திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றக்கூடாது என்று முதல்வர் ஸ்டாலின் இந்த அளவுக்கு சட்ட போராட்டத்தையும் ,மக்களிடம் அவபெயரையும், தெய்வ குற்றத்தையும் செய்ய வேண்டிய அவசியம் என்ன?

மேலும்,திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது, இது ஒரு பெரிய விஷயம் அல்ல. இதனால், எந்த சட்ட ஒழுங்கு பிரச்சனையும் ஏற்படாத நிலையில், இதை எதற்கு தடுக்க வேண்டும்?
அடுத்தது ,உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் ,அதை மதிக்காமல் உச்ச நீதிமன்றம் செல்வது ஏன்? அதற்காக பல கோடி ரூபாய் செலவு செய்வது ஏன்? அது மட்டுமல்ல, இதனால் எந்த மதத்தினருக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லை, எந்த ஆபத்தும் இல்லை. முஸ்லிம் மதத்தினரே கூட, இந்துக்கள் தீபம் ஏற்றி வழிபடுவதை பற்றி அவர்களும், எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.

இப்படி பல கேள்விகளுக்கு இந்த பிரச்சனையை திமுக ஏன் இதை பெரிய அளவில் இந்த பிரச்சனையை நகர்த்துகிறது? மேலும் ,ஒரு சாதாரண விஷயத்தை, இந்த அளவுக்கு பெரிது படுத்த வேண்டிய அவசியம் என்ன?
தவிர, எத்தனையோ கோடி மக்களின் பிரச்சினைகள் இருக்கிறது. அதை எல்லாம் தாண்டி இந்த பிரச்சனையில் எதிர்க்கட்சிகள் கூட்டணி ஒரு பக்கம் அரசியல் செய்கிறது .ஸ்டாலின் ஒரு பக்கம் அரசியல் செய்கிறார் .
இப்படிப்பட்ட அரசியல் மக்களுக்கு தேவையில்லாத ஒன்று. தீபத்தூனில் தீபம் ஏறறினால் ஆட்சி போய்விடுமா? என்ன கணக்கு ?உங்கள் கணக்கு? இது ஜோதிடகணக்கா......? எந்த கணக்காக இருந்தாலும் இறைவனிடம் உங்கள் கணக்கு செல்லுபடியாகுமா......? மேலும்,இதன் மர்ம ரகசியம் வெளி வருமா ......? நாட்டு மக்களுக்காக ஆட்சியா ?இல்லை உங்களுக்காக ஆட்சியா? - பொங்கும் முருக பக்தர்கள் மற்றும் இந்துக்கள்.மேலும்,
பேசறது நாத்திகம், கடவுள் மறுப்பாளர்கள் ,ஆனால், ஜோதிடம் பார்ப்பார்கள், ஆன்மீகம், தெய்வீகம் எல்லாம் மறைமுகமாக செய்து கொள்வார்கள்.இதுதான் திமுக .
