லாம் ஓரமாக ஒதுங்கி விடுகிறார்கள். அவர்கள் பொது விஷயங்களில் கலந்து கொள்வதில்லை. பொது பிரச்சனைகளில் பங்கெடுப்பதில்லை. ஆனால், ஊர் சொத்துக்களை பங்கு போட்டுக் கொள்ள எவ்வளவு பேர் வந்து நிற்கிறார்கள்? இவ்வளவு பேருக்கும் அவன் லட்சங்களில் பணத்தைக் கொடுத்துவிட்டு, முதல் போட்டு எடுக்கிறவன் என்ன எடுத்துச் செல்வான்?

ஏதோ ஒரு அரசியல் கட்சியின் பெயரை சொல்லிக்கொண்டு, முதலில் வந்து நிற்கின்ற கூட்டம் இவர்கள் தான். இது ஊரிலும் இருக்கிறது. காலனியிலும் இருக்கிறது. ஸ்டாலின் நேற்று அந்த வார்த்தையை சட்டமன்றத்திலே நீக்கிவிட்டார். இருப்பினும் இங்கே சொல்ல வேண்டிய அவசியம் இருக்கிறது. இதற்குப் பிறகு, கிராமத்தில் உள்ள பொது மக்களுக்கு குடும்ப அட்டைக்கு 5000, பத்தாயிரம் என்று பேரம் பேசிவிட்டு, அது கொடுப்பார்களா? என்று கூட தெரியாது. ஆனால், பேசுகிறார்கள்.

இப்படி இந்த ஊழல் அரசியல் கட்சிகளின் மாவட்ட செயலாளர்கள் முதல் ஒன்றிய செயலாளர்கள், கிளை செயலாளர்கள் வரை போய் நிற்கிறார்கள். இதற்குப் பிறகு எம்எல்ஏ, எம்பி, மந்திரி அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், இது தவிர, பத்திரிகை, தொலைக்காட்சிகளின் நிருபர்கள், இவர்கள் அத்தனை பேரும் கவனித்தால் தான் ஒருவன் இந்த 5000 லோடு ஓட்ட முடியும் என்றால்! அங்கே ஊழல் நடக்காமல் என்ன நடக்கும்?

மேலும், இந்த மண் ரோடு வேலைகளுக்கு, கட்டிட வேலைகளுக்கு அவசியம் பயன்படுகிறது. இதை கட்டுப்படுத்த திமுக அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது? இது பற்றி கொடுக்கப்பட்ட அளவைவிட மண் எடுக்கிறார்கள் என்று கிராம மக்கள் புகார் அளித்தால், மாவட்ட ஆட்சியர்கள் கிடப்பில் போடுகிறார்கள். ஒருவேளை அவர்களுக்கும் பணம் போகிறதா? என்பதுதான் கிராமத்தில் உள்ள சமூக ஆர்வலர்களின் முக்கிய கேள்வி?

Popular posts
பறையர் இன மக்களுக்கு தங்கள் வரலாறு தெரியாமல், ஆளுக்கு ஒரு கருத்து பேசுகிறார்கள் . இதுபற்றிய கடந்தகால வரலாற்று உண்மைகள் என்ன?
படம்
விவசாயத்தை விட டாஸ்மாக் மது கடைக்கு திமுக அரசு முக்கியத்துவம் தருகிறதா? ஆவூர் கிராம மக்கள்.
படம்
Digital Medicine for Heart (Heart can be recycled without cardiac transplant)
படம்
நாட்டில் பத்திரிகைகளுக்கு சமூக நலன், தேச நலன் முக்கியமா? சர்குலேஷன் முக்கியமா? இதைப் பற்றி மத்திய மாநில அரசின் செய்தி துறைக்கு இந்த உண்மையாவது தெரியுமா? - மக்கள் அதிகாரம்.
படம்