தேர்தல் ஆணையம் இனி வருங்காலத்தில் ஒவ்வொரு வேட்பாளர்களின் விண்ணப்பத்தில் உறுதிமொழி பத்திரத்தை ஒவ்வொரு வேட்பாளர்களும், கொடுக்க வேண்டும் என்ற சட்டத்தை தேர்தல் ஆணையம் கொண்டு வர வேண்டும்.
அதில், ஒரு வேட்பாளர் மீது ஊழல் வழக்கோ, மோசடி வழக்கோ அல்லது கிரிமினல் வழக்கோ, எந்த வழக்காக இருந்தாலும் அந்த வழக்கில் அவர் நிரபராதி என்று தீர்ப்பு வரும் வரை அவர்கள் தேர்தலில் நிற்கக்கூடாது. மேலும், அரசியல் கட்சிகளின் நேர்மை, வேட்பாளர்களின் நேர்மை, தேர்தல் ஆணையத்தால் உறுதி செய்யப்பட வேண்டும். அவை உறுதி செய்யப்படாத பட்சத்தில் எந்த அரசியல் கட்சியானாலும், தேர்தலை நிற்க தகுதி இல்லை என்பதை தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும்.
இப்படிப்பட்ட கடும் விதிமுறைகளை தேர்தல் ஆணையம் கொண்டு வர வேண்டும். தேர்தல் என்பது மக்களுக்காக இருக்க வேண்டும். நாட்டுக்காக இருக்க வேண்டும். ஆனால், இவர்களுடைய சுயநலத்திற்காக தேர்தல் தேர்தல் ஆணையம் நடத்துவது தேவையற்ற தேர்தல், என்பதை புரிந்து தேர்தல் ஆணையம் இப்படிப்பட்ட கடும் சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.மேலும்,

அரசியல் கட்சிகள் ஒருவர் மீது ஒருவர் ,சினிமா வசனம் போல, எங்கள் மீது வீண்பழி சுமத்துகிறது என்ற குற்றச்சாட்டை தொடர்ந்து கூறி வருகிறார்கள். மக்களும் இதை நம்பி தான் ஏமாந்து கொண்டிருக்கிறார்கள். அரசியல் கட்சி என்பது மக்களை ஏமாற்றுவதற்கு அரசியல் கட்சிகள் தேவையில்லை. மக்களுக்காக தான் அரசியல் கட்சிகளே தவிர, அரசியல் கட்சிகளுக்காக மக்கள் இல்லை.
ஆனால், யார் இருக்கிறார்கள்? என்றால், இப்போது இந்த கட்சிகளை நம்பி தேச துரோகிகள் ,ஊரை மாற்றுபவர்கள், பிராடுகள்,கிரிமினல்கள், மோசடி பேர்வழிகள், இவர்களுக்கு எல்லாம் முக்கியமாக அரசியல் கட்சி தேவைப்படுகிறது. இந்த அரசியல் கட்சிகளில் பொது நலனை விட, மக்கள் நலனை விட, இவர்கள் சொந்த நலன் தான் அவரவருக்கு முக்கியமாகிவிட்டது .

அதனால், அரசியலில், அரசியல் கட்சிகளில், பொது வாழ்க்கையில் ஈடுபாடுபவர்களுக்கு இந்தியாவில் தனி சட்டம் கொண்டுவர வேண்டும். அப்போதுதான் இந்த மோசடி பேர்வழிகள், பதவிக்கு வர முடியாது. ஊழல் பேர்வழிகள், பதவிக்கு வர முடியாது. கிரிமினல் வழக்குகள் உள்ள குற்றவாளிகள் ,நீதிமன்றத்தில் நிரபராதி என்று தீர்ப்பு வரும் வரை யாரும் தேர்தலில் நிற்கக்கூடாது.
அடுத்தது தேர்தல் ஆணையம் இவர்களிடம் ஒரு அப்பிடவேட் வாங்க வேண்டும். அதாவது ஒரு உறுதிமொழி பத்திரம், நான் தேர்தலில் வெற்றி பெற்று மக்களுக்கு (சேவை) பணியாற்றுவதற்காக தான், மக்கள் என்னை தேர்வு செய்திருக்கிறார்கள். ஒருவேளை நான் இந்த பதவியை வைத்து,சொத்துக்களை வாங்கினால், ஊழல் செய்த சொத்துக்கள், இந்திய அரசாங்கம் பறிமுதல் செய்ய எவ்வித நிபந்தனையும், சட்டப் போராட்டமும், நடத்த மாட்டேன்.
என்னுடைய வருமானத்தையும், என்னுடைய தொழிலையும், வெளிப்படையாக இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கணக்கு காட்டுவேன். மீறி ஏதாவது பினாமி, மீது சொத்துக்கள் வாங்கினாலோ, அல்லது வெளிநாடுகளிலோ, வெளி மாநிலங்களிலோ முதலீடு செய்தாலும், அதை அரசாங்கம் சட்டப்படி நடவடிக்கை எடுத்து பறிமுதல் செய்ய நான் சம்மதிக்கிறேன்.
இந்த உறுதிமொழி பத்திரத்தில் கொடுக்கப்பட்டுள்ள அத்தனையும், என் மனசாட்சி படி நான் எழுதிக் கொடுக்கிறேன் என்ற தேர்தல் ஆணையம் ஒவ்வொரு வேட்பாளர்கள் தேர்தலுக்கு மனு அளிக்கும் போது, இதை அவர்களிடமிருந்து எழுதி வாங்க வேண்டும் இந்திய தேர்தல் ஆணையம் இதை செய்வார்களா?
