நீதித்துறையில் நீதியை நிலை நாட்டியது மட்டுமல்ல, சமூகத்தில் நீதிபதிகளின் பங்களிப்பு என்ன?அது தான் கடந்த நேரமும் !நடந்த தூரமும்!(Justice sivaraj Patel & karpaga vinayagam) ஜஸ்டிஸ் சிவராஜ் பட்டேல் & கற்பக விநாயகம் .

 

குக் கிராமத்தில், வறுமை கோட்டுக்குள் வாழ்ந்த ஒரு குடும்பத்தில் பிறந்த நீதிபதி சிவராஜ் பாட்டில் தினமும் 35 கி.மீ.மாட்டு வண்டியில் பயணித்து பள்ளி படிப்பு தொடர்ந்தவர் எப்படி அதை உச்சநீதிமன்றம் வரை கொண்டு சென்று முடித்தார் ? என்பதுதான் சிவராஜ் பாட்டில் தன்னுடைய சுயசரிதை நூலில் குறிப்பிட்டுள்ள சாராம்சம்! கடந்த நேரமும், நடந்த தூரமும் .







நாட்டில் நீதித்துறை சமூகத்தின் ஒரு அங்கம். அதனால் தான், ஜனநாயகத்தின் மூன்றாவது தூணாக நீதித்துறை விளங்குகிறது. இந்த துறையில் நீதிபதிகளாக பணியாற்றி தான் ஓய்வு பெற்றும், சமூகத்தில் அவர்களுடைய பங்களிப்பு என்ன? அதுதான் நேற்று மதுரையில் நடைபெற்ற ஓய்வு பெற்ற நீதிபதிசிவராஜ் பட்டேல் அவர்களின்


அதேபோல் நாங்கள் பத்திரிக்கையில் அவர்களை நல்லவர்கள் என்றும், வல்லவர்கள் என்றும்,நேர்மையானவர் என்று பாராட்டி எழுதினால்! அது சமூகத்திற்கு ஆபத்து. நாட்டிற்கு ஆபத்து. அப்படி எழுதக்கூடிய பத்திரிகைகளுக்கு தான், இன்று பத்திரிக்கை என்று சலுகை ,விளம்பரங்கள் மத்திய மாநில அரசின் மூலம் கொடுக்கப்பட்டு வருகிறது.




இதை சொல்வது கார்ப்பரேட் கம்பெனி பத்திரிகைகள். இவர்கள் மட்டும் மக்களின் வரிப்பணத்தில் பத்திரிக்கை தொலைக்காட்சி நடத்துவார்கள். ஆனால் இந்த சமூக நலனுக்காகவும் , ஊழலை எதிர்த்து போராடக் கூடிய பத்திரிகைகளாகவும் இருக்கக்கூடிய குறைந்த சதவீத பத்திரிகைகளுக்கு கூட இந்த சலுகை, விளம்பரங்கள் சர்குலேஷன் சட்டத்தால் ஏமாற்றி வருகிறார்கள்.


சர்குலேஷனுக்கு அர்த்தம் தெரியாத மத்திய மாநில அரசின் செய்தித்துறை அதிகாரிகள் இந்த பத்திரிகை துறையை அழித்துக் கொண்டிருக்கிறார்கள். அது அவர்களின் சுயநலம் 30% கமிஷன் யார் தருவார்கள்? இல்லை என்று மறுத்தால் இதை சிபிஐ விசாரணை செய்யட்டும் அப்போது வெளிவரும். எதற்காக விளம்பரத்தை ஏஜென்ட்கள் மூலம் கொடுக்கிறார்கள்?


இதைதான் மக்கள் அதிகாரம் பத்திரிக்கை இணையதளம் தொடர்ந்து மத்திய மாநில அரசின் செய்தித் துறைக்கு எடுத்துச் சொல்லி வருகிறது. மேலும், சர்குலேஷன் என்ற சட்டம் இதை எப்படி தீர்மானிக்கிறது? இவர்கள் உடலை தான் பெரிதாக நினைக்கிறார்கள். உடலை விட உயிர் பெரிது. உயிர் இல்லாவிட்டால் அது பிணம். அந்த பிணத்தை வைத்து மத்திய மாநில அரசின் செய்தித்துறை கணக்கு காட்டுகிறார்கள்.




ஆயிரக்கணக்கில் அரசியல் கட்சிகள் இருக்கிறது. இருந்து என்ன பயன்? அவர்களுடைய சமூக பங்களிப்பு என்ன? அதேபோலத்தான், ஆயிரக்கணக்கில் பத்திரிகைகள் இருக்கிறது. அதன் தரம் என்ன? பத்திரிக்கை துறை ஆளும் கட்சியினரின் சுயநலமும், பத்திரிகை வியாபாரத்தின் வருமானமும், சமூகத்தின் சுயநலமா? அல்லது பொது நலமா? என்பதை அறிவார்ந்த சமுதாயம் இதை சிந்திக்குமா? மேலும், அதிக பக்கங்களையும், சர்குலேசனையும் வைத்து ஒரு பத்திரிகையை தீர்மானிக்கும் முட்டாள் தனமான முடிவு!


சாமானிய மக்கள் நடத்தும் பத்திரிகைகள்! தகுதி இருப்பவர்களால் கூட, பத்திரிகையை நடத்த முடியாமல் காணாமல் போய்விடுகிறார்கள். அந்த அளவிற்கு இதில் உள்ள அரசியல். இதையெல்லாம் மாற்றாமல் நாட்டு மக்களுக்கும், இந்த சமூகத்திற்கும், நிச்சயம் நேர்மையான அரசியல்! கிடைக்க வாய்ப்பே இல்லை.