திமுக ஆட்சியில்! நீதிமன்றத்தையும் மதிப்பதில்லை, பத்திரிகைகளையும் மதிப்பதில்லை, இவர்களுக்கு தெரிந்ததெல்லாம், எப்படியும் பேசுவது அரசியல் திறமையா? அதை ஞாயப்படுத்துவது இவர்களுடைய பத்திரிகைகளா? இதுதான் திமுக ஆட்சியா?

 


நீதிபதி சுவாமிநாதனின் தீர்ப்பை மதிக்காத திமுக அரசு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அதுவும் இந்துக்களின் காணிக்கை பணத்திலே, நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து வழக்கு நடத்திக் கொண்டிருக்கிறது.

அடுத்தது பத்திரிகை என்பது இவர்கள் சொல்கிற செய்திகளை போடுகிறவர்கள் எல்லாம் பத்திரிக்கை .உண்மையை சொல்கிறவர்கள் எல்லாம் பத்திரிகை இல்லை. இவர்கள் சட்டத்தை மீறி எதை செய்தாலும், அதற்கு நியாயப்படுத்துவதும், அந்த பத்திரிகை ,தொலைக்காட்சிகளில் மக்களிடம் காட்டி அதை செய்தி என்று போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் தற்போதைய தமிழ்நாட்டு அரசியல்.

மேலும்,நீதித்துறையில், நீதிபதியின் தீர்ப்பையே அரசியல் ஆக்கி அவருக்கு எதிராக அவதூறாக பேசும் அரசியல், சட்டம் படிக்காமல், சட்டம் என்ன என்று தெரியாத, பட்டம் வாங்கிக் கொண்ட கூட்டத்தை வைத்து போராட்டம் நடத்துவது, இதையெல்லாம் தமிழ்நாட்டு அரசியலில், இதுவரை யாருமே பார்க்காத ஒரு கேவலமான அரசியல் ஸ்டாலின் நடத்திக் கொண்டிருக்கிறார்.

மேலும்,இவர்களுக்கு தேவையானால் சட்டம் ,உயர்நீதிமன்றத்தில் மதிக்க வேண்டியதில்லை .ஆனால், உச்ச நீதிமன்றத்தில் போய் ,அங்கே விலை கொடுத்து வாங்குகிறீர்களா? ஆக கூடி ஆடு ,மாடு மேய்ப்பவன் தான் உங்களுடைய அரசியலுக்கு லாயக்கியானவர்கள். இல்லையென்றால், அடியாள் வேலை பார்ப்பவர்கள் தகுதியானவர்கள்.மேலும்,

அரசியல் என்றால்! எதுவும் தெரியாதவன் இருப்பான், அவனிடம் செய்ய வேண்டியது, அவனிடம் பேச வேண்டியது, எல்லாமே தமிழ்நாட்டில் செய்து கொண்டிருக்கிறார்கள்.மேலும், உங்களுக்கு யார் எழுதிக் கொடுக்கிறானோ, அதை படிப்பவர்கள். அதையாவது ஒழுங்கா செய்யக்கூடிய ஆட்கள் பக்கத்தில் இல்லை போல தெரிகிறது. தமிழ்நாட்டு மக்களுக்கு திமுகவின் ஆட்சி காலம்! மிக ,மிக சோதனையான காலம். பட்டாலாவது புத்தி வருமா? இவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் எப்படியும் பேசுவதும், கொள்ளையடித்து ஊழல் செய்து சொத்துக்களை குவிப்பது தான், தெரிகிறது. அங்கே

அமலாக்கத்துறை, சிபிஐ, உள்ளே வந்து கழுத்தை நெறிக்கும்போது, தொப்புன்னு மத்தியரசு காலில் விழுந்துடறாங்க. தமிழ்நாட்டு மக்கள் அரசியல் தெரியாத முட்டாள்கள் என்று செய்தியாளர்கள் நினைத்து விட்டார்களா? இல்லை ,திமுக கட்சிக்காரர்கள் நினைத்து விட்டார்களா? இல்லை, இவர்கள்தான் பத்திரிகை என்றும், இதைத் தவிர்த்து உண்மையை எழுதக்கூடிய பத்திரிகைகளே நாட்டில் இல்லை என்று தீர்மானித்து விட்டார்களா?

இவர்களுடைய சோசியல் மீடியாக்கள், இவர்களை நியாயப்படுத்தும் மீடியாக்கள் பேசுவதெல்லாம் சட்டமா? சட்டத்துக்கும், பேச்சுக்கும் அர்த்தம் தெரியாதவர்கள் எல்லாம், அரசியல் என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். மேலும்,நீதிபதிகள், நீதித்துறையை அவமானப்படுத்துவதற்கு சட்டப்படி இந்த ஆட்சியின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது பற்றி ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்புங்கள் .ஜனாதிபதி இந்த ஆட்சி இருக்க வேண்டுமா? வேண்டாமா? என்று அவர்கள் முடிவு கட்டட்டும். மேலும்,திருப்பரங்குன்றம் விவகாரம் நீதிமன்றம் பெரிதா? இல்லை அரசு பெரிதா? என்று போட்டி போட்டுக்கொண்டு, ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார் ஸ்டாலின்.

மேலும்,இந்துக்கள் எல்லாம் முட்டாள்கள், இவர்கள் எல்லாம் அறிவாளிகள். முருகனுக்கு சொந்தமான மலையில், எந்த கல்லில் ஏற்றினால் உங்களுக்கு என்ன? பக்தர்களுக்காக தான் கோயில்! பக்தனுக்காக தான் தெய்வம்! சாமியே இல்லை என்று சொல்கிறவன், கோயிலைப் பற்றி பேசுவதற்கு தகுதியே இல்லை.

மேலும்,இந்து அறநிலையத்துறை என்பது இந்துக்களுக்காக தான் அறநிலையத்துறையே, தவிர,இந்து அல்லாதவர்களுக்கு அறநிலையத்துறை அல்ல. இதிலே முஸ்லிம்கள் கூட சொல்கிறார்கள். இது இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் மோதலை உருவாக்குவதற்கு இந்த அரசாங்கம் செய்கின்ற நீதிமன்ற அவமதிப்பு வேலை.இதைப் பற்றி பொதுமக்களே வெளிப்படையாக பேசுகிறார்கள்.மேலும், மக்கள் எல்லாம் முட்டாள்கள் என்று இவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.யார் முட்டாள்கள்? என்று தெரியாமல் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

அரசியல் கட்சிகளிடம் ஓட்டுக்கு அர்த்தம் தெரியாதவர்கள், பணம் வாங்கி வாக்களிக்கும் ஓட்டு பிச்சைக்காரர்களிடம் இவர்கள் கையெடுத்து கும்பிட்டு,100 தடவை மச்சான், மாமா என்று அவர்களை பாலிஷ் செய்து, பாட்டில் கொடுத்து, இப்படி எல்லாம் ஓட்டு வாங்கி திரியற கூட்டம், பதவி வந்தவுடன் மக்களை எட்டி உதைப்பது தான் அரசியல் திறமை. மக்கள் தொடர்ந்து ஏமாறு மாட்டார்கள். ஒரு தடவை, இரண்டு தடவை ஏமாறுவார்கள். தொடர்ந்து ஏமாறுபவர்கள் அடி முட்டாள்கள் .

அதனால், திமுக அதற்கான வினையை தேடிக்கொண்டது. ஆட்சி நிர்வாகம் என்றால் என்ன? சட்டம் என்ன? எதுவுமே தெரியாமல், எல்லாம் நீங்கள் வைப்பது தான் சட்டம் என்றால்! நீதிமன்றங்கள் எதற்கு? பத்திரிகைகள் எதற்கு? எதுவுமே தேவையில்லையே! இதற்கு மக்களாட்சி என்ற அர்த்தமே இல்லையே! மக்களை ஆட்சி செய்வதற்கு பதிலாக, ஆடு, மாடுகளை ஆட்சி செய்யலாம். அதுதான் உங்களுக்கு சரியானது.மேலும்,

தர்காவிற்கு வழங்கிய உரிமையை உறுதி செய்ய வஃப் வாரிய வழக்கறிஞர்கள் வாதாடுகிறார்கள். இந்த தர்காவே வெள்ளைக்காரன் காலத்தில் தான் வந்துள்ளது. அதற்கு முன்னர் தர்கா கிடையாது. இங்கே பாதை இருந்தது, அங்கே பாதை இருந்தது, எல்லாம் வெள்ளைக்காரன் ஆட்சி செய்யும் போது வந்தது. அதுவும் திமுக ஆட்சியில் இதை சிக்கந்தர் மலை என்று சொல்லி, இந்துக்களை ஏமாற்றுகிற ஒரு பிரிவினைவாத சக்தி தான், ஓட்டுக்காக அரசியல் செய்பவர்கள், எப்படியும் பேசுவார்கள். நாட்டுக்கு அரசியல் செய்பவர்கள், நிதானித்து பேசுவார்கள். முருகனின் வரலாறு தெரியாத கூட்டம் ,எப்படியும் பேசும்.

எனக்கே திருப்பரங்குன்றம் மலையில் தர்கா இல்லாமல், அக்காலத்தில் இருந்த திருப்பரங்குன்றம் மலை படம், சோசியல் மீடியாவில் நான் பார்த்தேன். அதை எடுத்து வைக்கவில்லை. இப்போது நீதிபதிகள் அங்கே தர்கா இருந்ததற்கான ஆதாரங்கள்? ஆவணங்கள் கேட்கிறார்கள்? இவர்கள் எந்த ஆவணத்தை கொடுப்பார்கள்? போலி ஆவணமா? அல்லது வெள்ளைக்காரன் இவர்களுக்கு எழுதி கொடுத்த ஆவணமா? எதைக் கொடுக்க முடியும்? உண்மையிலே இந்த ஒரே ஒரு விஷயத்திற்காக திமுகவுக்கு உண்மையான இந்துவாக இருந்தால் வாக்களிக்கக் கூடாது. அவன் ஜாதியாக கூட இருக்கட்டும்.

நம்முடைய வழிபாட்டு உரிமைகள், நாம் வணங்கக்கூடிய முருக கடவுள் இதையெல்லாம் சட்டத்திற்கு புறம்பாக பேசிக்கொண்டு, உண்மைக்கு புறம்பாக பேசிக்கொண்டு, நம்முடைய பணத்திலே நீதிமன்றத்தில் வழக்கு நடத்திக் கொண்டு, நமக்கு எதிரான ஒரு ஆட்சியை செய்கின்றார் மு க ஸ்டாலின் .எனவே ,திமுகவுக்கு வாக்களிக்கலாமா? என்பதை நீங்கள் வணங்குகின்ற கடவுள் மீது உண்மையான பக்தி இருந்தால், மனசாட்சியுடன் சிந்தியுங்கள். இவர்களுக்கு வாக்களிக்கலாமா?
இந்து விரோத சக்தியாக விளங்க கூடிய திமுகவுக்கு உங்கள் வாக்கு அளிக்கலாமா?
ராஜாக்கள் ஆட்சி காலத்தில் இருக்கின்ற வரலாறு தெரியாமல், இந்தியாவை அடிமைப்படுத்தியவன் வரலாறு முக்கியமா? தவிர,

படிச்சவனுக்கும், படிக்காதவனுக்கும் அர்த்தம் தெரியாமல் பேசிக் கொண்டிருக்கும் ஆட்சிதான் திமுக ஆட்சி! இவர்கள் சொல்வதெல்லாம் செய்தி என்று பெரிய பத்திரிகைகள் சலுகை, விளம்பர கூலிக்கு எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட கூலியும் வேண்டாம், சலுகை, விளம்பரங்களும் வேண்டாம்.எங்களுடைய உரிமையை விட்டுக் கொடுக்காமல் எழுதிவிட்டு எங்கள் கடமையை செய்கிறோம்.ஆட்சி மாற்றம் வரும் போது, நிச்சயம் எங்களுக்கு கிடைப்பது உறுதி.

மேலும், திமுக நீதித்துறைக்கும், இந்துக்களுக்கும் சவால்களாக பிரச்சனையை கொண்டு போய் மதப் பிரிவினையை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கு இந்துக்கள் ஒற்றுமை மட்டும்தான் பதில் .